search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்ணீர் தட்டுப்பாடு
    X
    தண்ணீர் தட்டுப்பாடு

    ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    ஜெயங்கொண்டம் அருகே போர் குழாயிலிருந்து குடிநீர் குழாய்க்கு வரும் வால்வு பழுதடைந்து உள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை சரி செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமம் 21 வது வார்டு மெயின் ரோட்டில் சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதிக்கு போர் மூலம் நேரடியாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் போர் குழாயிலிருந்து குடிநீர் குழாய்க்கு வரும் வால்வு பழுதடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என அப்பகுதிமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் கடந்த  15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் நேற்று திடீரென ஜெயங்கொண்டம்  செந்துறை சாலையில் செங்குந்தபுரம் பஸ் நிறுத்தத்திற்கு அருகே மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் பாபு, வசந்த் ஆகியோர் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர். 

    இதனிடையே நகராட்சி ஆணையர் அறச்செல்வி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து வால்வினை மாற்றி சரிசெய்து குடிநீர் வழக்கம் போல் வழங்கப்பட்டது. 
    Next Story
    ×