என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் டிரைவர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஜூப்ளி ரோடு அருகே உள்ள நாச்சியார் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அப்துல்ரஹிம். சரக்கு வேன் டிரைவரான இவர் மிட்டாய் வியாபாரமும் செய்து வருகிறார். இவர் கடந்த 28-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது சகோதரியை பார்ப்பதற்காக சென்னை சென்றார்.
பின்னா் நேற்று முன்தினம் இரவு ஜெயங்கொண்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவா் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ மற்றும் பெட்டிகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 3 கிராம் தங்க நகை, பெட்டியில் இருந்த ரூ.35 ஆயிரம் உள்ளிட்டவை திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடையார்பாளையம் அருகே பெண்ணை தாக்கியதாக தம்பதி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவருடைய மனைவி பாத்திமா(வயது 40). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் மகிமைராஜ் என்பவருக்கும் இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது மகிமைராஜ், அவருடைய மனைவி ரோஷியா உள்பட 5 பேர் சேர்ந்து பாத்திமாவை தாக்கியுள்ளனர். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் பாத்திமா புகார் அளித்தார். அதன்பேரில் 5 ேபர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஆடுகள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த பிலிச்சிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஆசைதம்பி(வயது 38). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது வெள்ளாடுகளை மேய்த்துவிட்டு வந்து, வீட்டு தாழ்வாரத்தில் ஆடுகளை கட்டிவிட்டு தூங்க சென்றுவிட்டார்.
இந்நிலையில் நள்ளிரவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு ஆசைதம்பி எழுந்து வந்து பார்த்தபோது, 2 மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச்செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் 2 பேரையும் விரட்டிப்பிடித்து உடையார்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் மீன்சுருட்டியை அடுத்த வளவநல்லூர் கிராமத்தை சேர்ந்த தாஸ்(25), சிலம்பரசன்(21) என்பது தெரியவந்தது. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார்.

அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர், ஜெயங்கொண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கு என மொத்தம் 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று தா.பழூர், ஜெயங்கொண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கு என மொத்தம் 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,634 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே 48 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 4,553 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிற்கு தற்போது 33 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 449 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே மாவட்டத்தில் 2,256 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,234 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் 294 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டத்தில் இந்து முன்னணியின் மாநில தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
திண்டுக்கல்லில் கிரிவலம் சென்றதாக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தை திண்டுக்கல் போலீசார் கைது செய்ததாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று முன்தினம் இரவு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் இந்து முன்னணியினர் மறியலில் ஈடுபட்டனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற மறியலில் கலந்து கொண்ட மாவட்ட நிர்வாகி பழனிசாமி உள்ளிட்ட இந்து முன்னணியினர், காடேஸ்வராவை விடுதலை செய்யக்கோரி கோஷமிட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் உள்ளிட்ட போலீசார் கைது செய்தனர்.
இதில் மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் விடுவித்தனர்.
கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் அரியலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் அரியலூர் மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) இரவு உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதியில்லை.
மேலும் இரவில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக அதிவேகத்தில் இருசக்கர வாகனங்களை இயக்கிக்கொண்டு வீதிகளில் அதிக இரைச்சல், சத்தத்துடன் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக செல்லுதல், பொது இடங்களில் அதிகமான நபர்கள் ஒன்றாக சேர்ந்து கூட்டமாக கூடுதல், கேளிக்கையாக வாண வேடிக்கை மற்றும் பட்டாசுகளை பொது இடங்களில் வெடித்தல் மற்றும் அதிக சத்தத்துடன் கூடிய பாடல் மற்றும் இசையினை ஒலிக்கச்செய்தல் போன்ற புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் அனுமதியில்லை.
இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
செந்துறை அருகே சாலையை பழுது பார்க்கும் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மருதூர் கீழ்ப்பட்டியில் இருந்து குவாகம் செல்லும் சாலை உள்ளது. சமீபத்தில் இந்த சாலையை சீரமைக்கும் பணிகள் நடந்தன. அப்போது ஒப்பந்ததாரர்கள் தரமாக சாலை அமைக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று, சீரமைக்கப்பட்ட சாலையில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றன. இதனைக்கண்ட கிராம மக்கள் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த குவாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுக்கும்படி போலீசார் கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
நில அளவீடு செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கீழநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). விவசாயியான இவர், தனி பட்டாவாக மாற்றுவதற்கு தனது நிலத்தை அளந்து கொடுக்கும்படி ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தார்.
இந்நிலையில் கீழநத்தம் பகுதி நில அளவையரான கல்லாத்தூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (47), கார்த்திக்கின் நிலத்தை அளப்பதற்கு ரூ.5 ஆயிரம் தரவேண்டும் என கேட்டுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கார்த்திக், லஞ்சம் கொடுக்க விரும்பாமல், இது குறித்து அரியலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து நில அளவையர் சீனிவாசனை பொறி வைத்து பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, அவர்கள் ரசாயன பொடி தடவிய பணத்தை கார்த்திக்கிடம் கொடுத்து, அதனை சீனிவாசனிடம் கொடுக்குமாறு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை கோவிந்தபுத்தூர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நிலத்தை அளந்து கொண்டிருந்தபோது சீனிவாசனிடம், கார்த்திக் ரசாயன பொடி தடவிய பணத்தை கொடுத்துள்ளார். சீனிவாசன் அதை வாங்கியபோது, அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து வந்து, அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

உடையார்பாளையம்- முனியத்திரையான்பட்டி இடையே குண்டும், குழியுமான தார் சாலையால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் இருந்து முனியத்திரையான்பட்டி வரை சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு தார் சாலை உள்ளது. இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக இந்த சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் உள்ளிட்டோர் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் தற்போது பெய்த மழையால் அந்த சாலை மிகவும் சேதமடைந்து, பள்ளங்களில் தண்ணீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளங்களில் வாகனங்கள் ஏறி இறங்கும்போது தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது.
அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்களும் விபத்தில் சிக்குகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உடையார்பாளையம்- முனியத்திரையான்பட்டி இடையே உள்ள சேதமடைந்த தார் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
திருவெங்கனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தசாமி மகன் சுரேஷ்குமார்(வயது 30), கோவிந்தராஜ் மகன் செல்லதுரை. இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு திருமானூரில் இருந்து திருவெங்கனூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வந்தபோது, எதிரே அரியலூரில் இருந்து தஞ்சை நோக்கி வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் பகுதியில் உள்ள கோவில்களில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டத்தில் நவக்கிரகங்கள் உள்ள கோவில்களில் நேற்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அரியலூாில் கைலாசநாதர் கோவில், ஐந்து முக விநாயகர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
மீன்சுருட்டியை அடுத்த கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் நவக்கிரக பீடம், ஒரே கல்லில் அமைந்துள்ளது. இதில் சனிபகவான், 7 குதிரைகள் பூட்டிய ரதத்தை மேற்கு முகமாக செலுத்துவது போன்று உள்ளது. நேற்று இக்கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. தனசு ராசியில் இருந்து மகர ராசிக்கு நேற்று அதிகாலை 4.49 மணிக்கு சனிபகவான் இடம் பெயர்ந்ததை தொடர்ந்து நவக்கிரகத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சனி பகவானுக்கு பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகமும், யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீரால் அபிேஷகமும் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதில் பரிகாரங்கள் செய்து பலன் பெற வேண்டிய ராசிக்காரர்கள் பரிகார பூஜை செய்து வழிபட்டனர். மேலும் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபமேற்றி, சனிபகவானை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சிலம்பரசன் மற்றும் தொல்பொருள் துறை பணியாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் விக்கிரமங்கலம் மெயின்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி விக்கிரமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த அரியதங்கம் (வயது 28) என்ற பெண்ணின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அரியதங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.