என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏற்காடு ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்
- ஏற்காடு ஏரி நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.
- மேலும் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு ஏரி நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. இதையடுத்து ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள், இந்த ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஏற்காடு ஏரி நிரம்பி உள்ளதால், இந்த உபரி நீர் கிளியூர் நீர்வீழ்ச்சியில் கொட்டுகிறது. இதன் அழகை ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஏற்காடு உள்ளூர் வாசிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது இந்த ஏரி தான். ஆனால் ஏரியில் கழிவு நீர் கலப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் எனவும், ஏரியை அவ்வப்போது தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






