search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு தலைமைக் கொறடா.தாமரை எஸ்.ராஜேந்திரன்
    X
    அரசு தலைமைக் கொறடா.தாமரை எஸ்.ராஜேந்திரன்

    கொரோனாவை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்- அரசு தலைமைக்கொறாடா வலியுறுத்தல்

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அரசு தலைமைக்கொறாடா .தாமரை எஸ்.ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அரசு தலைமைக் கொறடா.தாமரை எஸ்.ராஜேந்திரன் மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது அரசு தலைமைக் கொறடா தெரிவித்ததாவது:-

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசும், மாநில அரசும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் தடுப்பு நடவடிக்கையை தமிழகத்தில் முடிக்கிவிட்டு விழிப்புணர்வு பணிகளும், தொற்று நோய் பராவா வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது. பொதுமக்களாகிய நாமும் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி கூட்டம் சேராத வண்ணம் தங்க ளையே தனிமைப்படுத்தி தொற்று நோய் ஏற்படாமல் தங்களையும், இந்த நாட்டு மக்களையும் பாதுகாக்க ஒத்துழைப்பு தர வேண்டும்.

    பொதுமக்கள் கூட்டமாக இருக்க வேண்டாம். ஒருவகொருவர் பேசும் போது தங்களுக்குள் இடை வெளிவிட்டு நின்று பேசவும், குடும்ப உறுப்பினர்களே இடைவெளி விட்டு இருக்கவும். மேலும் வெளியிடங்களில்  நடமாடுவதை தவிர்க்கவும், பொதுமக்களாகிய நீங்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே இத்தகைய நோய் தொற்று பரவாமல் தடுக்க முடியும் வரை அரியலூர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் மருத்துவக்குழுக்கள் கண்காணித்து வருகின்றனர்.

    அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைகளில் 200 படுகைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட அறை தயார் நிலையில் உள்ளது. இந்த அறையில் நோய் தொற்று உள்ளவர் களுக்கு சிகிச்சை வழங்குவ தற்கு 200 படுக்கை வசதிகளுடனும், தீவிர சிகிச்சை பிரிவில் 20 படுக்கை வசதி களும், 10 வென்டிலேட் டர்கள், 20 மானிட்டர், தேவையான மருந்துகள், பாதுகாப்புகவசங்கள், கிருமி நாசினிகள் தயார் நிலையில் உள்ளன. 2 தனியார் மருத்துவமனைகளில் 65 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து தனியார் கல்லூரி விடுதிகளில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தி  தங்கி சிகிச்சை பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மாவட்ட தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் சுழற்சிமுறை யில் பணிபுரிவதற்கு 3 மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மாவட்ட அளவில் 20 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்ட்டு தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக பணியாற்றி வரு கின்றனர்.

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04329 228709 என்ற தொலை பேசி எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் அருகிலுள் ளவர்களுக்கு காய்ச்சல் ஏதே னும் அறியப்பட்டாலோ மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பொ.சந்திரசேகரன், மருத்துவக் கல்லூரி தலைவர் முத்துகிருஷ்ணன், இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) (பொறுப்பு) மரு. இளவரசன், துணை இயக்குநர் ஹேமசந்த்காந்தி, தலைமை மருத்துவ அலுவலர் ரவிசங்கர், மருத்துவர்கள் ரமேஷ் சரவணன், மணிகண்டன் வட்டாட்சியர் சந்திரசேகரன் மற்றும் செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×