search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்துறை பகுதியின் நுழைவு இடத்தில் தடுப்பு ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.
    X
    செந்துறை பகுதியின் நுழைவு இடத்தில் தடுப்பு ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை: போலீஸ் வளையத்துக்குள் வந்த செந்துறை- பொதுமக்கள் அச்சம்

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக போலீஸ் வளையத்துக்குள் செந்துறை பகுதி வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தள்ளனர்.
    செந்துறை:

    அரியலூர்  மாவட்டம் செந்துறை பகுதியை சேர்ந்த 3 பேர் அரியலூர் சிமெண்ட் ஆலை ஊழியர் ஒருவர், திருமானூர் பகுதியை சேர்ந்த ஒருவர் என 5 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தனர். அவர்களை கடந்த வாரம் சுகாதாரத்துறையினர் அழைத்து சென்று அரியலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் செந்துறை போலீசார் மூன்று இஸ்லாமியர்களும் வசித்த பகுதியை சுற்றி 200 மீட்டர் தொலைவிற்கு பாதுகாப்பு வளையம் அமைத்து வெளி நபர்கள் யாரும் உள்ளே செல்லாமலும் அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் யாரும் வெளியே செல்லாமலும் தடைகளை ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இஸ்லாமியர்களின் குடும்ப உறுப்பினர்களை சுகாதாரதுறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று கொரோனா தொற்று இருக்கிறதா? என்று பரிசோதனை செய்து வருகின்றனர். இது செந்துறை பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×