என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கி மூடல்
    X
    வங்கி மூடல்

    அரியலூர் மாவட்டத்தில் முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட வங்கிகளால் மக்கள் அச்சம்

    அரியலூர் மாவட்டத்தில் முன்னறிவிப்பின்றி வங்கிகள் திடீரென்று மூடப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம், செந்துறையில் இயங்கிவரும் எஸ்.பி.ஐ. வங்கி மற்றும் திருமானூர் பகுதியில் உள்ள வங்கிகள் அனைத்தும் தற்பொழுது கலெக்டர் உத்தரவின் பேரில் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அனைவரும் பணம் எடுப்பதற்கு வங்கிகள் முன்பு குவிந்தனர். பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் நோய் தொற்று மேலும் பரவாமல் இருக்க மக்கள் நலனில் அக்கறையுடன் வங்கிகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டதாக தகவல் வெளியானது.

    மக்கள் அனைவரும் அந்தந்த வங்கிகளில் செயல்படும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கு சமூக இடைவெளி விட்டு நிற்காமல் கூட்டமாக கூடினர். அவர்களை ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த செந்துறை தாசில்தார் முத்து கிருஷ்ணன் இடைவெளி விட்டு நிற்குமாறு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அங்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க ஊராட்சியின் சார்பில் தூய்மை பணியார் கிருமி நாசினி தெளிக்கும் வேலையில் ஈடுபட்டனர்.

    முன்னறிவிப்பின்றி வங்கிகள் திடீரென்று மூடப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

    Next Story
    ×