என் மலர்tooltip icon

    அரியலூர்

    • தூய்மையான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா உத்தரவிட்டார்
    • சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபா கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்திட வேண்டும் என்றார் ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    சுதந்திர தினத்தையொட்டி அரியலூர் அடுத்த வாலாஜா நகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ஆண்டுக்கு 6 முறை நடத்தப்படும் இக்கிராம சபைக் கூட்டத்தில், கிராம மக்கள் தங்களது பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை தெரிவித்து, நிவர்த்திக் கொள்ள வேண்டும். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும்.நெகிழிப் பொருள்கள அனைவரும் தவிர்க்க வேண்டும். சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்த்துக் கொள்ள வேண்டும் என்றார். மேலும், ஊராட்சி நிர்வாகம் இணையவழியிலேú மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்க வேண்டும். கிராம பகுதிகளில் தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதிப் படுத்த வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து ,இக்கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம் உள்ளிட்ட பொருள்கள் விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்சியர், பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இக்கூட்டத்துக்கு வாலாஜா நகரம் ஊராட்சித் தலைவர் அபிநயா இளையராஜா தலைமை வகித்தார். கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) பாலமுரளி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் (பொ) ஆறுமுகம், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், சுகாதார பணிகள் துணை இயக்குநர் அஜித்தா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் அன்பரசி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் கோவிந்தபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, அதன் தலைவர் மா.முருகேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அ.அம்பிகா முன்னிலை வகித்தார். எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் தலைவர் சிவா(எ)பரமசிவம் தலைமை வகித்தார். ஓட்டக்கோவில் ஊராட்சியில் தலைவர் செங்கமலை தலைமை வகித்தார். துணைத் தலைவர் ம.செல்வி முன்னிலை வகித்தார். தாமரைக்குளம் ஊராட்சியில் தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், இளைஞர் மன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் பகுதி கோரிக்கைகளை தெரிவித்தனர்.

    • அரியலூரில் சுதந்திரதின விழாவில் ரூ.1.56 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 77வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தேசியகொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

    அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 255 அதிகாரிகளுக்கு சான்றிதழ்களை அவர் வழங்கினார். பின்னர் ரூ.1.56 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிகளில் அரியலூர் எம்எல்ஏ வக்கில் கு.சின்னப்பா, மாவட்ட வருவாய்அலுவலர் கலைவாணி, மாவட்ட திட்ட அலுவலர் பாலமுரளி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்பூங்கோதை, கலெக்டர் அலுவலக மேலாளர் குமரைய்யா, ஆர்டிஓ அரியலூர் ராமகிருஷ்ணன், உடையார்பாளையம் பரிமளம், மருத்துவத்துறை துணைஇயக்குனர் அஜீதா, செய்திமக்கள் தொடர்பு அலுவலர்சுருளிபிரபு, உதவி அலுவலர் பிரபாகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், தீயணைப்பு அலுவலர்செந்தில்குமார், தாசில்தார் அரியலூர் கண்ணன், செந்துறை பாக்கியம்விக்டோரியா, ஆண்டிமடம் இளவரசன், ஜெயங்கொண்டம் துரை, யூனியன் கமிஷனர் அரியலூர் முத்துகுமார், அருளப்பன்,திருமானூர் ஜெயகுமாரி, பொய்யாமொழி, செந்துறை பிரபாகரன், ஜாகிர்உசேன்,ஜெயங்கொண்டம் செந்தில், முருகன், ஆண்டிமடம் ஸ்ரீதேவி, விஸ்வநாதன், தா.பழுர் நாராயணன்,

    அமிர்தலிங்கம், கூட்டுறவுத்துறை இணைபதிவாளர் தீபாசங்கரி, காவல்துறை சார்பில் மாவட்ட கூடுதல்கண்காணிப்பாளர் அந்தோணி, ஆரி, டிஎஸ்பி சங்கர் கணேஷ், ரவி ச்சந்திரன், வெங்கடேசன், சுரேஷ்குமார், உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர் களும், மக்கள்பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.சுதந்திரதினவிழா நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • அரியலூரில் வழக்கறிஞர்கள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • சட்டபிரிவுகளின் பெயர்களை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்

    அரியலூர்

    மத்திய அரசைக் கண்டித்து அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழங்குரைஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் பெயர்களை மாற்றம் மற்றும் திருத்தம் கொண்டு வர சட்ட மசோதாவை தாக்கல் செய்தது, தொடர்ந்து ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிப்பில் ஈடுபட்டு வரும் மத்திய அரசைக் கண்டித்தும், மேற்கண்ட சட்ட மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். இணைத் தலைவர் கதிரவன், செயலர் முத்துக்குமரன், அரசு வழக்குரைஞர்கள் கதிரவன், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

    • தூத்தூர் கிராமத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை எழுந்துள்ளது
    • அரியலூர் கலெக்டரிடம் விவசாய கூட்டமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்

    அரியலூர் 

    அரியலூர் மாவட்டம், தூத்தூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணாவிடம், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் கோரிக்கை மனு அளித்தார்.

    அவர் அளித்த மனுவில், திருமானூர் ஒன்றியம் தூத்தூர் மற்றும் குருவாடி கிராமத்தில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கோடை நவரை பட்டம் மற்றும் குருவை நெல் சாகுபடி செய்துள்ளனர்.

    இப்பகுதிகளில் தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால், தனியார் வியாபாரிகள் மற்றும் 18 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீபுரந்தான், கோவிந்தபுத்தூர், முத்துவாஞ்சேரி ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே, தூத்தூர் கிராமத்தில் தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • அரியலூரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    அரியலூர் 

    ஜெயங்கொண்டம் அடுத்த சின்னவளையம் அருகே திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், மாவட்ட குடிமைப் பொருள் புலனாய்வுத் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சுமை ஆட்டோவை மறித்து சோதனை மேற்கொ ண்டதில், அதில் 300 கிலோ ரேஷன் அரிசியும், 750 கிலோ உடைக்கப்பட்ட ரேஷன் அரிசியும் என மொத்தம் 1000 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், அதனை கடத்தி வந்ததது அரியலூர் மாவட்டம் நாகல்குழி, கீழத்தெருவைச் சேர்ந்த சோமு மகன் சங்கர் (வயது55), சங்கர் மனைவி வளர்மதி (42) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து ஜெய ங்கொண்டம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.

    • அரியலூரில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • முன்னாள் அரசு தலைமை கொறடாவும், மாவட்ட செயலாளருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார்

    அரியலூர்

    அரியலூர் தனியார் திருமணமண்டபத்தில் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம்நடைபெற்றது, முன்னாள் எம்பி இளவரசன், மாவட்ட தலைவர் இராமஜெயலிங்கம், இளைஞரணி துணைசெயலாளர்சிவசுப்பிரமணியன், மாவட்டஊராட்சி குழுதலைவர் சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் அன்பழகன்,மாவட்டது ணைசெயலாளர் தங்கபிச்சமுத்து, மாவட்ட அணிச்செயலாளர்கள் மாணவரணி சங்கர், இளைஞரணி சிவசங்கர்,மகளிரணி ஜீவா, சிறுபான்மை பிரிவு அக்பாஷெரிப், வக்கில்அணி வெங்கடாஜலபதி, தொழில்நுட்பபிரிவு சாமிநாதன், பாசறை பிரிவு ரீடுசெல்வம், ஒன்றியசெயலாளர்கள் செல்வராஜ், பாலு, தா.பழுர்அசோகன், வைத்தியநாதன், ஜெயங்கொண்டம் கல்யாணசுந்தரம், விக்கிரமபாண்டியன், ஆண்டிமடம் மருதமுத்து,திருமானூர் வடிவழகன், சாமிநாதன், ஊராட்சிமன்ற தலைவர்கள் பிரேம்குமார், சிவா, செங்கமலை, கூட்டுறவுபால் சொசைட்டி தலைவர் பாஸ்கர், நகரசெயலாளர்கள் செந்தில், செல்வராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன்பேசியதாவது, அதிமுகவின் எழுச்சி மாநாடு மதுரை மாநகரில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறவுள்ளது, அதிமுக பொது செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரைஆற்ற உள்ளார், மதுரையில் எம்ஜிஆர், ஜெயலலிதா மாநாடு நடத்தியுள்ளார்கள், அவற்றை எல்லாம்மிஞ்சும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள மாநாடு அமையவேண்டும். இது மாநாடு மட்டும்அல்ல நாளையும் நமதே, நாற்பதும் நமதே, நாடாளுமன்ற தேர்தல் வெற்றிவிழா மாநாடாக அமையவேண்டும் என்று அவர் பேசினார்.

    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக, 6 ஆயிரம் தேசிய கொடிகளை முன்னாள் ராணுவ வீரர்கள் வழங்கினர்
    • 30 அரசு பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது

    செந்துறை

    அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த தமிழக முன்னாள் படைவீரர்கள் வீரமங்கையர்கள் அமைப்பு மற்றும் சோழப் பேரரசின் போர் வீரர்கள் சார்பாக 6000 தேசிய கொடிகள் செந்துறை பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது

    மாவட்டத் தலைவர் செல்வம் தலைமையில் மாநில துணை தலைவர் பொய்யாமொழி அவர்கள் முன்னிலையில் ஒருங்கிணைப்பாளர் வேணு நிர்வாகிகள் கல்யாண சுந்தரம் ஆசைத்தம்பி முருகன் தமிழரசன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 6000 தேசிய கொடிகளை வழங்கினர். இந்திய நாட்டை காக்க எல்லையில் நின்று போராடிய முன்னாள் ராணுவ வீரர்கள் பள்ளி மாணவர்களிடையே தேசப்பற்றையும் தேசப் பாதுகாப்பு ஊட்டும் விதமாக ஒவ்வொரு மாணவர்களும் தங்களது இதயத்தில் தேசிய கொடியை அணிந்து இந்திய தேசத்தை வருங்கால தலைமுறை மாணவர்கள் முன் வருவார்கள் என்ற நம்பிக்கையில் தேசிய கொடியை பள்ளிகள் தோரும் சென்று வழங்கியதை ஆசியர்களும் மாணவர்களும் பாராட்டினர்.

    • அரியலூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் நாளை மூடப்படுகிறது
    • மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடம் ஆகிய அனைத்திற்கும் சுதந்திர தினத்தையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    • அரியலூரில் கடை வியாபாரியிடம் கத்தியைகாட்டி மிரட்டி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
    • கத்தியை காட்டி பணம் பறிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் தாகீர் உசேன் (வயது 40). இவர் உடையார்பாளையம் கடைவீதியில் இருசக்கர உதிரி பாகங்கள் மற்றும் பழுது நீக்கம் கடையை நடத்தி வருகிறார். இந்தநிலையில் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பஷீர் மகன் பக்ருதீன் (23), இவரது நண்பர்களான கார்த்திக் (24), அரவிந்த் (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து தாகீர் உசேனிடம் சென்று கத்தியை காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்தனர். மேலும் இதை யாரிடமாவது கூறினால் கொல்லாமல் விடமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாகீர் உசேன் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து உடையார்பாளையம் கடைவீதியில் நின்று கொண்டு இருந்த பக்ருதீன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரியலூரில் உச்சத்தில் இருந்த தக்காளி விலை தற்போது குறைந்து வருகிறது
    • தக்காளி விலை குறைந்து வருவதையொட்டி பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது

    அரியலூர் அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளிகளை விற்க நடவடிக்கை எடுத்தது. இருந்த போதிலும் தரமான தக்காளி கிடைக்காமலும், விலை அதிகமாக இருந்ததாலும் இல்லத்தரசிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சிரமம் அடைந்தனர். இந்தநிலையில் அரியலூரில் கடந்த ஒரு வாரமாக தக்காளியின் வரத்து அதிகமாக இருந்ததால் தக்காளி விலை படிப்படியாக குறைய தொடங்கியது. அரியலூர் வாரச்சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.30 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது.

    சிறிய அளவிலான தக்காளிகளை வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் வைத்து விற்பனை செய்தனர். இதேபோல் ரூ.150-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் உள்பட அனைத்து காய்கறிகளின் விலையும் படிப்படியாக குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று அரியலூரில் பெய்த லேசான மலையில் வாரச்சந்தையில் மழை நீர் தேங்கி வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இருந்தபோதும் பொதுமக்கள் மழையை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்த படி காய்கறிகளை வாங்கி சென்றனர்.

    • அரியலூர் பகுதியில் அலுமினிய எச்சரிக்கை, பெயர் பலகைகளை மர்ம கும்பல் திருடி சென்று விடுகிறது
    • நெடுங்சாலை துறையினர் அதிர்ச்சி

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருமானூர்-புள்ளம்பாடி, முடிகொண்டான் -கல்லக்குடி, கீழ காவட்டாங்குறிச்சி - கீழப்பழுவூர், திருமானூர் -ஏலாக்குறிச்சி ஆகிய சாலைகளில் வைக்கப்பட்ட ஊர் பெயர் பலகைகள், எச்சரிக்கை பலகைகள் சமீபத்தில் திருட்டுப் போனது. இதேபோன்று கிராம சாலைகளில் வைக்கப்பட்ட சிறிய எச்சரிக்கை பலகைகளும் காணாமல் போயினஆகவே அந்த இடங்களில் பலகை இல்லாமல் சட்டங்களாக அவை காட்சியளிக்கின்றன. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் தடுமாறும் நிலை ஏற்படுகிறது.இந்த எச்சரிக்கை மற்றும் பெயர் பலகைகள் அலுமினியத்தால் ஆனவை. இதனை மர்ம நபர்கள் குறிவைத்து திருடிச் செல்வது நெடுஞ்சாலை துறை மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருடர்கள் சிக்கவில்லை.தொடக்கத்தில் அந்த பெயர் பலகைகள் காணாமல் போனபோது காற்றில் விழுந்திருக்கலாம் என கருதப்பட்டது.ஆனால் பல்வேறு இடங்களில் மாயமானதால் இது திட்டமிட்ட திருட்டு என்பது உறுதி செய்யப்பட்டது.பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத, சி.சி.டி.வி. கேமரா வசதி இல்லாத ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் இந்த பலகைகள் திருடப்பட்டுள்ளது. மது போதை ஆசாமிகள் இது போன்ற திருட்டுகளில் ஈடுபடலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இந்த வகை திருட்டு புதுவிதமாக இருப்பதாக காவல்துறையினரும் நெடுஞ்சாலை துறையினரும் தெரிவித்தனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டுவதற்காக வைக்கப்படும் பெயர் பலகை மற்றும் எச்சரிக்கை பலகைகளை திருடி செல்வது அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.

    • வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டுவதற்காக வைக்கப்படும் பெயர் பலகை மற்றும் எச்சரிக்கை பலகைகளை திருடி செல்வது அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.
    • மதுபோதை ஆசாமிகள் திருட்டுகளில் ஈடுபடலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருமானூர்-புள்ளம்பாடி, முடி கொண்டான்-கல்லக்குடி, கீழ காவட்டாங்குறிச்சி-கீழப்பழுவூர், திருமானூர்-ஏலாக்குறிச்சி ஆகிய சாலைகளில் வைக்கப்பட்ட ஊர் பெயர் பலகைகள், எச்சரிக்கை பலகைகள் சமீபத்தில் திருட்டுப் போனது. இதேபோன்று கிராம சாலைகளில் வைக்கப்பட்ட சிறிய எச்சரிக்கை பலகைகளும் காணாமல் போயின ஆகவே அந்த இடங்களில் பலகை இல்லாமல் சட்டங்களாக அவை காட்சியளிக்கின்றன. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டி கள் வழி தெரியாமல் தடுமாறும் நிலை ஏற்படுகிறது.

    இந்த எச்சரிக்கை மற்றும் பெயர் பலகைகள் அலுமினியத்தால் ஆனவை. இதனை மர்மநபர்கள் குறிவைத்து திருடிச் செல்வது நெடுஞ்சாலை துறை மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருடர்கள் சிக்கவில்லை. தொடக்கத்தில் அந்த பெயர் பலகைகள் காணாமல் போனபோது காற்றில் விழுந்திருக்கலாம் என கருதப்பட்டது.

    ஆனால் பல்வேறு இட ங்களில் மாயமானதால் இது திட்டமிட்ட திருட்டு என்பது உறுதி செய்யப்பட்டது. பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத, சி.சி.டி.வி. கேமரா வசதி இல்லாத ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் இந்த பலகைகள் திருடப்பட்டுள்ளது. மதுபோதை ஆசாமிகள் இது போன்ற திருட்டுகளில் ஈடுபடலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இந்த வகை திருட்டு புதுவிதமாக இருப்பதாக காவல்துறையினரும் நெடுஞ்சாலை துறையினரும் தெரிவித்தனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டுவதற்காக வைக்கப்படும் பெயர் பலகை மற்றும் எச்சரிக்கை பலகைகளை திருடி செல்வது அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.

    ×