என் மலர்
செய்திகள்

மணல் சிற்பம்
மாமல்லபுரம் கடற்கரையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மணல் சிற்பம்
மாமல்லபுரம் கடற்கரையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மணல் சிற்பம் அமைக்கப்பட்டது. சுற்றுலா வந்த பயணிகள் பலர் இந்த மணல் சிற்பத்தை பார்த்து ரசித்தனர்.
மாமல்லபுரம்:
தமிழக சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு வகையில் நாடகங்கள், பாடல்கள் மூலம் தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது.
100 சதவீத வாக்களிப்பு மற்றும் ஓட்டு போடபணம் வாங்கக்கூடாது; இலவசங்களுக்கு விலைபோகக்கூடாது என்ற கருத்தை மையமாக வைத்து மாமல்லபுரம் அபிராமி யேகாலயம் மாணவர்கள் மாமல்லபுரம் கடற்கரையில் மணல் சிற்பம் வடிவமைத்து சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறந்து வைத்தனர். சுற்றுலா வந்த பயணிகள் பலர் இந்த மணல் சிற்பத்தை பார்த்து ரசித்தனர்.
Next Story






