search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்திய போது எடுத்த படம்.
    X
    மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்திய போது எடுத்த படம்.

    கொரோனா வைரஸ் பாதிப்பு - அரியலூரில் மருத்துவக்குழுவினர் வீடு, வீடாக சென்று விசாரணை

    கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அரியலூர் பகுதியில் 36 மருத்துவக்குழுவினர் வீடு, வீடாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    சென்னையில் இருந்து வந்த அரியலூரை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய் யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின்பேரில், 36 மருத்து வக்குழுக்கள் அமைக்கப்பட் டது. இதில் ஒவ்வொரு குழுவிலும் ஒரு டாக்டர், கிராம செவிலியர்கள் 2 பேர், அங்கன்வாடி ஊழியர்கள் 4 பேர், சமுதாய சுகாதார செவிலியர் ஒருவர், பகுதி நேர சுகாதார செவிலியர் ஒருவர் என 9 பேர் உள்ளனர். 36 குழுக்களிலும் சேர்த்து மொத் தம் 368 பேர் உள்ளனர்.

    அவர்கள் அரியலூர் நகராட்சி மற்றும் அரியலூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, அந்த வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களில் யாருக் காவது சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா? என்றும், வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களில் இருந்து யாராவது வந்துள்ள னரா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் சம்பந்தப்பட்டவர்களா? என்றும் கேட்டறிகின்றனர்.

    அப்போது வீட்டில் உள்ள நபர்களுக்கு உடல்நிலை பாதிப்பு இருந்தால் 108 ஆம்புலன்ஸ் மூலம் உடன டியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் உள்ளவர்கள் வெளியே வராமல் தனிமைப் படுத்திக்கொண்டு, அடிக்கடி கைகளை சோப்பால் கழுவு மாறு அறிவுரை கூறி வருகின்றனர். அரியலூரில் உள்ள 18 வார்டுகள் மற்றும் அரியலூர் நகரை சுற்றியுள்ள 30 கிராமங்களில் நேற்று மருத்துவக்குழுவினர் விசா ரணை நடத்தினர். மொத்தம் 16 ஆயிரத்து 704 வீடுகளில் அவர்கள் விசாரணை நடத்த உள்ளதாக கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

    மேலும் வீட்டில் காய்ச்சல் அறிகுறிகளுடன் யாராவது இருந்தால், தனிமைப்படுத்தப் பட்ட வீடு என்ற ஸ்டிக்கரை ஒட்டி சென்றனர். அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார் பாளையம், செந்துறை ஆகிய பகுதிகளில் 4 அரசு ஆம்புலன்சு களும், 9 தனியார் ஆம்புலன்சு களும், 108 ஆம்புலன்சுகள் 17-ம் 24 மணி நேரமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
    Next Story
    ×