என் மலர்tooltip icon

    அரியலூர்

    • பிடாரி ஏரியில் கழிவுநீர் கலப்பதால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • ஏரியில் கழிவுநீர் கலக்காமல் நடவடிக்கை எடுப்பதுடன், ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், காவனூர் கிராம ஊராட்சிக்குட்பட்டது கா.அம்பாபூர் கிராமம். இங்குள்ள பிடாரி ஏரியிலுள்ள தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் ஆடு, மாடுகள் இந்த தண்ணீரை குடித்து வந்தது. மேலும் ஊரில் நடக்கும் சில விஷேச நாட்களில் இக்குளத்தில் இருக்கும் தண்ணீரை மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த ஏரியில் கழிவுநீர் கலப்பதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏரியில் கழிவுநீர் கலக்காமல் நடவடிக்கை எடுப்பதுடன், ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரியலூரில் ரூ.2 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது
    • பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் சுமார் ரூ.2 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் உடையார்பாளையம் வருவாய்கோட்டாட்சியர் பரிமளம், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்

    பிரபாகரன், ஜாகிர் உசைன், ஊராட்சிமன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது
    • உதயநிதி ஸ்டாலினை உற்சாக வரவேற்பு அளிக்க தீர்மானம்

     அரியலூர்,

    அரியலூர் புறவழிச்சாலையிலுள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செய லாளரும், போக்கு வரத்து துறை அமைச்ச ருமான சிவசங்கர் தலைமை வகித்து, அரியலூரில் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் அலு வலகத்தில் நாளை(ஆக.28) நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னை வரவேற்க திமுகவினர் திரளாக வருகை தரவே ண்டும். வருகின்ற மக்களவை த் தேர்தலில் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

    கூட்டத்தில் அக்கட்சியின் சட்டத் திட்ட திருத்த குழு இணைச் செயலர் சுபா.சந்திரசேகர், கொள்கை பரப்பு துணைச் செயலர் ச.அ.பெருநற்கிள்ளி, இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜன் மற்றும் அனைத்து கிளைச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

       

    • அரியலூரில் நர்ஸ், சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்
    • வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகினறனர்

    அரியலூர் 

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆண்டிமடம் அருகே உள்ள சவுர்வெளி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகன் குமரேசன் (வயது 29). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 18 வயதுடைய நர்சிங் கல்லூரி மாணவியை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதை வெளியே கூறினால், அவரது தாய், தந்தையை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். பின்னர் மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் டாக்டர்களிடம் காண்பித்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நடந்த சம்பவம் பற்றி மாணவி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலமாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து குமரேசனை போக்ேசா சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி(60). விவசாயக் கூலி தொழிலாளி. இவர், ஒரு சிறுமியை பலாத்காரம் செய்ததில், அந்த சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து சிறுமியிடம், அவரது பெற்றோர்கள் கேட்டபோது, அவரை காந்தி பலாத்காரம் செய்ததாகவும், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி காந்தி மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தார். 

    • அரியலூரில் பிளேடு கண்ணாடி துகள்களை விழுங்கிய கைதியால் பரபரப்பு ஏற்பட்டது
    • திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது

    அரியலூர்

    அரியலூர், சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டியை சேர்ந்த சத்தியாவின் மகன் வல்லவராஜ்(வயது 25). இவரும், இவரது சகோதரர் தர்மராஜ்(23) மற்றும் நண்பர் குமார் ஆகியோர் அரியலூர் மாவட்டம், வாலாஜா நகரத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் வீட்டில் பூஜை செய்வதாகவும், செய்வினை எடுப்பதாகவும் கூறி, பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து விஜயகுமார் அரியலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வல்லவராஜ், தர்மராஜ், குமார் ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் தர்மராஜ், குமார் ஆகியோருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. இந்நிலையில் வல்லவராஜை வழக்கு விசாரணைக்காக அரியலூர் குற்றவியல் கோர்ட்டில் ேபாலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, தான் ஆக்சா பிளேடு பாகங்கள் மற்றும் கண்ணாடி துகள்களை விழுங்கிவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் உடனடியாக அவரை அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, அவரது வயிற்றில் இரும்பு துண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மிகக்குறைந்த எடையில் பிறந்த குழந்தையை காப்பாற்றி அரசு டாக்டா்கள் சாதனை
    • அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மிகக்குறைந்த எடையில் பிறந்த குழந்தையை காப்பாற்றி அரசு டாக்டா்கள் சாதனை படைத்துள்ளனர்.


    அரியலூர் ,தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்டம், அங்கனூரை சேர்ந்த ஆனந்தின்(வயது 25) மனைவி சத்தீஸ்வரி. 7 மாத கர்ப்பமாக இருந்த சத்தீஸ்வரிக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததை டாக்டர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து குழந்தையையும், தாயையும் காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோர் ஆலோசனைப்படி டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழந்தைகள் நல மருத்துவ குழுவினர் மற்றும் நர்சுகள் சத்தீஸ்வரிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 750 கிராம் எடையில் மட்டுமே இருந்தது. இதனையடுத்து இங்குபேட்டரில் வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரலாற்றிலேயே மிகக்குறைந்த எடையிலான குழந்தை இதுவே என்றும், அதனை காப்பற்றியது சாதனை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தையின் பெற்றோர், டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.





    • அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 479 அரசுப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
    • ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட துளாரங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்


    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 479 அரசுப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அரியலூரை அடுத்த பொய்யாதநல்லூர் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவை பரிமாறி விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் ஜெயா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செந்துறை அடுத்த குழுமூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு, முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாகத்தினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார். இதே போல் ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட துளாரங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.ராமலிங்கம், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட மாவட்ட மேலாளர் கே.கவிதா , வட்டாட்சியர் துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், முருகன், வட்டார கல்வி அலுவலர் ராஜாத்தியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் ஆண்டிமடம், தா.பழூர், திருமானூர் உள்ளிட்ட ஒன்றியத்துக்குள் உள்பட்ட அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தினை அந்தந்தப் பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் தொடங்கி வைத்தனர். ஆக மாவட்டத்தில் 479 அரசுப் பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.




    • அரியலூர் மாவட்டத்தில் ரூ.2 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள்
    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    அரியலூர்,

    செந்துறை ஒன்றியம், இருங்கலாக்குறிச்சி கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.106.95 லட்சம் மதிப்பீட்டில் இருங்கலாக்குறிச்சி முதல் ஆனைவாரி ஓடை வரை சாலை அமைக்கும் பணியினையும், பின்னர்புதுப்பாளையம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.80லட்சம் மதிப்பீட்டில் ஆதனக்குறிச்சி - புதுப்பாளையம் கிழக்குத்தெருவில் கழிவுநீர்வாய்க்கால் 210 மீ அமைக்கும் பணியினையும், தொடர்ந்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் ஆதனக்குறிச்சி - புதுப்பாளையம் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2.53 லட்சம் மதிப்பீட்டில் ஆதனக்குறிச்சி - புதுப்பாளையம் ஆதிதிராவிடர்காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைத்து பணிகளை தரமான பொருட்களை கொண்டு விரைவில் முடித்திட சம்மந்தப்பட்ட அலுலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆதனக்குறிச்சி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.63 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைத்தல் பணியினையும், பின்னர்முதுகுளம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.27 லட்சம் மதிப்பீட்டில் ஆதனக்குறிச்சி முதுகுளம் அய்யனார்குளம் ஆழப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் பணியினையும், அதனைத் தொடர்ந்து ஆலத்தியூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர்தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6.00 லட்சம் மதிப்பீட்டில் அருந்ததியர்தெரு சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், பின்னர்முள்ளுக்குறிச்சி கிராமத்தில் நபார்டு கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.42.36 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய பள்ளிக் கட்டடம் கட்டும் பணியினையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர்பரிமளம், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறி யாளர்வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ஜாகிர்உசைன், ஊராட்சிமன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.


    • நல்லநாயகபுரம் கிராமத்தில் நடந்த கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
    • அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு


    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் நல்லநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்வேல். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு டாஸ்மாக் பார் நடத்தி வந்துள்ளார். அப்பொழுது அதே கிராமத்தை சேர்ந்த அந்தோணிராஜ். இவர்கள் இருவருக்கும் முன்விரோம் இருந்தது.இதன் காரணமாக தமிழ்வேல், அம்பேத்கர், கரிகாலன், தமிழ்வேலின் தாயார் தமிழரசி, சகோதரி வேலரசி ஆகியோர் அந்தோணிராஜ் வீட்டிற்கு சென்று வீட்டிற்குள் படுத்திருந்த அவரது தந்தை தனவேலை வெட்டி கொலை செய்துள்ளனர்.இதுகுறித்து செந்துறை காவல் நிலையத்தில் அந்தோணிராஜ் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் கைது செய்யபட்டனர்.மேலும் இதுகுறித்த வழக்கு, கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கர்ணன், தமிழ்வேல், அம்பேத்கர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் குற்றம் சாட்டபட்ட கரிகாலன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தமிழ்வேலின் தாயார் தமிழரசி, சகோதரி வேலரசி ஆகியோர் நிரபராதி என தீர்ப்பு வழங்கபட்டது குறிப்பிடதக்கது.




    • அரியலூர் ஆண்டிமடம் அருகே வீட்டு கடன் வாங்கி தருவதாக 12 பேரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த ஆசாமி சிக்கினார்
    • கேரளா, கோவை , ஈரோடு பகுதியில் பதுங்கிய நபரை பொறி வைத்து பிடித்த போலீசார்

    செந்துறை,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பட்டணம் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 33) இவர் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் பகுதியை சேர்ந்த இளவரசன் மற்றும் சிறுகளத்தூர்,பொன்பரப்பி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 12 பேரிடம் வீட்டுக் கடன் வாங்கி தருவதாக ஒவ்வொருவரிடமும் ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் வரை பெற்றார். பின்னர் வங்கியில் கடன் பெற்று தராமல் காலம் தாழ்த்தினார். கடந்த 3 ஆண்டுகளாக ஒருவருக்கு கூட கடன் பெற்று தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டனர். ஆனால் மணிவேல் பணத்தை கொடுக்க மறுத்தார். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட இளவரசன் உள்ளிட்டவர்கள் அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தனர்.அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிவேலை தேடினர். போலீசார் தேடுவதை மோப்பம் பிடித்த அவர் கோவை, கேரள மாநிலம் பாலக்காடு, ஈரோடு என தலைமறைவாக சுற்றித்திரிந்தார். போலீசார் செல்போன் டவர் மூலம் அவரை பின்தொடர்ந்தனர். கடைசியாக ஈரோட்டில் ஒரு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த மணிவேலை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அதன் பின்னர் அரியலூர் கொண்டு வந்து அவரிடம் விசாரணை நடத்தி செந்துறை குற்றவியல் நீதிபதி ஏக்னஸ் ஜெப கிருபா முன்பு ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • இளம்பெண் மாயமானார்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சூசையப்பர்பட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 55). இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பெர்லின்கில்டா (18). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தம்பி செபாஸ்டியன் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழவண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல் (வயது 51), தொழிலாளி. மது பழக்கத்திற்கு அடிமையான இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில், மன வேதனை அடைந்த முருகவேல் விஷம் குடித்தார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகவேல் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×