என் மலர்
அரியலூர்
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் தியாகராஜன் வயது 50. விவசாயி.
இவருக்கு ராமாமிர்தம், தனம் என்கிற மனைவிகளும், பிரபாகரன், திலீபன், தினேஷ் என்கிற 3 மகன்களும், தீபா என்கிற மகளும் உள்ளனர். விவசாயி ஆன இவர் நேற்று அதிகாலை தூங்கி எழுந்து வீட்டின் பின்புறம் உள்ள ஏரிக்கரை அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு மறைந்து இருந்த பாம்பு கடித்தது.
அலறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடி வந்த அவரை உறவினர்கள் மீட்டு செந்துறை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து உறவினர்கள் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து அடக்கம் செய்ய முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த இரும்பிலிகுறிசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டிற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர். இதனைக் கண்ட கிராம மக்கள் பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்று போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் போலீசார் பிரேத பரிசோதனை செய்யாமல் உடலை கொடுக்க முடியாது என்று கூறி உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள இந்த சூழ்நிலையில் விவசாய ஒருவர் பாம்பு கடித்து இறந்த சம்பவம் உஞ்சினி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறையில், டெல்லி மாநாட்டில் பங்கேற்ற மருந்தக உரிமையாளருக்கு கொரோனா தொற்று அறி குறி இருந்தது. அவருக்கு நடந்த சோதனையில் தொற்று இல்லை என்று கூறி விடுவிக்கப்பட்டார்.
அவரது மருந்தகத்தில் வேலை பார்த்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.
இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராயம்புரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணின் எதிர் வீட்டில் வசித்த 12 வயது சிறுவனுக்கும், பக்கத்து தெருவில் உள்ள 36 வயது லாரி ஓட்டு னருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
கொரோனா தடுப்பு குழுவினர் அவர்கள் 2 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இது அப்பகுதி மக்கள் இடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே கோட்டாட்சியர் பூங்கோதை, அரியலூர் தாசில்தார் சந்திரசேகர், மாவட்ட திட்ட அலுவலர் சுந்தரராஜன், அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, செந்துறை இன்ஸ்பெக்டர் ராஜ் குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆகையால் உங்களுக்கு இந்த நிவாரண நிதி கிடைக்காது என தெரிவித்துள்ளார். இதனை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் இந்த ஊராட்சியில் யார் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை காட்டுங்கள் என கேட்டுள்ளனர். பின் கடை ஊழியர் இதுவரை 35 பேருக்கு இந்த ஊராட்சியில் வழங்கியுள்ளோம் அவர்களின் பட்டியலை பாருங்கள் என காட்டினார். அதனை பார்த்த தொழிலாளர்கள் இதில் 3 பேர் மட்டுமே ஏழை கட்டிட தொழிலாளர்கள். மற்ற 32 பேரும் கட்டிட தொழிலாளர்களே இல்லை. அவர்கள் அனைவரும் வசதி வாய்ப்பு படைத்தவர்கள். அவர்கள் தனியார் நிறுவனங்களிலும் பல்வேறு துறைகளிலும் பெரிய பெரிய பதவியில் இருந்து வருகின்றனர். அவர்களை எப்படி இந்த பட்டியலில் சேர்த்தீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து தொழிலாளர்கள் அப்பகுதிக்குட்பட்ட டால்மியாபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிவாரண நிதி வழங்குவதை நிறுத்தி வையுங்கள் என கடை ஊழியருக்கு உத்தரவிட்டனர்.
இதுகுறித்து அந்த தொழிலாளர்களிடம் கேட்டதில், இந்த ஊராட்சியில் வழங்கப்பட்டுள்ள அந்த 32 பேரும் கட்டிட தொழிலாளர்களே இல்லை அவர்கள் அனைவரும் வசதி வாய்ப்பு படைத்தவர்கள். பண பலத்தை வைத்து அமைப்புசாரா தொழிலாளர் என அட்டையை வாங்கி உள்ளனர். நாங்கள் தான் உண்மையாக பாதிக்கப்பட்ட ஏழை கட்டிட தொழிலாளர்கள் எங்களுக்கு இதுபோன்று அமைப்புசாரா தொழிலாளர்கள் என பதிவு செய்யவேண்டும் என்ற விவரமே தெரியாது. இதனை தமிழக அரசு உடனே கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையாக பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு நிவாரண நிதி வழங்கி உதவி செய்ய வேண்டும்.
மேலும் இதுபோன்ற அமைப்பு சாரா தொழிலாளர்கள் பட்டியல் சேர்ப்பதற்கு அரசு அலுவலர்கள் கள ஆய்வில் ஈடுபட்டு உறுதி செய்த பின்னரே இந்த அட்டைகளை வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்று பொய்யாக பதிவு செய்து ஏமாற்ற முடியாது எனக்கோரிக்கை வைத்தனர். மேலும் இதுதொடர்பாக புகார் மனுவையும் வெங்கனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அளித்துள்ளனர்.
ஆர்.எஸ்.மாத்தூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறையில் இயங்கிவரும் எஸ்.பி.ஐ. வங்கி மற்றும் திருமானூர் பகுதியில் உள்ள வங்கிகள் அனைத்தும் தற்பொழுது கலெக்டர் உத்தரவின் பேரில் விடுமுறை விடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் பணம் எடுப்பதற்கு வங்கிகள் முன்பு குவிந்தனர். பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் நோய் தொற்று மேலும் பரவாமல் இருக்க மக்கள் நலனில் அக்கறையுடன் வங்கிகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டதாக தகவல் வெளியானது.
மக்கள் அனைவரும் அந்தந்த வங்கிகளில் செயல்படும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கு சமூக இடைவெளி விட்டு நிற்காமல் கூட்டமாக கூடினர். அவர்களை ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த செந்துறை தாசில்தார் முத்து கிருஷ்ணன் இடைவெளி விட்டு நிற்குமாறு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அங்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க ஊராட்சியின் சார்பில் தூய்மை பணியார் கிருமி நாசினி தெளிக்கும் வேலையில் ஈடுபட்டனர்.
முன்னறிவிப்பின்றி வங்கிகள் திடீரென்று மூடப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் இருந்து கடந்த மாதம் 22-ந் தேதி டெல்லி மாநாட்டிற்கு 5 பேர் சென்று வந்தனர். இதில் செந்துறையை சேர்ந்த ஒருவர் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரை ஏற்கனவே மருத்துவ குழுவினர் அரியலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சோதனை மேற்கொண்டனர். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அவரது மெடிக்கலில் வேலை பார்த்த ஊழியர்களை பரிசோதனை செய்தனர். அவர்களில் செந்துறையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், ராயம்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரையும் நள்ளிரவில் மருத்துவ குழுவினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 2 பெண்களின் உறவினர்கள் 10 பேரை மருத்துவ பரிசோதனைக்காக செந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அவர்களுக்கு ரத்த மாதிரி மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக திருச்சிக்கு அனுப்பி வைத்தனர்.
டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில் அவரது கடையில் வேலை பார்த்த 2 பெண்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட மக்கள் இடையே பெரும் பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
செந்துறை:
அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி சென்னை வேளச்சேரி ஷாப்பிங் மாலில் வேலை பார்த்த பூஜா என்கிற தேன்மொழி காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவரது ரத்த பரி சோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இவர் டிக்டாக் பதிவிடுவதில் ஆர்வம் உள்ளவர். இந்த நிலையில் அவர் மருத்துவ மனையின் கொரோனா வார்டில் வேலை செய்த 3 சுகாதார பணியாளர்களிடம் தனது டிக்டாக் பதிவுகளை கொடுத்து பார்க்க கூறினார். இதனால் அந்த 3 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அவர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கொரோனா தொடர்பாக டிக்டாக் கில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். இது சமூக வலை தளங்களிலும், மீடியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகமே கொரோனாவை கண்டு அஞ்சிய நிலையில் இவர் மட்டுமே மிகவும் ஜாலியாக டிக்டாக் செய்து கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு 28 நாட்கள் நிறைவடைந்த நிலையில் பூரண குணமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் இன்று மருத்துவ மனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நேற்று திருச்சி அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த இஸ்லாமியர் அப்துல் ரஹீம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பூஜ்யமாகியுள்ளது.
இதற்கிடையே டிஸ்சார்ஜ் ஆன பூஜா வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோவில், அரியலூர் டாக்டர்கள், காவல் துறையினர் மற்றும் நர்சுகள் என்னை நன்றாக பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு நன்றி. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பயம் இன்றி இருக்க வேண்டும். பயந்தால் கொரொனா நம்மை கொன்று விடும். தைரியமாக இருந்தால் நாம் கொரோனாவை நமது நாட்டை விட்டு விரட்டி விடலாம்.
ஆகையால் அனைவரும் அரசுக்கும், டாக்டர்களுக்கும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூறினார். கொரோனா வார்டில் தனிமையை போக்க ஓவியம் வரைதல், ஸ்வெட்டர் பின்னுதல் உள்ளிட்ட பயனுள்ள வேலைகளில் ஈடுபட்டு தனிமையை பயனுள்ள வகையில் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கெரோனா வைரஸ் நோய் தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் நிதித்துறை சிறப்பு செயலாளருமான அனந்தகுமார் கலந்து கொண்டு கூறியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் சிறப்பாக உள்ளது. மாவட்டத்தில் சுகாதார பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தேவையான முகக்கவசங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயார் செய்யப்பட்டு வருகிறது. சாலை போக்குவரத்தில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்திட வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.
அரியலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட 200 படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அவர், தூய்மைப் பணியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிவரும் லாரிகள் மற்றும் வாகனங்களை காவல்துறையினர் தடை செய்யக் கூடாது. மேலும், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுவதற்காக காலியாக செல்லும் வாகனங்களையும் தடை செய்யவோ, தடுக்கவோ கூடாது. அந்த வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் மற்றொரு நபர் மட்டுமே செல்ல வேண்டும்.
பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்பதையும், மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதியையும் காவல் துறையினர் முழுமையாக கண்காணிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கூட்டத்துக்கு கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். காவல் துறை கூடுதல் இயக்குநர் சைலேஷ்குமார் யாதவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதன்மையர் முத்துகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் பாலாஜி, பூங்கோதை, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஹேமசந்த் காந்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் இருந்து கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் 5 இஸ்லாமியர் கலந்துகொண்டனர். அவர்களில் செந்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செந்துறை பகுதியில் உள்ள ஆறு இடங்களில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அங்கே போலீசார் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க ஏதுவாக ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்த பணியினை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் செந்துறை காவல் நிலையம் முன்பு தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் அரியலூர் மாவட் டத்தில் 144 தடை உத்தரவை தொடர்ந்து 11 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கபடுகிறது. மாவட்டத்திற்கு உள்ளே வரும் அத்தியாவசிய வண்டிகளும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கபடுகிறது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட பகுதியில் இருந்து யாரும் வெளியே செல்லாமலும் யாரும் உள்ளே வராமலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அவரது வீட்டிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அரியலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போன்று அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆகையால் பொது மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியேவர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை, மாவட்ட திட்ட அலுவலர் சுந்தரராஜன், அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு திரு மேனி, தாசில்தார் முத்து கிருஷ்ணன், வட்டாரவளர்ச்சி அலுவலர் சிவாஜி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தன்ராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
அரியலூர்மாவட்டம், செந்துறையில் ஊரடங்கு உத்தரவால் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி, உணவின்றி தவித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு பயன்தரும் வகையில் ரேசன் கடை மூலமாக அனைத்து ஏழை குடும்பங்களுக்கு ரூ.1000 பணம் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.
செந்துறை அருகே உள்ள இலங்கைச்சேரி கிராமத்தில் இயங்கி வரும் பகுதிநேர ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கும் நிழச்சியை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தியா.ராமேஷ் மற்றும் கடையின் ஊழியர் கார்த்தி ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கினர்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கூலி தொழிலாளியான நாராயணன்(வயது 65), கேரள மாநிலத்தில் வேலை பார்த்தார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியது. மேலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்ததையொட்டி நாராயணன், கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். ஆனால் இது பற்றி அவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த 1-ந் தேதி முதல் அவருக்கு கடுமையான காய்ச்சல், இருமல் ஏற்பட்டது. கடையில் மருந்து வாங்கி சாப்பிட்டும் குணமாகவில்லை. இதனால் அவர் கடந்த 6-ந்தேதி அரியலூரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அப்போது டாக்டர்கள் அவரிடம் விசாரித்தபோது, அவர் கேரளாவுக்கு சென்று திரும்பியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கொரோனாவுக்கான தனி வார்டில் அனுமதித்தனர். 7-ந் தேதியன்று அவருடைய சளி, ரத்தம் போன்றவற்றை எடுத்து பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்கான முடிவு இன்னும் வரவில்லை.
இந்நிலையில் தனி வார்டில் இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான நாராயணன், அவர் தங்கி இருந்த அறையிலேயே நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்கள், அரியலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூரில் கொரோனாவுக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






