என் மலர்
செங்கல்பட்டு
மூதாட்டியை கழுத்தை இறுக்கி கொலை செய்த வழக்கில் வீட்டு வேலைக்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
செங்கல்பட்டு:
சென்னை அண்ணா நகர் காந்தி ரோட்டை சேர்ந்தவர் யுவான் பெர்னாண்டர் (வயது 70). இவரது வீட்டில் சென்னை பல்லாவரம், கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்த சிவகுமார் (41) வீட்டு வேலை செய்து வந்தார்.
கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம்யுவான் பெர்னாண்டர் வீட்டில் சிவகுமார் ரூ. 2 ஆயிரத்து 70 திருடியதாக தெரிகிறது. இதை கையும் களவுமாக பிடித்த யுவன் பெர்னாண்டர் இது குறித்து சங்கர்நகர் போலீசில் புகார் செய்தார்.
சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சிவகுமார், யுவான் பெர்னாண்டரை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த 30-6-2012 அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவகுமார் நைலான் கயிற்றால் மூதாட்டி யுவான் பெர்ணான்டரின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
இது தொடர்பாக சங்கர் நகர் போலீசார் சிவகுமாரை கைது செய்து செங்கல்பட்டு மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வசந்த லீலா, சிவகுமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பில் வக்கீல் சதீஷ்குமார் பாபு ஆஜரானார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 250 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,86,673 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 250 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,330 ஆக உயர்ந்துள்ளது.

மாமல்லபுரம் கடற்கரையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மணல் சிற்பம் அமைக்கப்பட்டது. சுற்றுலா வந்த பயணிகள் பலர் இந்த மணல் சிற்பத்தை பார்த்து ரசித்தனர்.
மாமல்லபுரம்:
தமிழக சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு வகையில் நாடகங்கள், பாடல்கள் மூலம் தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது.
100 சதவீத வாக்களிப்பு மற்றும் ஓட்டு போடபணம் வாங்கக்கூடாது; இலவசங்களுக்கு விலைபோகக்கூடாது என்ற கருத்தை மையமாக வைத்து மாமல்லபுரம் அபிராமி யேகாலயம் மாணவர்கள் மாமல்லபுரம் கடற்கரையில் மணல் சிற்பம் வடிவமைத்து சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறந்து வைத்தனர். சுற்றுலா வந்த பயணிகள் பலர் இந்த மணல் சிற்பத்தை பார்த்து ரசித்தனர்.
பஸ் மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் காந்திநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 39), இவரது மனைவி பேபி (37), மகன் தருண் (7). 2-ம் வகுப்பு படித்து வந்தான்.
இவர்கள் அனைவரும் பங்குனி உத்திர விழாவையொட்டி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு நடந்தே சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
இந்த நிலையில், வண்டலூர்- வாலாஜாபாத் சாலை படப்பை அருகே உள்ள காரணிதாங்கல் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ் பேபி மற்றும் தருண் மீது மோதியது.
இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இது குறித்து ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக படப்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் தருண் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
காயமடைந்த பேபி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மேல் மணப்பாக்கம் மேலச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 55). இவர், தனது நண்பர் சுந்தரத்துடன் உத்திரமேரூர் அடுத்த பழைய சீவரம் என்ற இடத்தில் வைக்கோல் வாங்கி மாட்டு வண்டியில் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது திடீரென பாபு மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக பலியானார்.
இது குறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 205 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 189-ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 205 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 189-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 53 ஆயிரத்து 184 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 808-ஆக உயர்ந்தது. 1197 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 76 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 211-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 393 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 455-ஆக உயர்ந்துள்ளது. 363 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதி மீண்டும் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், தே.மு.தி.க. சார்பில் அனகை முருகேசன் போட்டியிடுகின்றனர்.
தி.மு.க. வேட்பாளர் இ. கருணாநிதி சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 48,000
2. அசையும் சொத்து- ரூ. 37,06,750
3. அசையா சொத்து- ரூ. 30,00,000
அதி.மு.க. வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 15,000
2. அசையும் சொத்து- ரூ. 84,61,044.47
3. அசையா சொத்து- ரூ. 3,84,46,564
சென்னை விமான நிலையம் உள்ளிட்ட மிக முக்கிய இடங்கள் பலவற்றை கொண்டது பல்லாவரம் தொகுதி. முதலில் ஆலந்தூர் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்த பல்லாவரம் 2011-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டது.
திருநீர்மலை ரங்கநாதப் பெருமாள், குரோம்பேட்டை குமரன் குன்றம் முருகன் கோவில், புறநகர் பகுதியில் பெரிய அரசு மருத்துவமனை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை இந்த தொகுதியில் அமைந்துள்ளது.

பல்லவபுரம் நகராட்சி, பம்மல் நகராட்சி, அனகாபுத்தூர் நகராட்சி, திருநீர்மலை பேரூராட்சி, பொழிச்சலூர் ஊராட்சி, திரிசூலம் ஊராட்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி உள்ளது.
பல்லாவரம் தொகுதியில் உள்ள நாகல்கேணி பகுதியில் ஏராளமான தோல் தொழிற்சாலைகள் ஆடை ஏற்றுமதி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
2011-ம் ஆண்டு தொகுதி சந்தித்த முதல் தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நேரடியாக போட்டியிட்டது. இதில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதுபோல் 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அ.தி.மு.க., தி.மு.க. நேரடியாக போட்டியிட்டது. இதில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதனால் இந்த தொகுதியை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலா ஒரு முறை கைப்பற்றி இருக்கிறது.
பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் தாழ்த்தப்பட்டோர் 28 சதவீதம் பேர், வன்னியர்கள் 18 சதவீதம் பேர், சிறுபான்மையினர் 15 சதவீதம் பேர், பிராமணர்கள் 12 சதவீதம் பேர், முதலியார்கள் 6 சதவீதம் பேர், நாடார்கள் 5 சதவீதம் பேர் உள்ளனர்.
இந்த தொகுதியில் வெற்றியை நிர்ணயிப்பது தாழ்த்தப்பட்ட வாக்காளர்கள் ஆவர்.
இந்த தேர்தலில் தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதி மீண்டும் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், தே.மு.தி.க. சார்பில் அனகை முருகேசன் போட்டியிடுகின்றனர்.
பல்லாவரம் தொகுதியில் 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ராதா நகர் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
திருநீர்மலை பெரிய ஏரி, வீரராகவன் ஏரி ஆகியவற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்து தொகுதியின் குடிநீர் ஆதாரமாக இதை மாற்ற வேண்டும்.
தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லாவரம், குன்றத்தூர் சாலையை விரிவு படுத்த வேண்டும் என்பது தொகுதியில் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.
பல்லாவரம் தாம்பரம் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உருவாக்க வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
பல்லாவரம் பகுதியை சுற்றி 10&க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் உள்ளன. இதில் இரண்டு மட்டுமே சரி செய்யப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் இப்பகுதியில் செயல்படுத்தினாலும் ஏரிகளில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படவில்லை.

குரோம்பேட்டை ரெயில் நிலைய நுழைவு வாயிலான ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்த வேண்டும். தாம்பரம் நகராட்சி மற்றும் பல பேரூராட்சிகளில் உள்ளது போல் இதுவரை பல்லாவரத்தில் சமுதாயக்கூடம் அமைக்கப்படவில்லை. சென்னையில் உள்ளது போல் இந்தப் பகுதியில் உள்ள இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க சர்வதேச அளவில் விளையாட்டுத் திடல் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
பழைய பல்லாவரம் பகுதியில் உள்ள சுமார் ஆறு வார்டுகள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வருவதாக கூறுவதால் நீண்ட காலமாக இந்தப் பகுதியில் உள்ள மக்கள் புதிய வீடு கட்டவோ நிலங்களை விற்பனை செய்யவோ முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்கான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த தொல்லியல் துறை தொடர்பான பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
பல்லாவரத்தில் பழமையான வெள்ளிக் கிழமைகளில் செயல்படும் வார சந்தையை நெறிப்படுத்தி போக்குவரத்து நெரிசல் இல்லாமல் அமைக்க வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கையாகும்.
வாக்காளர்கள்
மொத்தம்- 4,35,837
ஆண்கள்- 216787
பெண்கள்- 219009
மூன்றாம் பாலினம்- 41
அ.தி.மு.க. சார்பில் கஜேந்திரன், தி.மு.க சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், அ.ம.மு.க. சார்பில் சதீஷ்குமார் களத்தில் உள்ளனர்.
வாக்காளர்கள்- 4,26,535
ஆண்கள்- 2,09,611
பெண்கள்- 2,16,868
மூன்றாம் பாலினம்- 56
அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 20,000
2. அசையும் சொத்து- ரூ. 1,99,07,777
3. அசையா சொத்து- ரூ. 25860640
திமுக வேட்பாளர் வரலட்சுமி சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 1,50,000
2. அசையும் சொத்து- ரூ. 85,32,527
3. அசையா சொத்து- ரூ. 11,97,22,822
பன்னாட்டு தொழிற்சாலைகள் அடங்கிய தொழில் வளம் மிக்க தொகுதி செங்கல்பட்டு. மகேந்திரா வேல்டு சிட்டி, மறைமலைநகர் தொழில் பேட்டை என பல்வேறு தொழிற்சாலைகள் இங்கு நிறைந்துள்ளன. இதன் புதிய மகுடமாக வண்டலூர் கிளாம்பாக்கம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

1957-ம் ஆண்டு செங்கல்பட்டு தொகுதி உருவானது. காஞ்சீபுரம் மாவட்டம் அமைவதற்கு முன்பு செங்கல்பட்டு நகரை தலைமை இடமாக கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வந்தது. 2019-ல் இருந்து மீண்டும் செங்கல்பட்டை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.

கார் உற்பத்தி தொழிற்சாலைகள், வாகன உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை அதிக அளவு நிறைந்திருக்கின்றன. செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் பாலாறு பாயும் இடங்களில் அதிக அளவு விவசாயம் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் வன்னியர், முதலியார், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவு உள்ளனர்.

செங்கல்பட்டு நகரத்திற்கு பொழுது போக்கு பூங்கா, பாதாள சாக்கடைத் திட்டம், செங்கல்பட்டு நகர சாலை விரிவாக்கம், கொளவாய் ஏரி படகு போக்குவரத்து சுற்றுலாத்தளம் அமைத்தல் போன்ற அத்தியாவசியத் தேவைகள் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளன. தொகுதிக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கபெருமாள்கோயில் போன்ற இடங்களில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.
கடந்த 1957-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த தேர்தலில், தி.மு.க. 6 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், பா.ம.க. 2 முறையும், காங்கிரஸ் 1 முறையும், தே.மு.தி.க. 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

செங்கல்பட்டு தொகுதியில் கால்நடை ஆராய்ச்சி மருத்துவமனை, பெண்கள் கலை மற்றும் அறிவியில் கல்லூரி அமைக்க வேண்டும். சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் புறவழிச் சாலையில் செங்கல்பட்டில் நிற்காமல் கடந்து செல்கிறது.

புறவழிச்சாலையில் பேருந்து நிலையம் அமைத்து பேருந்துகள் நின்று செல்ல உடனடியாக தீர்வுகாண வேண்டும் என்பது தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.
ஒரு பக்கம் தொழில்கள் நிறைந்து இருந்தாலும் விவசாயமும் இந்த தொகுதியில் அதிகமாக நடைபெறுகிறது. ஆனால் நீராதாரம் மேம்பாடு இல்லை. இதற்கு உரிய தீர்வுகளை காணவேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.

1957- முத்துசாமி நாயக்கர் (காங்கிரஸ்)
1962- சி.ஜி. விஸ்வநாதன் (தி.மு.க.)
1967- சி.ஜி. விஸ்வநாதன் (தி.மு.க.)
1971- சி.ஜி. விஸ்வநாதன் (தி.மு.க.)
1977- ஆனூர் ஜெகதீசன் (அ.தி.மு.க.)
1980- ஆனூர் ஜெகதீசன் (அ.தி.மு.க.)
1984- ஆனூர் ஜெகதீசன் (அ.தி.மு.க.)
1989- வீ. தமிழ்மணி (தி.மு.க.)
1991- சே.து. வரதராஜன் (அ.தி.மு.க.)
1996 - வீ. தமிழ்மணி (தி.மு.க.)
2001 - கே.ஆறுமுகம் (பா.ம.க)
2006 - கே.ஆறுமுகம் (பா.ம.க)
2011 - அனகை முருகேசன் (தே.மு.தி.க.)
2016 - வரலட்சுமி மதுசூதனன் (தி.மு.க.)
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எல்லா திட்டங்களையும் தமிழகத்திலேயே நிறுவி வாழ்வதற்கு வாய்ப்பற்ற நிலையை உருவாக்கி விட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
திருப்போரூர்:
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பஸ் நிலையம் எதிரே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்போரூர் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோகன சுந்தரியை ஆதரித்து திறந்த வேனில் நின்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எல்லா திட்டங்களையும் தமிழகத்திலேயே நிறுவி வாழ்வதற்கு வாய்ப்பற்ற நிலையை உருவாக்கி விட்டார்கள். 2½ ஆண்டுகளுக்கு மேல் அணு உலைக்கு எதிராக போராடி இன்னும் முடியவில்லை. போராட்டத்தின்போது 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி என்று மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட கழிவுகளை கடலில் கொட்டுவதால் மிக பெரிய பாதிப்பை சந்திக்கிறோம்.
கல்பாக்கம் அணு உலை காரணமாக 14 கிராமங்களில் பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு இருந்தால்தான் ஒரு இடத்தில் வாழ முடியும், பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் எப்படி வாழ்வது?.
அணுகுண்டு மேல் அமர்ந்திருப்பதும் அணுஉலை அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான். சீமானாகிய நான் சொல்லவில்லை விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். காற்றாலைகள் கடற்கரை ஓரம் வைப்பதை விட்டுவிட்டு விளையும் நிலங்களில் அமைக்கின்றனர். நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல் வேறு நாட்டில் இருந்து வாங்குகிறோம். உற்பத்தி செய்தால் கமிஷன் கிடைக்காது. தமிழக மக்கள் முதல்-அமைச்சர்களை தேர்வு செய்வதில்லை. சாராய ஆலை அதிபர்களை தேர்வு செய்கிறீர்கள். மத்திய அரசு எல்லாவற்றையும் தனியார் மயமாக்குகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 805- ஆக உயர்ந்தது. 909 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 149 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 ஆயிரத்து 904 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 805- ஆக உயர்ந்தது. 909 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 51 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 31- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 294 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 451 பேர் உயிரிழந்துள்ளனர். 286 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 126 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 469 ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 126 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 469 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 ஆயிரத்து 849 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 803 ஆக உயர்ந்தது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 980 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 254 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 451 பேர் உயிரிழந்துள்ளனர்.
கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் 10-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55), இவர் வண்டலூரில் தனியார் நிறுவனத்தில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வண்டலூர் செல்வதற்காக கூடுவாஞ்சேரி மின்வாரியம் எதிரே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் கிருஷ்ணமூர்த்தி மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணமூர்த்தி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.