என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை
- பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்
- இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரியலூர:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி வடக்கு தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 88). வயது மூப்பின் காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 3 மாதங்களாக விஸ்வநாதனுக்கு கை, கால் வலி அதிகமாக இருந்துள்ளது. இதனால் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்ைசக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த விஸ்வநாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






