என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    பஸ் மோதி சிறுவன் பலி

    பஸ் மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் காந்திநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 39), இவரது மனைவி பேபி (37), மகன் தருண் (7). 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இவர்கள் அனைவரும் பங்குனி உத்திர விழாவையொட்டி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு நடந்தே சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

    இந்த நிலையில், வண்டலூர்- வாலாஜாபாத் சாலை படப்பை அருகே உள்ள காரணிதாங்கல் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ் பேபி மற்றும் தருண் மீது மோதியது.

    இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இது குறித்து ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக படப்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் தருண் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    காயமடைந்த பேபி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×