என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூரில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- அரியலூரில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- அகவிலைப்படி பொங்கல் போனஸ் ரூ.10,000-ம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது
அரியலூர்:
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை, சாலை பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். உயிரிழந்த சாலைப் பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்ப வாரிசுகளுக்கு வேலை வழங்கிட வேண்டும். காலியாக உள்ள 7,500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
அகவிலைப்படி பொங்கல் போனஸ் ரூ.10,000-ம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மாநில பொதுச் செயலர் ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவர் முருகேசன், மாவட்டச் செயலர் தர்மராசு உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Next Story






