என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    பல்லாவரம் தொகுதி
    X
    பல்லாவரம் தொகுதி

    பல்லாவரம் தொகுதி கண்ணோட்டம்

    தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதி மீண்டும் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், தே.மு.தி.க. சார்பில் அனகை முருகேசன் போட்டியிடுகின்றனர்.
    தி.மு.க. வேட்பாளர் இ. கருணாநிதி சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 48,000
    2. அசையும் சொத்து- ரூ. 37,06,750
    3. அசையா சொத்து- ரூ. 30,00,000

    அதி.மு.க. வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 15,000
    2. அசையும் சொத்து- ரூ. 84,61,044.47
    3. அசையா சொத்து- ரூ. 3,84,46,564

    சென்னை விமான நிலையம் உள்ளிட்ட மிக முக்கிய இடங்கள் பலவற்றை கொண்டது பல்லாவரம் தொகுதி. முதலில் ஆலந்தூர் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்த பல்லாவரம் 2011-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டது.

    திருநீர்மலை ரங்கநாதப் பெருமாள், குரோம்பேட்டை குமரன் குன்றம் முருகன் கோவில், புறநகர் பகுதியில் பெரிய அரசு மருத்துவமனை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை இந்த தொகுதியில் அமைந்துள்ளது.

    பல்லாவரம் தொகுதி

    பல்லவபுரம் நகராட்சி, பம்மல் நகராட்சி, அனகாபுத்தூர் நகராட்சி, திருநீர்மலை பேரூராட்சி, பொழிச்சலூர் ஊராட்சி, திரிசூலம் ஊராட்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி உள்ளது.

    பல்லாவரம் தொகுதியில் உள்ள நாகல்கேணி பகுதியில் ஏராளமான தோல் தொழிற்சாலைகள் ஆடை ஏற்றுமதி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

    2011-ம் ஆண்டு தொகுதி சந்தித்த முதல் தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நேரடியாக போட்டியிட்டது. இதில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதுபோல் 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அ.தி.மு.க., தி.மு.க. நேரடியாக போட்டியிட்டது. இதில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதனால் இந்த தொகுதியை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலா ஒரு முறை கைப்பற்றி இருக்கிறது.

    பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் தாழ்த்தப்பட்டோர் 28 சதவீதம் பேர், வன்னியர்கள் 18 சதவீதம் பேர், சிறுபான்மையினர் 15 சதவீதம் பேர், பிராமணர்கள் 12 சதவீதம் பேர், முதலியார்கள் 6 சதவீதம் பேர், நாடார்கள் 5 சதவீதம் பேர் உள்ளனர்.

    இந்த தொகுதியில் வெற்றியை நிர்ணயிப்பது தாழ்த்தப்பட்ட வாக்காளர்கள் ஆவர்.

    இந்த தேர்தலில் தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதி மீண்டும் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், தே.மு.தி.க. சார்பில் அனகை முருகேசன் போட்டியிடுகின்றனர்.

    பல்லாவரம் தொகுதியில் 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ராதா நகர் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

    திருநீர்மலை பெரிய ஏரி, வீரராகவன் ஏரி ஆகியவற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்து தொகுதியின் குடிநீர் ஆதாரமாக இதை மாற்ற வேண்டும்.

    தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லாவரம், குன்றத்தூர் சாலையை விரிவு படுத்த வேண்டும் என்பது தொகுதியில் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.
    பல்லாவரம் தாம்பரம் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உருவாக்க வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

    பல்லாவரம் பகுதியை சுற்றி 10&க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் உள்ளன. இதில் இரண்டு மட்டுமே சரி செய்யப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் இப்பகுதியில் செயல்படுத்தினாலும் ஏரிகளில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படவில்லை.

    பல்லாவரம் தொகுதி

    குரோம்பேட்டை ரெயில் நிலைய நுழைவு வாயிலான ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்த வேண்டும். தாம்பரம் நகராட்சி மற்றும் பல பேரூராட்சிகளில் உள்ளது போல் இதுவரை பல்லாவரத்தில் சமுதாயக்கூடம் அமைக்கப்படவில்லை. சென்னையில் உள்ளது போல் இந்தப் பகுதியில் உள்ள இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க சர்வதேச அளவில் விளையாட்டுத் திடல் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

    பழைய பல்லாவரம் பகுதியில் உள்ள சுமார் ஆறு வார்டுகள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வருவதாக கூறுவதால் நீண்ட காலமாக இந்தப் பகுதியில் உள்ள மக்கள் புதிய வீடு கட்டவோ நிலங்களை விற்பனை செய்யவோ முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்கான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த தொல்லியல் துறை தொடர்பான பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

    பல்லாவரத்தில் பழமையான வெள்ளிக் கிழமைகளில் செயல்படும் வார சந்தையை நெறிப்படுத்தி போக்குவரத்து நெரிசல் இல்லாமல் அமைக்க வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கையாகும்.

    வாக்காளர்கள்

    மொத்தம்- 4,35,837
    ஆண்கள்- 216787
    பெண்கள்- 219009
    மூன்றாம் பாலினம்- 41
    Next Story
    ×