என் மலர்tooltip icon

    அரியலூர்

    கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை பயன்படுத்திய மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    அரியலூர்:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 25 வயது பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையில் நேற்று உறுதிசெய்யப்பட்டது.

    இதையடுத்து அந்த பெண்ணின் மகள், தாய், தந்தை, அண்ணன் உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த 14 பேரை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    அரியலூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் பாதிக்கப்பட்ட பெண், தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், 14 பேரையும் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தி மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் சென்னை வேளச்சேரியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.

    அவர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட பிறகு கடந்த 25-ந்தேதி அரியலூர் வந்துள்ளார். அன்றைய தினம் அரியலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளார்.

    மேலும், வீட்டில் இருந்த போது அவர் யாருடன் தொடர்பில் இருந்துள்ளார். வெளியிடங்களுக்கு சென்று வந்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொரோனா வைர

    மேலும் சென்னையில் பணியாற்றியபோது யார், யாருடன் தொடர்பில் இருந்தார், எங்கெங்கு சென்றார் உள்ளிட்ட விபரங்களையும் சுகாதாரத்துறையினர் சேகரித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் அந்த பெண் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது அவரது செல்போனில் டிக்டாக் செய்து பதிவிட்டுள்ளார். அப்போது இம்மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவ ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் கொரோனா பாதிக்கப்பட்டவரின் செல்போனை வாங்கி பயன்படுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த டிக்டாக் வீடியோ மற்றும் அவரது செல்போனை வாங்கிய மருத்துவ தூய்மை பணியாளர்கள் 2 பெண்கள் ஒரு ஆண் என 3 பேர் பயன்படுத்தியதை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

    இதனையடுத்து மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3 பேரையும் அதிகாரிகள் பணி நீக்கம் செய்துள்ளனர். மேலும் அந்த 3 பேரையும் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தியுள்ளனர். அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை வாங்கி பயன்படுத்தியதால் இவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் 14 நாட்கள் இவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    சென்னையில் வேலை பார்த்து வந்த அரியலூர் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. பெற்றோர், மகள் உள்பட 14 பேரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து வருகின்றனர்.

    அரியலூர்:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கெரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 25 வயது பெண்ணுக்குகெரோனா வைரஸ் தொற்று பரிசோதனையில் நேற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அந்த பெண்ணின் மகள், தாய், தந்தை, அண்ணன் உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த 14 பேரை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து வரு கின்றனர். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    அரியலூர் அரசு மருத்து வமனையில் உள்ள கொரோனா வார்டில் பாதிக்கப்பட்ட பெண், தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், 14 பேரையும் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தி மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் சென்னை வேளச் சேரியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.

    அவர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட பிறகு கடந்த 25-ந்தேதி அரியலூர் வந்துள்ளார். அன்றைய தினம் அரியலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் அறி குறிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளார்.

    மேலும், வீட்டில் இருந்த போது அவர் யாருடன் தொடர்பில் இருந்துள்ளார். வெளியிடங்களுக்கு சென்று வந்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சென்னையில் பணியாற்றியபோது யார், யாருடன் தொடர்பில் இருந்தார், எங்கெங்கு சென்றார் உள்ளிட்ட விபரங்களையும் சுகாதாரத்துறையினர் சேகரித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரியலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர், அரசு கொறடா ஆய்வு செய்தார்.
    அரியலூர்:

    அரியலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது தாமரை ராஜேந்திரன் கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய- மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்களாகிய நாமும் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி கூட்டம் சேராத வகையில், தங்களையே தனிமைப்படுத்தி கொரோனா வைரஸ் ஏற்படாமல் தங்களையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

    கலெக்டர் ரத்னா கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் வீட்டில் தனியாக உள்ள உதவிக்கு யாரும் இல்லாத முதியவர்கள் தங்களுக்கு மருந்து பொருட்கள், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கு கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04329-228709 மற்றும் 99523 36840 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். அருகில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் என்று அறிந்தால் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்.
    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அரசு தலைமைக்கொறாடா .தாமரை எஸ்.ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அரசு தலைமைக் கொறடா.தாமரை எஸ்.ராஜேந்திரன் மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது அரசு தலைமைக் கொறடா தெரிவித்ததாவது:-

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசும், மாநில அரசும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் தடுப்பு நடவடிக்கையை தமிழகத்தில் முடிக்கிவிட்டு விழிப்புணர்வு பணிகளும், தொற்று நோய் பராவா வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது. பொதுமக்களாகிய நாமும் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி கூட்டம் சேராத வண்ணம் தங்க ளையே தனிமைப்படுத்தி தொற்று நோய் ஏற்படாமல் தங்களையும், இந்த நாட்டு மக்களையும் பாதுகாக்க ஒத்துழைப்பு தர வேண்டும்.

    பொதுமக்கள் கூட்டமாக இருக்க வேண்டாம். ஒருவகொருவர் பேசும் போது தங்களுக்குள் இடை வெளிவிட்டு நின்று பேசவும், குடும்ப உறுப்பினர்களே இடைவெளி விட்டு இருக்கவும். மேலும் வெளியிடங்களில்  நடமாடுவதை தவிர்க்கவும், பொதுமக்களாகிய நீங்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே இத்தகைய நோய் தொற்று பரவாமல் தடுக்க முடியும் வரை அரியலூர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் மருத்துவக்குழுக்கள் கண்காணித்து வருகின்றனர்.

    அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைகளில் 200 படுகைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட அறை தயார் நிலையில் உள்ளது. இந்த அறையில் நோய் தொற்று உள்ளவர் களுக்கு சிகிச்சை வழங்குவ தற்கு 200 படுக்கை வசதிகளுடனும், தீவிர சிகிச்சை பிரிவில் 20 படுக்கை வசதி களும், 10 வென்டிலேட் டர்கள், 20 மானிட்டர், தேவையான மருந்துகள், பாதுகாப்புகவசங்கள், கிருமி நாசினிகள் தயார் நிலையில் உள்ளன. 2 தனியார் மருத்துவமனைகளில் 65 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து தனியார் கல்லூரி விடுதிகளில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தி  தங்கி சிகிச்சை பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மாவட்ட தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் சுழற்சிமுறை யில் பணிபுரிவதற்கு 3 மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மாவட்ட அளவில் 20 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்ட்டு தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக பணியாற்றி வரு கின்றனர்.

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04329 228709 என்ற தொலை பேசி எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் அருகிலுள் ளவர்களுக்கு காய்ச்சல் ஏதே னும் அறியப்பட்டாலோ மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பொ.சந்திரசேகரன், மருத்துவக் கல்லூரி தலைவர் முத்துகிருஷ்ணன், இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) (பொறுப்பு) மரு. இளவரசன், துணை இயக்குநர் ஹேமசந்த்காந்தி, தலைமை மருத்துவ அலுவலர் ரவிசங்கர், மருத்துவர்கள் ரமேஷ் சரவணன், மணிகண்டன் வட்டாட்சியர் சந்திரசேகரன் மற்றும் செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
    அரியலூரில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களை தனிமைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளிலும் கொரோனா பாதித்தவர்களை கண்டறிய வீடு வீடாக அதிகாரிகள் குழு சோதனை செய்து வருகிறார்கள். தா.பழூர் வட்டார மருத்துவ அதிகாரி தட்சிணாமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) பஞ்சாபகேசன், வட்டார ஊராட்சி ஜாகிர் உசேன் ஆகியோர் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் ஏற்படுத்தி வெளி நாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வருபவர்களையும் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களில் இருந்து வேலை செய்துவிட்டு கொரோனா பீதி காரணமாக சொந்த ஊர் திரும்பியவர்களையும் தேடி அடையாளம் கண்டு வருகின்றனர்.

    மேலும் அவர்களது வீட்டில் முழுமையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களை 14 நாட்கள் தனிமை படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் முகப்பில் தனிமை படுத்தப்பட்ட வீடு என்ற எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

    மாநில அரசின் 144 தடை உத்தரவு மற்றும் மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். மளிகை கடைகள், காய்கறி கடைகள், பால் கடைகள், மருந்து கடைகள், இறைச்சி கடைகள் திறந்திருந்தன. ஊராட்சி மன்ற நிர்வாகங்கள் முழு வீச்சில் தூய்மை படுத்தும் பணிகளை செய்து வருகின்றனர். தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அவசியமில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்தவர்களை வீட்டிலேயே இருக்கும்படி அறிவுரை வழங்கினர்.

    இது தவிர கிராம நிர்வாக அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் அவரவர்கள் பகுதியில் வேலைக்காக வெளியே சென்று சொந்த ஊர் திரும்பியவர்களை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை ஒரே ஒரு நபருக்கு மட்டும் சாதாரண சளி, இருமல் இருந்தபோதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் அரியலூர் கொரோனா பரிசோதனை முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
    ஜெயங்கொண்டம் அருகே போர் குழாயிலிருந்து குடிநீர் குழாய்க்கு வரும் வால்வு பழுதடைந்து உள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை சரி செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமம் 21 வது வார்டு மெயின் ரோட்டில் சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதிக்கு போர் மூலம் நேரடியாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் போர் குழாயிலிருந்து குடிநீர் குழாய்க்கு வரும் வால்வு பழுதடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என அப்பகுதிமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் கடந்த  15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் நேற்று திடீரென ஜெயங்கொண்டம்  செந்துறை சாலையில் செங்குந்தபுரம் பஸ் நிறுத்தத்திற்கு அருகே மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் பாபு, வசந்த் ஆகியோர் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர். 

    இதனிடையே நகராட்சி ஆணையர் அறச்செல்வி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து வால்வினை மாற்றி சரிசெய்து குடிநீர் வழக்கம் போல் வழங்கப்பட்டது. 
    வெங்கனூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழந்து சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது 54). இவர் கீழப்பலூர் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்து, வெங்கனூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில்  நேற்று இரவு வெங்கனூர் அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். 

    இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக  அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிர் இழந்தார். 

    இது குறித்து வெங்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் மூடப்பட்டுள்ளது. வருகிற 31-ந்தேதி வரை பக்தர்கள், சுற்றுலா பயணிகள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகன்நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. ஐ.நா. சபையால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்டு உலகிலேயே பெரியதாக போற்றப்படுகிறது.

    இந்த கோவிலுக்கு அனைத்து நாட்களிலும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த கோவிலில் பக்தர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் ஆகமவிதிகளின்படி கோவிலில் நான்கு கால பூஜைகள் மட்டுமே நடைபெறும். வருகிற 31-ந்தேதி வரை பக்தர்கள், சுற்றுலா பயணிகள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    கங்கைகொண்ட சோழபுரம் வரலாற்றில் கோவில் மூடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    அரியலூரில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ரத்னா தலைமையில் நடந்தது.
    அரியலூர்:

    அரியலூரில், மாவட்ட நிர்வாகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ரத்னா தலைமையில் நடந்தது. அப்போது கலெக்டர் ரத்னா பேசுகையில், கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூர் மாவட்டத்தில் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோவில், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தூய்மை படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவு மக்கள் கூடும் இடங்களில் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினை காக்க வேண்டும். குறிப்பாக வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு சுத்தமாகவும் கழுவ வேண்டும். கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை தொட வேண்டாம். சமீபத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர்கள் இருமல், சளி, காய்ச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டால் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஆலோசனை பெற வேண்டும். மேலும் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 24 மணி நேர உதவி எண்கள் 011-23978046, 044-29510400, 044- 29510500-ல் தகவல் தெரிவிக்கலாம். மேலும் 104 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார். 

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, மருத்துவக்கல்லூரி தலைவர் முத்துகிருஷ்ணன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த் காந்தி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, கோட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், வட்டார மருத்துவர் அலுவலர்கள், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ஜெயங்கொண்டம் அருகே திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 45 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் ரோட்டில் உள்ள கீழக்குடியிருப்பு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஜெயங்கொண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர்கள் மீன்சுருட்டி அருகே உள்ள ஒடப்பேரி கிராமம் வடக்குத்தெருவை சேர்ந்த வரதராஜன் (வயது 35), புதுச்சேரி முதல் தெருவை சேர்ந்த நாகராஜ் (39) என்பது தெரியவந்தது. தற்போது இருவரும் புதுச் சேரியில் வசித்து வருகின்றனர். மேலும் அவர்கள் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம், கல்லாத்தூர், ஆமணக்கந்தோண்டி, ஆண்டிமடம், விக்கிரமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 45 பவுன் தங்க நகைகளை மீட்டனர். பின்னர் அவர்கள் மீது ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் அவர்கள் இருவரை யும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    செந்துறை அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத சிமெண்டு ஆலை லாரி மோதியது. இதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வீராக்கன் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகர் மகன் அஜித்குமார் (வயது 24).இவர் இன்று அதிகாலை கோயம்புத்தூரில் இருந்து அரியலூருக்கு வரும் தனது தாய், தந்தையை அழைத்து வருவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் செந்துறையில் இருந்து அரியலூர் நோக்கி சென்றார். 

    ராயம்புரம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத தனியார் சிமெண்டு ஆலை லாரி வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். இதனைக் கண்ட அவ்வழியே சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும்போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஜித்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரியை தேடி வருகின்றனர். அதிகாலையிலேயே விபத்தில் வாலிபர் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்துத்தரப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் தோட்டக்கலைதுறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட திட்டங்களை மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அப்போது அவர் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சொட்டு நீர் பாசனம் மற்றும் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கொய்யா தோட்டத்தினையும், 5 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வாழை தோட்டத்தினையும் மற்றும் பலா ஆகிய தோட்டங்களையும் 1 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள புடலங்காய் மற்றும் பீர்க்கங்காய் பந்தல் தோட்டத்தினையும் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட திட்டங்களையும் ஆய்வு செய்தார்.

    பின்னர், வேளாண்மைத்துறையின் சார்பில் உஞ்சினி கிராமத்தில் மல்லியம்பாள் என்பவரின் விதைப்பண்ணையில் 2.50 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை தோட்டத்தினை பார்வையிட்டார். அப்போது கலெக்டர் ரத்னா கூறியதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம் ஆகிய திட்டங்கள் மானிய விலையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தோட்டக்கலை பயிர்களில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர் பாசன அமைத்து தரப்படுகிறது. தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் காய்கறி பரப்பு அதிகரித்தல் இனத்தில் எக்டருக்கு ரூ.20 ஆயிரம் மானியத்தில் காய்கறி விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

    ஆய்வின் போது அரியலூர் துணை இயக்குனர்கள் அன்புராஜன் (தோட்டக்கலை), பழனிசாமி (வேளாண்மை), உதவி செயற்பொறியாளர் இளவரசன், உதவி இயக்குனர்கள் பெரியசாமி (தோட்டக்கலை), ஜென்ஸி (வேளாண்மை) மற்றும் உதவி தோட்டக்கலை மற்றும் வேளாண் அலுவலர்கள் உடனிருந்தனர்.
    ×