என் மலர்
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 134 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 206-ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 134 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 206-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 ஆயிரத்து 737 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800-ஆக உயர்ந்தது. 669 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 41 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 908-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 217 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 450-ஆக உயர்ந்துள்ளது. 241 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி டிக்கெட் விற்ற நபரை கைது செய்தனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம், ராட்டிண கிணறு மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக தொடர்ந்து போலீசாருக்கு தகவல் வந்த வண்ணம் இருந்தது. லாட்டரி சீட்டு விற்பனையை முழுமையாக தடை செய்யும் நோக்கத்துடன் அடிக்கடி போலீசார் ரோந்துப்பணியில் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அது போல நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்ட போது செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 40) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் லாட்டரி சீட்டு விற்றது உறுதி செய்யப்பட்டது.
மேலும் லாட்டரி சீட்டு எண்கள் அடங்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ரமேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பாவேந்தர் சாலை பகுதியை சேர்ந்தவர் யமுனா (வயது 65), இவர் நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைக்க முயன்றார்.
லைட்டர் சரியாக வேலை செய்யாததால், ஞாபக மறதியால் கியாஸ் அடுப்பை ஆப் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டு வீட்டில் இருந்து வத்தீப்பெட்டியை எடுத்து வந்து பற்ற வைத்தார். ஏற்கனவே கியாஸ் கசிந்து வீடு முழுவதும் பரவி இருந்ததால் பயங்கரமாக தீப்பிடித்து கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதில் படுகாயம் அடைந்த யமுனாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி யமுனா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை தாம்பரத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
தாம்பரம்:
சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தற்போது 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவரை தொடர்ந்து ஆசிரியை உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ஒரே பள்ளிக்கூடத்தில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சக ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த பள்ளியில் ஆய்வு செய்தனர். தாம்பரம் நகராட்சி சுகாதார ஊழியர்கள் பள்ளி முழுவதும் கிரிமிநாசினி தெளித்து நோய்த்தொற்று பரவாமல் நடவடிக்கை எடுத்தனர்.
3 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் நேற்று முதல் அந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மீண்டும் 22-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளி திறக்கப்படும் என பள்ளியின் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
இதைதொடர்ந்து பள்ளியில் பணியாற்றும் மற்ற ஆசிரியர்-ஆசிரியைகள் மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட 80 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேடவாக்கத்தில் காதலன் இறந்த துக்கம் தாங்காமல் கல்லூரி மாணவி தற்கொலை செய்த சம்பவம் மேடவாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த மேடவாக்கம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 19). இவரது சொந்த ஊர் ஆரணி ஆகும். இவர், சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காகவே மேடவாக்கத்தில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கி, கல்லூரிக்கு சென்று வந்தார்.
சரஸ்வதி, தனது சொந்த ஊரில் உறவுக்கார வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர், கடந்த 10 நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அவரது இறுதிச்சடங்குக்காக சொந்த ஊருக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் சரஸ்வதி மீண்டும் சென்னையில் உள்ள அக்காள் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை சரஸ்வதி, தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது அக்காள் மற்றும் குடும்பத்தினர் இதுபற்றி பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தூக்கில் தொங்கிய சரஸ்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் காதலன் இறந்த துக்கம் தாங்காமல் சரஸ்வதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகவும், எனினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? எனவும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 862 ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 862 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 ஆயிரத்து 567 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 796 ஆக உயர்ந்தது. 499 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 808 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 168 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 449 பேர் உயிரிழந்துள்ளனர். 191 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்த நிலையில் செங்கல்பட்டு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆத்ரஸ் பச்சேரா தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு ரெயில் நிலையம், பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிளில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டு கரிமேடு பகுதியை சேர்ந்த விக்கி (வயது25) என்பவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து 17 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றி செங்கல்பட்டு தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த பழைய பல்லாவரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகர்(வயது 24). மாற்றுத்திறனாளி. நேற்று முன்தினம் இவரது பெற்றோர் துக்க நிகழ்ச்சிக்காக வெளியே சென்று விட்டனர். திரும்பி வரும்போது குளிப்பதற்கு வெந்நீர் போட்டு வைக்குமாறு மனோகரிடம் கூறிவிட்டு சென்றனர்.
துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, தங்கள் மகன் மனோகர், இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வெந்நீர் போடுவதற்காக சுவிட்சை ஆன் செய்தபோது, மின்சாரம் தாக்கி மனோகர் இறந்தது தெரியவந்தது. இதுபற்றி பல்லாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வெங்கம்பாக்கம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னை தாம்பரம் அடுத்த வெங்கம்பாக்கம், திருவேங்கடபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சேகர். இவர், சேலையூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மகரஜோதி. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், மகரஜோதியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர். இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தமிழக அரசியலில் எதிரெதிர் துருவமாக இருக்கும் பாமக- விடுதலை சிறுத்தைகள் கட்சி நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்துகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில் சிறந்த சுற்றுலா தலமான மாமல்லபுரம், புகழ்பெற்ற அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில் மற்றும் வேதகிரீஸ்வரர் திருக்கோவில், திருவிடந்தை ஆதிவராக பெருமாள், மாமல்லபுரம் தலசயண பெருமாள் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆலயங்கள் உள்ளன.
வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஓ.எம்.ஆர்., இ.சி.ஆர். பகுதிகளும் இந்த தொகுதியில்தான் உள்ளன.
திருப்போரூர் தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 93 ஆயிரத்து 251. இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 43 ஆயிரத்து 556 பேர். பெண் வாக் காளர்கள் 1 லட்சத்து 49 ஆயிரத்து 658 பேர், மூன்றாம் பாலினத்தவர் 37 பேர். தொகுதியில் பெண் வாக்காளர்கள் அதிகம்.
தொகுதியில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய 50 கிராம ஊராட்சிகளும், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய 34 கிராம ஊராட்சிகளும், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் பேரூராட்சிகளும் உள்ளன.
இங்கு ஆதிதிராவிடர்கள், வன்னியர்கள் சம அளவிலும் முதலியார்கள், மீனவர்கள், யாதவர்கள், நாயுடு, ரெட்டியார், இஸ்லாமியர், என பல தரப்பட்ட மக்களும் உள்ளனர். விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் 15 மீனவ குப்பங்களில் மீன்பிடித்தொழில் முக்கிய தொழிலாக உள்ளது.
திருப்போரூர் 1967-ல் தனி தொகுதியாக உருவாக்கப்பட்டது. பிரிக்கப்பட்டதும் முதன் முறையாக 1967-ல் தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட முனுஆதி வெற்றிபெற்றார். இதுவரை இங்கு நடைபெற்ற 13 தேர்தல்களில் 7 முறை தி.மு.க.வும், 5 முறை அ.தி.மு.க.வும், 1 முறை பா.ம.க.வும் வெற்றி பெற்றுள்ளன.
இதில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோதண்டபாணி வெற்றிபெற்றார். பின்னர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வைச்சேர்ந்த செந்தில் (எ) இதயவர்மன் வெற்றி பெற்றார்.
கோரிக்கைகள்
சர்வதேச சுற்றுலாதலமாக மாமல்லபுரத்தை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதிமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். பல்லவர் கால சிற்பங்கள் கடற்கரை கோயில், பல்லவர் கால வரலாற்றுச் சிறப்புகள் ஆகியவற்றை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். இங்கு பெரிய அளவில் பஸ் நிலையம் மற்றும் அதற்கான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை.
சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றி அதற்கான பல்வேறு சிறப்பு அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். மேலும் இங்கு சிற்பத்தொழில் முக்கியதொழிலாக உள்ளது. சிற்ப பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இதுவரை அத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
கிழக்கு கடற்கரைசாலையில் உள்ள மீனவ குப்பங்கள் கடல்சீற்றம், புயல், மழை, கடல் அரிப்பால் பாதிக்கப்படு கின்றன. இப்பகுதி யில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டி மீனவ பகுதிமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் மீன்பதப்படுத்தும் கூடங்கள் அமைக்கவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
தொகுதியில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளதால் விவசாயத்தை மேம்படுத்தவும், விவசாயிகளுக்கு உதவ அரசு பல்வேறு திட்டங்களையும் கொண்டு வர வேண்டும். காய்கறிகளை பதப்படுத்த கிடங்கு மற்றும் நெல் கொள்முதல் நிலை யம் அமைக்க வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரி தண்ணீர் வீணாகாமல் தடுத்து நடவடிக்கை மேற்கொண்டு விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக இருக்கின்றன.
திருப்போரூர் பகுதியில் நீதிமன்றம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது. மேலும் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர் பார்ப்பில் உள்ளனர்.
அதிமுக கூட்டணியில் திருப்போரூர் தொகுதி பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் திருக்கச்சூர் கி.ஆறுமுகம் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
2019 இடைத்தேர்தல்
இதயவர்மன் (தி.மு.க.)- 1,03,248
ஆறுமுகம் (அ.தி.மு.க.)- 82,235
கோதண்டபாணி (அ.ம.மு.க.)-11,936
மோகனசுந்தரி (நாம் தமிழர்)- 9,910
மக்கள் நீதி மய்யம்- 6,039
நோட்டா- 2243
இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:
1967- முனுஆதி (தி.மு.க.)
1971- முனுஆதி (தி.மு.க.)
1977- சொக்கலிங்கம் (தி.மு.க.)
1980- சொக்கலிங்கம் (தி.மு.க.)
1984- தமிழ்மணி (அ.தி.மு.க.)
1989- டாக்டர். திருமூர்த்தி (தி.மு.க.)
1991- தனபால் (அ.தி.மு.க.)
1996- சொக்கலிங்கம் (தி.மு.க.)
2001- கணிதாசம்பத் (அ.தி.மு.க.)
2006- மூர்த்தி (பா.ம.க)
2011- தண்டரை மனோகரன் (அ.தி.மு.க.)
2016- கோதண்டபாணி (அ.தி.மு.க.)
2019- செந்தில் (எ) இதயவர்மன் (தி.மு.க.) (இடைத்தேர்தல்)
வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், கடப்பேரி பகுதியை சேர்ந்தவர் சூரிய முருகன். இவருடைய மனைவி சக்திபிரியா (வயது 30). இவர், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சக்திபிரியா, தனது வீட்டில் 3 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சக்திபிரியாவை பிடித்து தாம்பரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாம்பரம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு-காஞ்சீபுரம்-அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு:
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில் பாதை அமைக்கும் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது. எனவே சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு-காஞ்சீபுரம்-அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பராமரிப்பு பணி நடைபெறும் மேற்கண்ட நாட்களில் மின்சார ரெயில் சேவை நேரம் மாற்றப்பட்டு, பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் புதிய கால அட்டவணை உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3.50 மணி முதல் இரவு 11.59 மணி வரையிலும், தாம்பரத்தில் இருந்து 3.55 மணி முதல் இரவு 11.59 மணி வரையிலும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் 80 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும். இந்த புதிய திருத்தப்பட்ட புறநகர் சிறப்பு ரெயில்களுக்கான கால அட்டவணை நாளை முதல் 19-ந்தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.