என் மலர்tooltip icon

    அரியலூர்

    வெப்பச்சலனம் காரணமாக செந்துறை பகுதியில் கனமழை பெய்ததால் மின் கம்பம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் பாதிக்கப்பட்டது.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. இந்தநிலையில் வெப்பச்சலனம் காரணமாக செந்துறை பகுதியில் உள்ள நல்லாம்பாளையம், உஞ்சினி, சிறுகடம் பூர், இரும்புலிக்குறிச்சி, உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணிநேரம் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியது.

    உஞ்சினி மற்றும் சிறுகடம்பூர் இக்கிராமங்களி மரங்கள் முறிந்து முறிந்து விழுந்தது. இதனால் ஐந்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்தது. இதனால் கிராமம் முழுவதும் மின்தடை ஏற்பட்டதோடு, செந்துறை உடையார் பாளையம் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல்அறிந்த இளநிலை மின் பொறியாளர் சரவணன், போர்மேன் பன்னீர் மற்றும் மின் ஊழியர்களும், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி, ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் துணைத் தலைவர் கண்ணன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பினரும் விரைந்து வந்து மின் கம்பிகளில் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி சாலை போக்குவரத்தை சீர் செய்தனர்.

    அரியலூர் மாவட்டத்தில் மோப்ப நாய் பிரிவில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு கடந்த திங்கட்கிழமை முதல் படிப்படியாக அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் கடந்த செவ்வாய்க்கிழமை மோப்ப நாய் பிரிவில் பணியாற்றும் காவலர்கள் உள்ளிட்ட 10 பேரின் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டது. அதில் 35 வயது மோப்ப நாய் பிரிவில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் உடனடியாக திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் மோப்ப நாய் பிரிவில் பணியாற்றும் எட்டு காவலர்களுக்கும் உடனடியாக பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.


    கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றிய அரியலூர் கூலித்தொழிலாளிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 27-ந்தேதி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு சளி, இருமல் இருந்தது. இதையடுத்து அவர் அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். சென்னையில் வைரசின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் முருகேசன் அங்கிருந்து வந்துள்ளதால் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்று சந்தேகம் அடைந்த மருத்துவ குழு அவரது சளி, ரத்தம் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்காக திருவாரூரில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்தனர் .

    ஆய்வில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 6 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். அதில் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 2 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்போது முருகேசன் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் முருகேசன் வசித்த வீடு மற்றும் தெரு பகுதியில் கிருமி நாசினி தெளிப்பது மற்றும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முருகேசனுடன் நெருங்கிப் பழகியவர்கள், உறவினர்கள் யார்-யார்? என்றும் கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட உள்ளதுடன் அவர்களை தனிமைப்படுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
    செந்துறையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நேரத்திலும் இடை விடாது தூய்மைப்பணிகளை செய்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் மளிககை பொருட்கள் வழங்கப்பட்டது.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நேரத்திலும் இடை விடாது தூய்மைப்பணிகளை செய்து வரும் தூய்மை பணியாளர்களுக்கும், டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசி, பருப்பு எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை அ.தி.மு.க. சார்பில் செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் உதயம் ரமேஷ் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்லம், கடம்பன் ஊராட்சி செயலாளர் அமிர்தலிங்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜமால் முகமது, மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் கலிய மூர்த்தி, ஒன்றிய பொருளாளர் மதியழகன், கிளை செயலாளர் நல்லமுருகன் மற்றும் திரளான அ.தி.மு.க.வினரும் கலந்து கொண்டனர்.

    அவசர சிகிச்சைகளுக்காக உயிர்காக்கும் வசதிகளுடன் கூடிய நவீன புதிய ஆம்புலன்ஸ் சேவையை தாமரை ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவசர சிகிச்சைகளுக்காக உயிர்காக்கும் வசதிகளுடன் கூடிய நவீன புதிய ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் அவசர மருத்துவ தேவைகளுக்காக அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை, அரியலூர் போலீஸ் நிலையம், விளாங்குடி, விக்கிரமங்கலம், ஆண்டிமடம், செந்துறை, உடையார்பாளையம், கங்கைகொண்ட சோழபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் 14, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, அவசர தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும், பச்சிளம் குழந்தைகள் உயிர்காக்கும் சிகிச்சை வசதிகள் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் என ஆகமொத்தம் 16 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நமது மாவட்டத்தில் விபத்து, பிரசவம் மற்றும் இதர அவசர உதவிகளுக்கு மக்கள் பயன்படுத்தும் விதமாக இயக்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்து செல்வதற்கும், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிக்கு நோயாளிகளை அழைத்து செல்வதற்கும் வசதியாக நவீன உயிர்காக்கும் வசதிகள் கொண்ட வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்ட நவீன ஆம்புலன்ஸ் வாகனம் இன்று (அதாவது நேற்று) முதல் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நிறுத்தப்பட்டு, அவசர தேவைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது என்றார். இதில் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஆண்டிமடம் அருகே சாராயம் காய்ச்சிய 2 பேரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவி(வயது 38). இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டு அங்கேயே சாராயம் காய்ச்சி உள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாராய ஊறலை கீழே ஊற்றி அழித்தனர். மேலும் காய்ச்சிய சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பாத்திரங்களை கைப்பற்றி ரவி மற்றும் அவரது நண்பர் பழனிவேல்(37) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ஆண்டிமடம் அருகே சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவி(வயது 38). இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டு அங்கேயே சாராயம் காய்ச்சி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாராய ஊறலை கீழே ஊற்றி அழித்தனர்.

    மேலும் காய்ச்சிய சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பாத்திரங்களை கைப்பற்றி ரவி மற்றும் அவரது நண்பர் பழனிவேல்(37) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமானூர் அருகே கடந்த 5 ஆண்டுகளாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.3 ஆயிரம் பணத்தில் ஆயிரம் பேருக்கு ‘சூப்’ வழங்கிய மாணவிக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி அருகே உள்ள குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் அபி(வயது 11). 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கல்வி தொடர்பான பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும், விருதுகளையும் வென்றவர். இவர் கொரோனா வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது கிராமத்தில் உள்ள அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், மூலிகை ‘சூப்’ வழங்க வேண்டும் என தீர்மானித்தார்.

    இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை கொண்டு ‘சூப்’ தயாரிக்க முடிவு செய்தார். அதன்படி முருங்கை கீரை, மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி, சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு கலந்த சூப்பை அவரது தாயாரின் உதவியோடு தயாரித்து கிராமத்தில் உள்ள அனைவருக்கும் வழங்கினார்.

    இதுகுறித்து மாணவி அபி கூறுகையில், ‘எனது கிராம மக்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக எனது பெற்றோர் கொடுத்த பணத்தில் செலவு போக, மீதி நான் சேமித்த பணத்தை வைத்து ‘சூப்’ தயாரித்து கொடுத்து உள்ளேன்’ என்றார். இவரது தந்தை அண்மையில் ஒரு விபத்தில் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தந்தையை இழந்த நிலையில் குடும்பம் வறுமையில் வாடினாலும், மக்கள் நலமுடன் வாழவேண்டும் என்ற சிந்தனையுடன் சிறுமி செய்துள்ள இந்த செயலை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர். 
    தடை செய்யப்பட்ட நேரத்தில் திறந்திருந்த மளிகை கடைக்கு சீல் வைத்து செந்துறை தாசில்தார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் அத்தியாவசிய தேவைக்காக திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் மளிகை கடை, பெட்டிக்கடைகள் திறக்கலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவிட்டுள்ளார்.

    அதனை மீறி ஆங்காங்கே ஒரு சிலகடைகள் திருட்டுத்தனமாக திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தன. இதனை செந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார். அதேபோன்று செந்துறை ராமசாமிநகரில் உள்ள முருகேசன் என்பவரது மளிகைக்கடை தடை செய்யப்பட்ட நேரத்தில் திறந்து வியாபாரம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற தாசில்தார் முத்துகிருஷ்ணன் அதிரடியாக ஆய்வு செய்து மளிகை கடையை பூட்டி சீல் வைத்தார்.
    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ராயம்புரம் கிராமத்தில் வசிக்கும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து ராயம்புரம் கிராமத்திற்கும் கீழராயம்புரம் கிராமத்திற்கும் இடைப்பட்ட சாலை மூடப்பட்டது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ராயம்புரம் கிராமத்தில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவரின் மருந்துக்கடையில் வேலை பார்த்தவர்.

    அவர் மூலமாக அதே தெருவில் மேலும் இரண்டு பேருக்கும் கொரோனா உறுதியானது. அவர்களுடன் தொடர்பில் உள்ள 60-க்கும் மேற்பட்டவர்களை சுகாதாரத்துறையினர் அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். இதற்கான முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.

    ஒரே கிராமத்தில் வசிக்கும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அரியலூர் மாவட்ட கிராம பகுதிகளில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாவட்ட போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்குள் உள்ள காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கொரோனா பரவாத வண்ணம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி இரும்புலிக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் செல்லும் பாதைகளை மூடி வருகின்றனர். அதன்படி ராயம்புரம் கிராமத்திற்கும் கீழராயம்புரம் கிராமத்திற்கும் இடைப்பட்ட சாலையை ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் பொக்லைன் எந்திரம் மூலம் துண்டித்து மண்ணை கொட்டி மூடினார்.

    அதேபோன்று சென்னி வனம் பகுதிக்கு செல்லும் பாதையிலும் மண்ணை கொட்டி மூடினர். மேலும் இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ராயம்புரம் பகுதியில் இருந்து யாரும் உள்ளே வராமலும் இங்கிருந்து யாரும் வெளியே செல்லாமலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    ஊராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து சாலைகளை வெட்டிய சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    செந்துறை அருகே ஊரடங்கு காரணமாக தங்கியிருக்கும் வடமாநில-நரிக்குறவனர் இன மக்களுக்கு தேமுதிக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள ராயல் சிட்டியில் தங்கியிருக்கும் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் சில மாதங்களாக இங்கு வசித்து வருகின்றனர்.

    மேலும் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள், கட்டிட வேலை தேடி வந்தவர்கள் ஊரடங்கால் எங்கேயும் போக முடியாமல் தவித்து வந்தனர். இவர்களுக்கு தே.மு.தி.க. சார்பாக செந்துறை ஒன்றியத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து உணவின்றி தவித்த வந்த 50 பேருக்கும், வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் அரிசி, பால், காய்கறி, பருப்பு, எண்ணை மற்றும் சமையல் பொருட்கள் வழங்கினர்.

    அரியலூர் மாவட்ட முன்னாள் பொருளாளர் ராஜா பன்னீர்செல்வம் தலைமை யில், தே.மு.தி.க. நிர்வாகிகள் ராஜேந்திரன், புயல் செல்வம், சரவணன், தர்மலிங்கம், முருகவல்லி ரவி, ஊராட்சி மன்ற தலைவர் செல்வி குமார், கல்பனா சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கொரோனா மீட்டெடுத்த பண்டமாற்று முறையால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வி.கைகாட்டி:

    உலகமே கொரோனா பீதியில் உறைந்திருந்தாலும், பல நன்மைகளை செய்திருக்கிறது கொரோனா என்று சொன்னால் மிகையாகாது. கொரோனாவால் மக்கள் மத்தியில் பாரம்பரிய உணவு வகைகள் பிரபலமாகி வருகிறது.

    அந்த வகையில், கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருப்பதால், விளைந்த விவசாய பொருட்களை வெளியில் கொண்டு செல்ல வழி இல்லாத காரணத்தால் உள்ளூரில் விளையக்கூடிய பொருட்களை தங்களுக்குள்ளேயே மாற்றிக்கொள்வது என அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே செட்டித்திருக்கோணம் கிராம மக்கள் முடிவெடுத்து நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பண்டமாற்று முறையை கையில் எடுத்துள்ளனர்.

    இந்த பண்டமாற்று முறையில் வரும் நன்மைகள் குறித்து செட்டித்திருக்கோணம் கிராம மக்கள் கூறியதாவது:-

    பண்டமாற்று முறை வியாபாரத்தில் பணம் பிரதானமாக பார்க்கப்படுவது கிடையாது. இதனால் தாறுமாறாக விலையை ஏற்றி மக்களை வாட்டி வதைக்கும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு விலைவாசி உயர்வு என்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு முழுபலனும் விவசாயிகளை சென்றடையும். மண் சார்ந்த உணவுகளை பகிரும்போது இயல்பாகவே அது பொதுமக்களின் உடல் நலனுக்கும் நல்லதாகவே இருக்கும். பண்டமாற்று முறை மூலம் வெறும் பொருள் வியாபாரம் மட்டுமல்ல அன்பும் பரிமாற்றம் செய்யப்படுகிறது. யாருக்கு என்ன பொருள் வேண்டுமோ அதற்கு மாற்றாக தங்கள் வயலில் விளைந்த பொருட்களை கொடுத்து பரிமாறிக் கொள்வர். உதாரணமாக வெங்காயம் விளைவித்தவர்கள் கடலையை பரிமாறிக்கொள்வர்.

    கத்தரிக்காய் உற்பத்தி செய்தவர்கள் வெண்டைக்காயை பகிர்ந்து கொள்வர். நெல் விளைவித்தவர்கள் பருத்தியை பகிர்ந்து கொள்வர். சுண்ணாம்புக்கல் உற்பத்தி செய்பவர் வெல்லம் வாங்கிக்கொள்வர்.

    இதன் மூலம் பணம் பிரதான பொருளாக இருக்கவே இருக்காது. காந்தியடிகள் சொன்ன கிராம பொருளாதாரம் என்பது வெறுமனே பணத்தை மையப்படுத்துவது அல்ல. பண்டமாற்று முறை மூலம் ஆக்கப்பூர்வமான தொழில்கள் பட்டியலில் விவசாயமே பிரதான தொழிலாக முதன்மை இடத்தில் இருக்கும். இதனால் தற்சார்பு பொருளாதாரம் மேன்மை அடையும். பணப்பொருளாதாரம் மக்களை கடன்காரர்களாக ஆக்கிவிட்டது. முதன்மைப்படுத்திய பண பொருளாதாரத்தை உடனடியாக கைவிட்டு பண்டமாற்று முறைக்கு திரும்புவோம்.

    இவ்வாறு அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
    ×