என் மலர்
அரியலூர்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக போலீஸ் வளையத்துக்குள் செந்துறை பகுதி வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தள்ளனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை சேர்ந்த 3 பேர் அரியலூர் சிமெண்ட் ஆலை ஊழியர் ஒருவர், திருமானூர் பகுதியை சேர்ந்த ஒருவர் என 5 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தனர். அவர்களை கடந்த வாரம் சுகாதாரத்துறையினர் அழைத்து சென்று அரியலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செந்துறை போலீசார் மூன்று இஸ்லாமியர்களும் வசித்த பகுதியை சுற்றி 200 மீட்டர் தொலைவிற்கு பாதுகாப்பு வளையம் அமைத்து வெளி நபர்கள் யாரும் உள்ளே செல்லாமலும் அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் யாரும் வெளியே செல்லாமலும் தடைகளை ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இஸ்லாமியர்களின் குடும்ப உறுப்பினர்களை சுகாதாரதுறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று கொரோனா தொற்று இருக்கிறதா? என்று பரிசோதனை செய்து வருகின்றனர். இது செந்துறை பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வரதராஜன்பேட்டை, மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம் பகுதிகளில் விதிமுறையை மீறிய 13 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.
வரதராஜன்பேட்டை:
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதையொட்டி காலை 6 மணி முதல் மதியம் 1 வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளை திறந்திருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதியில் ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று ஒரு டீக்கடை உள்பட 3 கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இது பற்றி தகவல் அறிந்த ஆண்டிமடம் தாசில்தார் தேன்மொழி, அங்கு சென்று பார்வையிட்டு அந்த கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தார்.
இதேபோல் வரதராஜன்பேட்டையில் உள்ள 4 மளிகை கடைகளிலும் சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் தேன்மொழி, அந்த கடைகளையும் பூட்டி ‘சீல்’ வைத்தார். அப்போது ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மதன்குமார், பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
மீன்சுருட்டி பகுதியில் இயங்கி வரும் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், பொதுமக்கள் முக கவசம் அணிந்து வர கூறுமாறும் கடைக்காரரிடம் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி கடந்த ஒரு வாரமாக அறிவுறுத்தி வந்தார். ஆனால் சில கடைகளில் விதிமுறைகள் கடைபிடிக்கப் படவில்லை.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் மண்டல துணை தாசில்தார் ஜானகிராமன், குண்டவெளி வருவாய் ஆய்வாளர் தேவேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் வளையாபதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் முத்துசேர்வாமடம் கிராமத்தில் உள்ள ராமகிருஷ்ணன் என்பவருடைய மளிகை கடைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், நேரக்கட்டுப்பாடு கடைபிடிக்காமலும், முக கவசங்கள் அணியாமலும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது, தெரியவந்தது. இதையடுத்து அந்த மளிகை கடைக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. இதேபோல் மேலணிக்குழி கிராமத்தில் உள்ள பாலு என்பவருடைய மளிகை கடைக்கும் ‘சீல்‘ வைக்கப்பட்டது. இரண்டு மளிகை கடைக்காரர்களுக்கும் முக கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமங்களில் உள்ள டீக்கடைகள் சமூக இடைவெளி இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காத 4 டீக்கடைகளுக்கு ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த், கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் சீல் வைத்தனர். மேலும் அப்பகுதி பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், முக கவசம் அணியுமாறும் அறிவுறுத்தினர். மேலும் கடை உரிமையாளரிடம் கடையை திறக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்வதற்கு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் ரத்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்வதற்கு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் ரத்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் அலுவலர்கள் வெளிநாடு, வெளிமாநிலம், வெளியூர்களில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்துள்ள நபர்களை வீட்டில் தனிமைப்படுத்தி வைத்து அவர்களை கண்காணிக்கும் பணி, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு உணவு ஏற்பாடு செய்தல், அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் பிற வாகனங்களை ஏற்பாடு செய்தல், குழந்தைகள் காப்பகம், ஆதரவற்ற இல்லங்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர்.
மேலும், அவசர உதவி தேவைப்படுபவர்கள் மருத்துவ உதவிக்கு கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04329-228709 மற்றும் 99523 36840 என்ற செல்போன் எண்ணிலும் அழைக்கலாம், என்றார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, கோட்டாட்சியர் பாலாஜி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்வதற்கு மூன்று விதமாக, மூன்று வண்ணங்களில் பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கை காரணமாக இந்த மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்வதற்கு மூன்று விதமாக, மூன்று வண்ணங்களில் (பச்சை, ஊதா, ரோஸ்) பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி பச்சை நிற பாஸ் திங்கள் மற்றும் வியாழக்கிழமை மட்டும் பயன்படுத்த முடியும். அந்த அனுமதி அட்டையினை பொதுமக்கள் வெளியே கொண்டு சென்று பொருட்களை வாங்கி வரலாம்.
ஊதா நிற பாஸ் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பயன்படுத்த முடியும். ரோஸ் நிற பாஸ்களை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த அனுமதி சீட்டுகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செல்லும். இந்த கார்டு மூலம் மருத்துவ அவசரத்திற்கு விதி விலக்கு அளிக்கப்படும். இந்த சீட்டை வைத்திருக்கும் ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர அனுமதி அளிக்கப்படும். 15 வயதிற்கு மேல் 60 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே இந்த அட்டையை பயன்படுத்தி வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த அட்டைகள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் லாரிகளில் அத்தியாவசிய மற்றும் வேளாண் பொருட்கள் எடுத்துச் செல்ல வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அனுமதி கடிதம் பெறவேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
இது திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 6 மணி முதல் மதியம் 1 வரை மட்டுமே அனுமதிக்கப்படும். மற்ற நாள்களில் மருத்துவ பணிக்கு விலக்கு அளிக்கப்படும்.
மேலும், லாரியின் ஓட்டுநருக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் கண்டிப்பாக அனுமதி கடிதம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் ஒருவருடன் உதவியாளர் ஒருவர் செல்ல அனுமதி உண்டு. அதேபோல் எங்கு சென்றாலும் சமூக விலகலை அனைவரும் அவசியம் பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டத்தில் 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கலெக்டர் ரத்னா கூறினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்திற்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து, முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 204 பேருக்கு அத்தியாவசிய பொருட்களை கலெக்டர் ரத்னா அரியலூர் பேரிடர் மேலாண்மை தாசில்தார்களிடம் நேற்று வழங்கினார். அப்போது அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அந்த பொருட்கள் அந்தந்த முகாம்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து கலெக்டர் ரத்னா கூறியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தத்தனூரில் ஒரு கல்லூரியில் உள்ள முகாமில் 62 பேரும், அரியலூர் அரசு கலைக்கல்லூரி முகாமில் 73 பேரும், அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முகாமில் 42 பேரும், ஜெயங்கொண்டத்தில் ஒரு கல்லூரியில் உள்ள முகாமில் 11 பேரும், ஆண்டிமடம் அரசினர் மேல்நிலைப்பள்ளி முகாமில் 16 பேரும் என மொத்தம் 204 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக்குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சோப்பு, சேலை, கைலி, பாய், தலையணை, போர்வை, பற்பசை, சீப்பு உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கான அத்தியாவசிய பொருட்கள் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் வாகனம் மூலம் அந்தந்த முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு மூன்று வேளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
சாத்தமங்கலம், கோவில் எசனை, தாமரைக்குளம், சொக்கலிங்கபுரம், மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 290 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட நிறுவனங்களே அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. அவர்களும் மருத்துவக்குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், மருத்துவக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டவர்களை, அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தி தினமும் அவர்களது உடல்நிலை குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்திற்கு இதுவரை வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வந்த மொத்தம் 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெளியிடங்களில் இருந்து வரும் நபர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 1077, 104 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து சமூக முக்கியஸ்தர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ரத்னா பேசுகையில், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும், என்றார்.

டெல்லி மாநாட்டிற்கு சென்றுவிட்டு செந்துறை வந்த இஸ்லாமியர்கள் வசித்த பகுதியில் மருத்துவக்குழுவினர் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
செந்துறை:
சமீபத்தில் மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் மாநாட்டிற்கு சென்றுவந்த பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி இறந்ததாக விசாரனையில் தெரிய வந்தது.
இதனையடுத்து உளவுப் பிரிவு அதிகாரிகள் தந்த தகவலின் பேரில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின் பேரில் செந்துறையைச் சேர்ந்த 3 பேர், அரியலூர் எருத்துக்காரன்பட்டி சிமெண்ட் ஆலை ஊழியர் மற்றும் திருமானூரைச் சேர்ந்த தலா ஒருவர் என 5 பேரை அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் தனிமைப்படுத்தி மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
இவர்களது ரத்த மாதிரி திருச்சிக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் வசித்த திருமானூர், எருத்துக்காரன் பட்டி மற்றும் செந்துறை ஆகிய மூன்று இடங்களிலும் மருத்துவகுழுவினர் வீடு, வீடாக சென்று பொதுமக்களை பரிசோதனை செய்து வருகின்றனர். அதன்படி செந்துறை வட்டார மருத்துவ அலுவலர் இந்துமதி தலைமையில் டாக்டர் ரேவதி உட்பட ஒவ்வொரு குழுவிலும் தலா ஒருமருத்துவர், இரண்டு சுகாதார செவிலியர் மற்றும் நான்கு அங்கன்வாடி பணியாளர்கள் என 7 பேர் கொண்ட குழு தலா 50 வீடுகளை கண்காணிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மருத்துவகுழுவினர் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவு உள்ளதா என்று கேட்டறிந்து வருகின்றனர். மூன்று இடங்களிலும் சுமார் 5 ஆயிரம் வீடுகளில் உள்ள 20 ஆயிரம் மக்களிடையே இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பின்போது காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களது வீடுகளை தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரின் வீடுகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. கைகழுவும் முறைகள் குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்படுகிறது. 14 நாட்களுக்கு இந்த தொடர் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள மருத்துவகுழுவினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ரூ.21 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னம் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று செந்துறை தாலுகாவில் கொரோனோ தடுப்பு பணிக்காக தனது எம்.எல்.ஏ. நிதியிலிருந்து ரூ.20 லட்சமும், உடனடி அவசர தேவைக்காக தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 லட்சமும் வழங்கினார்.
செந்துறை ராயல் சிட்டி பகுதியில் குடியிருக்கும் நரிக்குறவர்கள் உணவின்றி தவித்து வந்தனர். அங்கே 26 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் வசித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் எம்.எல்.ஏ. ஆர்.டி. ராமச்சந்திரன் அங்கு நேரில் வந்து உணவின்றி தவித்த 26 குடும்பங்களுக்கும் தலா 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கி உதவினார்.
இந்த நிகழ்ச்சியின்போது செந்துறை ஒன்றிய செயலாளர்கள் உதயம் ரமேஷ், சந்திரகாசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதன்பின்னர் அங்கிருந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதேவி, சிவாஜி, ஊராட்சி செயலளர் அமிர்தலிங்கம் ஆகியோரிடம் அரசு சார்பில் இப்பகுதியில் வசிக்கும் நரிகுறவர் இன மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பள்ளி மாணவி சார்ட் பேப்பர்களில் விழிப்புணர்வு வாசகங்களை எழுதி மக்கள் கூடும் இடங்களில் உள்ள சுவற்றில் ஒட்டி விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் ஷாலினி. இவர் சிறுவளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் புதுப்பாளையத்தில் கிராம மக்கள் ஊரடங்கை சரியாக கடைபிடிக்காமல் கூட்டம், கூட்டமாக இருந்தனர். இதை பார்த்த மாணவி ஷாலினி, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘சார்ட்’ பேப்பர்களில் விழிப்புணர்வு வாசகங்களை எழுதி, அவற்றை மக்கள் கூடும் இடங்களில் உள்ள சுவற்றில் ஒட்டி விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.
மேலும் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று எடுத்து கூறினார். மாணவியின் செயல் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், அரியலூர் மாவட்டத்தில் உட்பட்ட தெருக்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஆண்டிமடம்:
அத்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட அத்தியூர், புதுப்பேட்டை, இந்திராநகர், அத்தியூர்குடிகாடு ஆகிய கிராமங்களில் பா.ஜ.க. சார்பில் 500 பேருக்கு முக கவசம் வழங்கப்பட்டது. இதேபோல் அம்மாபாளையம், களரம்பட்டி ஆகிய பகுதிகளில் தே.மு.தி.க. சார்பில் பொதுமக்களுக்கு முக கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-விளந்தை ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட தெருக்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி மஞ்சள்தூள், அரைத்த வேப்பிலை, கற்றாழை, கிருமி நாசினி ஆகியவற்றை கலந்த தண்ணீர் தெளிக்கப்பட்டது. கூவத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு கட்டத்திற்குள் நின்று காய்கறிகள், பழங்கள் வாங்குவதற்காக ஒரு பொது இடத்தில் உழவர் சந்தை திறக்கப்பட்டது.
கவரபாளையம் கிராமத்தில் பொதுமக்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஒலிபெருக்கி மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அத்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட அத்தியூர், புதுப்பேட்டை, இந்திராநகர், அத்தியூர்குடிகாடு ஆகிய கிராமங்களில் பா.ஜ.க. சார்பில் 500 பேருக்கு முக கவசம் வழங்கப்பட்டது. இதேபோல் அம்மாபாளையம், களரம்பட்டி ஆகிய பகுதிகளில் தே.மு.தி.க. சார்பில் பொதுமக்களுக்கு முக கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவு பொருட்களுடன் தலா ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்கப்படும் என அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், அரியலூரில் நடந்தது. கூட்டத்திற்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கலெக் டர் ரத்னா, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் பேசுகையில், ஊரடங்கு உத்தரவையொட்டி தமிழக முதல்- அமைச்சர் அறிவித்துள்ள, ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவு பொருட்களுடன் தலா ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அரியலூர் மாவட்டத்தில் நாளை(வியாழக்கிழமை) முதல் தொடங்கப்படும். இதில் 440 ரேஷன் கடைகளில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 448 தகுதி வாய்ந்த அரிசி பெறும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாயும், அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய பொருட்களும் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கை காரணமாக நாள் ஒன்றுக்கு 100 ரேஷன் கார்டுதாரர்களுக்கு முன்னதாகவே டோக்கன் வழங்கப்படும், என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அரியலூர் பகுதியில் 36 மருத்துவக்குழுவினர் வீடு, வீடாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
சென்னையில் இருந்து வந்த அரியலூரை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய் யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின்பேரில், 36 மருத்து வக்குழுக்கள் அமைக்கப்பட் டது. இதில் ஒவ்வொரு குழுவிலும் ஒரு டாக்டர், கிராம செவிலியர்கள் 2 பேர், அங்கன்வாடி ஊழியர்கள் 4 பேர், சமுதாய சுகாதார செவிலியர் ஒருவர், பகுதி நேர சுகாதார செவிலியர் ஒருவர் என 9 பேர் உள்ளனர். 36 குழுக்களிலும் சேர்த்து மொத் தம் 368 பேர் உள்ளனர்.
அவர்கள் அரியலூர் நகராட்சி மற்றும் அரியலூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, அந்த வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களில் யாருக் காவது சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா? என்றும், வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களில் இருந்து யாராவது வந்துள்ள னரா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் சம்பந்தப்பட்டவர்களா? என்றும் கேட்டறிகின்றனர்.
அப்போது வீட்டில் உள்ள நபர்களுக்கு உடல்நிலை பாதிப்பு இருந்தால் 108 ஆம்புலன்ஸ் மூலம் உடன டியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் உள்ளவர்கள் வெளியே வராமல் தனிமைப் படுத்திக்கொண்டு, அடிக்கடி கைகளை சோப்பால் கழுவு மாறு அறிவுரை கூறி வருகின்றனர். அரியலூரில் உள்ள 18 வார்டுகள் மற்றும் அரியலூர் நகரை சுற்றியுள்ள 30 கிராமங்களில் நேற்று மருத்துவக்குழுவினர் விசா ரணை நடத்தினர். மொத்தம் 16 ஆயிரத்து 704 வீடுகளில் அவர்கள் விசாரணை நடத்த உள்ளதாக கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
மேலும் வீட்டில் காய்ச்சல் அறிகுறிகளுடன் யாராவது இருந்தால், தனிமைப்படுத்தப் பட்ட வீடு என்ற ஸ்டிக்கரை ஒட்டி சென்றனர். அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார் பாளையம், செந்துறை ஆகிய பகுதிகளில் 4 அரசு ஆம்புலன்சு களும், 9 தனியார் ஆம்புலன்சு களும், 108 ஆம்புலன்சுகள் 17-ம் 24 மணி நேரமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே தாய்-சேய் நல வாகனம் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் கிராமத்தை சேர்ந்தவர் கரிகாலன். இவரது மகன் சூர்யகுமார் (வயது 26). அதே கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகன் பத்மநாபன் (27). நண்பர்களான சூர்ய குமாரும், பத்மநாபனும் நேற்று முன்தினம் இரவு திருமானூரில் உள்ள மருந்து கடையில் மருந்து வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். தஞ்சை-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளூர் பாலம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளின் பின்பக்க டயர் பஞ்சரானது.
இதனால் சூர்யகுமாரும், பத்மநாபனும் மோட்டார் சைக்கிளை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு டயரை கழற்ற தொடங்கினர். அப்போது எதிரே வேகமாக வந்த தாய்-சேய் நல வாகனம் அவர்கள் மீதும், மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அந்த வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி வயல்வெளிக்குள் இறங்கி கவிழ்ந்தது. அதில் இருந்த டிரைவர் இறங்கி தப்பியோடி விட்டார். இதுதொடர்பாக கீழப்பழுவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். தாய்-சேய் நல வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் வெற்றியூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.