என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூர் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- அரியலூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது
- உதயநிதி ஸ்டாலினை உற்சாக வரவேற்பு அளிக்க தீர்மானம்
அரியலூர்,
அரியலூர் புறவழிச்சாலையிலுள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செய லாளரும், போக்கு வரத்து துறை அமைச்ச ருமான சிவசங்கர் தலைமை வகித்து, அரியலூரில் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் அலு வலகத்தில் நாளை(ஆக.28) நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னை வரவேற்க திமுகவினர் திரளாக வருகை தரவே ண்டும். வருகின்ற மக்களவை த் தேர்தலில் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் அக்கட்சியின் சட்டத் திட்ட திருத்த குழு இணைச் செயலர் சுபா.சந்திரசேகர், கொள்கை பரப்பு துணைச் செயலர் ச.அ.பெருநற்கிள்ளி, இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜன் மற்றும் அனைத்து கிளைச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்






