என் மலர்
நீங்கள் தேடியது "ஏரியில் கழிவுநீர் கலப்பு"
- ஏற்காடு ஏரி நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.
- மேலும் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு ஏரி நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. இதையடுத்து ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள், இந்த ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஏற்காடு ஏரி நிரம்பி உள்ளதால், இந்த உபரி நீர் கிளியூர் நீர்வீழ்ச்சியில் கொட்டுகிறது. இதன் அழகை ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஏற்காடு உள்ளூர் வாசிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது இந்த ஏரி தான். ஆனால் ஏரியில் கழிவு நீர் கலப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் எனவும், ஏரியை அவ்வப்போது தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பிடாரி ஏரியில் கழிவுநீர் கலப்பதால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- ஏரியில் கழிவுநீர் கலக்காமல் நடவடிக்கை எடுப்பதுடன், ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், காவனூர் கிராம ஊராட்சிக்குட்பட்டது கா.அம்பாபூர் கிராமம். இங்குள்ள பிடாரி ஏரியிலுள்ள தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் ஆடு, மாடுகள் இந்த தண்ணீரை குடித்து வந்தது. மேலும் ஊரில் நடக்கும் சில விஷேச நாட்களில் இக்குளத்தில் இருக்கும் தண்ணீரை மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த ஏரியில் கழிவுநீர் கலப்பதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏரியில் கழிவுநீர் கலக்காமல் நடவடிக்கை எடுப்பதுடன், ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






