என் மலர்tooltip icon

    அரியலூர்

    • ஜெயங்கொண்டம் போக்குவரத்து பணிமனையில் தீ தொண்டு வார விழா நடைபெற்றது
    • தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீ தடுப்பு செயல்முறை விளக்கமும் போலி ஒத்திகை பயிற்சியும் செய்து காண்பிக்கப்பட்டது

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சார்பில் ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தீ தொண்டு நாளை முன்னிட்டு பணிமனை பணியாளர்கள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீ தடுப்பு செயல்முறை விளக்கமும் போலி ஒத்திகை பயிற்சியும் செய்து காண்பிக்கப்பட்டது.

    பின்பு தீ தடுப்பு துண்டு பிரச்சுரங்கள் வழங்கப்பட்டு, தீப்பிடித்த வீட்டில் இருந்து உள்ளே இருப்பவர்களை எவ்வாறு வெளியே கொண்டு வருவது, எரிவாயு சிலிண்டரில் தீப்பிடித்தால் எவ்வாறு அணைப்பது, எண்ணெயில் ஏற்பட்ட தீயை எவ்வாறு அணைப்பது உள்ளிட்டவைகள் பற்றி செயல்முறை விளக்கத்துடன் போலி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    • மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை அடித்துக் கொன்ற கணவர் கைது செய்யபட்டார்
    • போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் கோவில் எசனை கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 44). இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான விஜயகாந்த் (40) என்பவரது மனைவிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை அறிந்த விஜயகாந்த் மனோகரனை பலமுறை கண்டித்தார். ஆனால் அவர் தன்னை திருத்திக்கொள்ள வில்லை.இதற்கிடையே மனைவியும் திருந்தாததால் விஜயகாந்த் தனது மனைவியை பிரிந்தார்.

    கணவர் கைவிட்ட நிலையில் விஜயகாந்தின் மனைவி தனியார் தொலைக்காட்சி தொடரில் குடும்ப பிரச்சினையை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் மூலம் பிரிந்த தம்பதியினர் மீண்டும் சேர்ந்தனர். இதையடுத்து அவர்கள் சென்னையிலேயே வசித்து வந்தனர்.தற்போது பிரச்சினை தீர்ந்து விட்டதால், நாம் சொந்த ஊருக்கு செல்வோம் என்று கூறியதின் பேரில் மீண்டும் அவர்கள் எசனை கிராமத்திற்கு வந்தனர். இதனை அறிந்த மனோகரன் தனது வேலையை மீண்டும் காட்ட தொடங்கினார்.

    நேற்று முன்தினம் நள்ளிரவில் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்த அவர் விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். இருந்தபோதிலும் வீட்டில் தனியாக இருந்த விஜயகாந்த்தின் மனைவி கதவை திறக்கவில்லை. இதையடுத்து மனோகரன் அந்த வீட்டின் வாசலிலியே படுத்து தூங்கிவிட்டார். அதிகாலையில் இதைப்பார்த்த விஜயகாந்தின் தந்தை சின்னதுரை அவரை எழுப்பி, அவரது வீட்டில் கொண்டுபோய் விட்டார்.

    வேலை முடிந்து வீடு திரும்பிய விஜயகாந்த் இந்த சம்பவம் பற்றி அறிந்து கடும் ஆத்திரம் அடைந்தார். பின்னர் நேற்று மதியம் லாரி டயர் மாற்ற பயன்படுத்தும் லிவரை எடுத்து கொண்டு மனோகரனை தேடி உள்ளார். அப்போது மனோகரன் அதே கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் மதுபோதையில் படுத்து இருந்தார். அப்போது விஜயகாந்த் தான் வைத்து இருந்த லிவரால் அவரை தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் மனோகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வெங்கனூர் போலீசார் விறைந்து சென்று மனோகரன் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து விஜயகாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    • ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டினர்
    • அ.தி.மு.க.வின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கப்பட்டதற்கு தொண்டர்கள் வரவேற்பு கோஷங்கள் எழுப்பினர்

    ஜெயங்கொண்டம்:

    எடப்பாடி பழனிச்சாமியை இந்திய தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் பொது செயலாளராக அங்கீகரித்ததை வரவேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராம ஜெயலிங்கம் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சை, நகர செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் கல்யாண சுந்தரம், விக்ரம பாண்டியன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அ.தி.மு.க.வின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கப்பட்டதற்கு வரவேற்பு கோஷங்கள் எழுப்பியவாறு பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.


    • ஜெயங்கொண்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது
    • இதில் ஒன்றிய அலுவலக செலவினங்கள் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லதா கண்ணன் முன்னிலை வகித்தார். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் வரவேற்று பேசினார். கணக்கர் தாமோதரன் தீர்மானங்களை வாசித்தார். இதில் ஒன்றிய அலுவலக செலவினங்கள் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் இறவாங்குடி ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகர் பேசியதாவது: 6.75 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடையன் ஏரி மூலம் சுமார் 20 ஹெக்டர் விவசாய நிலம் சாகுபடி பெறுகிறது. இந்நிலையில் ஏரியின் மதகு சரி இல்லாத காரணத்தினால் தண்ணீர் வீணாகி விவசாயம் பாதிப்படைகிறது. இதனால் உடனே இந்த ஏரியை சரி செய்யுமாறு கோரிக்கை வைத்தார். இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விரைவில் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய மேலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

    • உடையார்பாளையம் அருகே ஏரியில் விழுந்து ஒருவர் பலியானார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெற்கு காலனிதெருவை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 42). இவரை நேற்று மதியம் முதல் காணவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனாலும் தங்கமுத்து பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் சின்ன வட்ட குளம் ஏரியில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக அந்தப் பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி உள்ளிட்ட போலீசார் தீயணைப்பு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போதுதான் பிணமாக கிடந்தவர் மாயமான தங்கமுத்து என்பது தெரியவந்தது. மேலும் இவர் மது போதையில் தவறி விழுந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்து வீசி விட்டார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    • ஆண்டிமடம் அருகே மது போதையில் மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது செய்யபட்டார்
    • இதுகுறித்து சத்யாவின் கணவர் ரங்கநாதன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விளந்தை அருகே உள்ள காலனி தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவரது எதிர்வீடடில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட மற்றொரு சமூகத்தை சேர்ந்த திருமணமான சத்யா (50) என்ற பெண்ணை மது போதையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.அந்தப் பெண் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து சத்யாவின் கணவர் ரங்கநாதன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி (ஆண்டிமடம் பொறுப்பு) ராஜேஷ் என்பவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சத்யா, ரங்கநாதனுக்கு கல்லூரி படிக்கும் வயதில் ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • இந்த நிகழ்வானது சுமார் 10 நிமிடம் வரை நீடித்தது.
    • இந்த அரிய காட்சியை காண ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்தனர்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆறு பாயும் காவிரி கரை ஓரத்தில் உள்ளது காரைக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட பழமையான ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் ஒவ் வொரு ஆண்டும் ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 20-ந்தேதியில் இருந்து 25-ந்தேதி வரை சிவலிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும்.

    இதனால் சூரிய பகவான் சிவனை இந்த தலத்தில் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆகஸ்டு மற்றும் ஏப்ரல் மாதத்தில் சூரிய பகவான் வலம் வந்து ஈசனை வழிபடுவதாக ஐதீகம்.

    அதன்படி இன்று காலை 6.10 மணியில் இருந்து 6.20 மணி வரைக்கும் சூரிய உதயமானது. அப்போது சூரியனிலிருந்து வெளிப்படும் பிரதிபலிக்கப்பட்ட ஒளிக்கதிரானது நேரிடையாக லிங்கத்தின் மீது பட்டு பொன்னொளியில் ஒளிர்ந்தது. இந்த நிகழ்வானது சுமார் 10 நிமிடம் வரை நீடித்தது.

    இந்த அரிய காட்சியை காண ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்தனர். சூரிய பகவான் சிவனை வழிபடுவதை பக்தர்கள் கண்டுகளித்து வழிபட்டு பரவசம் அடைந்தனர். இந்த அரிய நிகழ்வானது இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே நிகழலாம் என பக்தர்கள் தெரிவித்தனர்.

    • பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்
    • இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அரியலூர:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி வடக்கு தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 88). வயது மூப்பின் காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 3 மாதங்களாக விஸ்வநாதனுக்கு கை, கால் வலி அதிகமாக இருந்துள்ளது. இதனால் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்ைசக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த விஸ்வநாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


    • சிறுவளூர் அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதால், கிடைக்கும் பயன்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழி நெடுகிலும் விநியோகிக்கப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களை சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை, அரியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பள்ளி சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணியானது, மேள தாளங்களுடன், சிறுவளூர், நெருஞ்சிகோரை, பாலகிருஷ்ணாபுரம், புதுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்றது.

    குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதால், கிடைக்கும் பயன்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழி நெடுகிலும் விநியோகிக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா, துணை தலைவர் பழனியம்மாள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா ,கல்வி ஆர்வலர் கருணாநிதி, பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழுத் தலைவர் மனோகரன், ஊராட்சி செயலர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் பேரணியில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, ரமேஷ் ,கோகிலா, தங்கபாண்டி ,வீரபாண்டி கபிலஷா ஆகியோர் செய்திருந்தனர்.


    • அரியலூரில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • அகவிலைப்படி பொங்கல் போனஸ் ரூ.10,000-ம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது

    அரியலூர்:

    தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை, சாலை பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். உயிரிழந்த சாலைப் பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்ப வாரிசுகளுக்கு வேலை வழங்கிட வேண்டும். காலியாக உள்ள 7,500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    அகவிலைப்படி பொங்கல் போனஸ் ரூ.10,000-ம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மாநில பொதுச் செயலர் ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவர் முருகேசன், மாவட்டச் செயலர் தர்மராசு உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


    • 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தேவமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இளையராஜா. இவர் வெளிநாட்டில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். பின்னர் சொந்த ஊர் திரும்பிய அவர் தற்போது கழுவந்தோண்டி கிராமத்தில் இ-சேவை மையம் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.இவரது மனைவி அனிதா(வயது 30). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், 2 மாதத்தில் ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் சமீப காலமாக அனிதாவுக்கு தற்கொலை எண்ணம் வருவதாக கூறி புலம்பி வந்துள்ளார். தொடர்பாக அனிதாவின் பெற்றோர்களுக்கு, இளையராஜா தகவல் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து தனியார் மருத்துவரிடம் அனிதா அழைத்து செல்லப்பட்டு உள்ளார். மனநல மருத்துவம் அவருக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் தனது இ-சேவை மையத்திற்கு இளையராஜா செல்லும்போது, பள்ளி விடுமுறை காலம் என்பதால் தனது மகனையும் தன்னோடு இ-சேவை மையத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்.

    மீண்டும் மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டி பார்த்து திறக்காததால், சந்தேகம் அடைந்த இளையராஜா, ஜன்னலை உடைத்து பார்த்துள்ளார்.அப்போது அவரது மனைவி அனிதா வீட்டிற்குள் தூக்கு போட்டு தொங்கியதாக கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த இளையராஜா அக்கம் பக்கத்தினரை அழைத்து, அவர்கள் உதவியுடன் பின் பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் உடலை மீட்டுள்ளனர்.

    அங்கிருந்து ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து இளையராஜா தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், பிரேதத்தை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.


    • ரெட்டிபாளையத்தில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
    • கோவில்களுக்கு சொந்தமான 3.88 ஏக்கர் நிலங்களை அப்பகுதியில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை குடியிருப்பு பகுதியாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே ரெட்டிபாளையம் கிராமத்தில் விநாயகர் கோயில்,செல்லியம்மன் கோயில்,சொர்ணபுரீஸ்வரர் ஆகிய கோவில்களுக்கு சொந்தமான 3.88 ஏக்கர் நிலங்களை அப்பகுதியில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை குடியிருப்பு பகுதியாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதை அரியலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகராஜ், தனி வட்டாட்சியர் கலைவாணன் மற்றும் கோயில் செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் குடியிருப்பு பகுதியை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு பகுதி என உறுதி செய்தனர். இந்த நிலங்களை அளவீடு செய்த பின் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78ன் படி ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


    ×