என் மலர்
செங்கல்பட்டு
மதுராந்தகம் அருகே தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. லட்சுமிபிரியா விசாரித்து வருகிறார்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கெண்ரச்சேரியைச் சேர்ந்தவர் சின்ராசு. மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வராணி (வயது 22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்கள் மதுராந்தகம் அடுத்த கெண்டிரச்சேரியில் குடியிருந்து வந்தனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகளும் 3 மாதத்தில் ஒரு மகனும் உள்ளனர். செல்வராணிக்கும் அவரது கணவருக்கும் பல நாட்களாக குடும்பத்தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து செல்வராணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தந்தை மதுராந்தகம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் அவரது உடலை கைப்பற்றி மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வராணிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் இது தொடர்பாக மதுராந்தகம் ஆர்.டி.ஓ. லட்சுமிபிரியா விசாரித்து வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 226 ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 304 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 226 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 54 ஆயிரத்து 912 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 833 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 481 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 137 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 234 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 30 ஆயிரத்து 157 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 464 பேர் உயிரிழந்துள்ளனர். 613 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 62.77 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 62.77 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-
சோழிங்கநல்லூர் - 46.60%
பல்லாவரம் - 55.18%
தாம்பரம் - 49.25%
செங்கல்பட்டு -63.50%
திருப்போரூர் - 58.00%
செய்யூர் (தனி) - 60.00%
மதுராந்தகம் (தனி) - 70.48%

செங்கல்பட்டில் பா.ம.க. பிரமுகரை வீடுபுகுந்து 7 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதுதொடர்பாக அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு ராமபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (வயது 32). இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நகர தலைவராக பதவி வகித்து வகித்தவர் ஆவார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் தனது வீட்டில் குடும்பத்தாருடன் சத்யா இருந்தபோது, காரில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்ட தொடங்கினர்.
அப்போது வீட்டில் இருந்தவர்கள் அச்சத்தில் அலறவே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டனர்.
இதனையடுத்து செங்கல்பட்டு டவுன் போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலத்த காயம் அடைந்த சத்யாவை மீட்டு, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்பகை காரணமாக சத்யாவை மர்ம கும்பல் கொலை செய்ய முயன்றதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வலைவீசி தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் 5 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்காளர்கள் ஓட்டு போடலாம்.
காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் 5 மணி நிலவரப்படி 50.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
சோழிங்க நல்லூர் - 46.60%
பல்லாவரம் - 53.52%
தாம்பரம் - 40.73%
செங்கல்பட்டு - 46.22%
திருப்போரூர் - 50.00%
செய்யூர் (தனி) - 80.27%
மதுராந்தகம் (தனி) - 49.05%

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 297 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 5 பேர் உயிரிழந்தனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 297 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 ஆயிரத்து 509-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 54 ஆயிரத்து 499 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 827-ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 183 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 124 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 58 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 993 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 464 -ஆக உயர்ந்துள்ளது. 601 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருக்கழுக்குன்றம் அருகே சமையல் செய்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் இளம்பெண் கருகி பலியானார்.
கல்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த எடையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி ஹேமலதா (30). தனது 2 மகன்களுடன் அதே ஊரில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி இரவு சமையல் அறையில் குழந்தைகளுக்கு சாப்பாடு செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய அவர் அலறி துடித்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருத்தேரியில் மது குடிக்கும் பழக்கத்தை கண்டித்ததால் விஷம் குடித்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவிலை அடுத்த திருத்தேரி குப்பை காரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 55). இவர் மறைமலைநகர் அடுத்த மகேந்திரா சிட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்த சுந்தரமூர்த்தி பூச்சி மருந்து (விஷம்) குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சுந்தரமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கல்பாக்கம் அருகே காதல் திருமணம் செய்த கொண்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கல்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் ஹாஜியார் நகரை சேர்ந்தவர் தினகரன் (வயது30). கார் டிரைவரான இவரது மனைவி யோகலட்சுமி (26) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
இதனால் யோகலட்சுமி மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார். இதனால் கடும் விரக்தியில் இருந்த அவர் கடந்த 1-ந்தேதி இரவு தன்னுடைய உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கல்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அச்சுத நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 285 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 ஆயிரத்து 176-ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 285 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 ஆயிரத்து 176-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 54 ஆயிரத்து 290 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 822 ஆக உயர்ந்தது. 2,064 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 141 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 959 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 938 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 462 ஆக உயர்ந்துள்ளது. 559 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தலில், 5 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் செங்கல்பட்டு மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார், யார்? என்பதை பார்ப்போம்.
.
சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ஓட்டல் உரிமையாளரை தாக்கிய 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
அச்சரப்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் தேன்பாக்கம் அருகே ஜி.எஸ்..டி. சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று மாலை வேனில் வந்த 16 பேர் சாப்பிட்டுள்ளனர். அவர்களிடம் ஓட்டல் ஊழியர்கள் சாப்பிட்டதற்கு பணம் கேட்டனர்.
அப்போது அவர்கள் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஓட்டல் ஊழியர்களுக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வேனில் வந்தவர்கள் ஓட்டல் ஊழியர்களையும், அதன் உரிமையாளரையும் சரமாரியாக தாக்கி விட்டு வேனில் தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசாருக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுராந்தகம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (29), நவீன்குமார் (27), பிரபாகரன், (26), பிரபு (33), பிரவீன்ராஜ் (21), பிரகாஷ் (36), தமிழரசன் (33), மூர்த்தி என்கிற சுந்தரமூர்த்தி (33), ஹரிராஜ் (33), நித்தியானந்தம் (29), நெல்லிமேடு பகுதியை சேர்ந்த வசந்தராஜ் (28), சுரேஷ் (28), ஓட்டேரியை சேர்ந்த சரவணன் (34), ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் (35) என்பது தெரியவந்தது.
இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் அவர்களை கைது செய்து மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.