என் மலர்
நீங்கள் தேடியது "தீ தொண்டு வார விழா"
- ஜெயங்கொண்டம் போக்குவரத்து பணிமனையில் தீ தொண்டு வார விழா நடைபெற்றது
- தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீ தடுப்பு செயல்முறை விளக்கமும் போலி ஒத்திகை பயிற்சியும் செய்து காண்பிக்கப்பட்டது
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சார்பில் ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தீ தொண்டு நாளை முன்னிட்டு பணிமனை பணியாளர்கள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீ தடுப்பு செயல்முறை விளக்கமும் போலி ஒத்திகை பயிற்சியும் செய்து காண்பிக்கப்பட்டது.
பின்பு தீ தடுப்பு துண்டு பிரச்சுரங்கள் வழங்கப்பட்டு, தீப்பிடித்த வீட்டில் இருந்து உள்ளே இருப்பவர்களை எவ்வாறு வெளியே கொண்டு வருவது, எரிவாயு சிலிண்டரில் தீப்பிடித்தால் எவ்வாறு அணைப்பது, எண்ணெயில் ஏற்பட்ட தீயை எவ்வாறு அணைப்பது உள்ளிட்டவைகள் பற்றி செயல்முறை விளக்கத்துடன் போலி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.






