என் மலர்
செய்திகள்

மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை படத்தில் காணலாம்.
ஜெயங்கொண்டத்தில் மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 13 பேர் கைது
ஜெயங்கொண்டத்தில் இந்து முன்னணியின் மாநில தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
திண்டுக்கல்லில் கிரிவலம் சென்றதாக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தை திண்டுக்கல் போலீசார் கைது செய்ததாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று முன்தினம் இரவு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் இந்து முன்னணியினர் மறியலில் ஈடுபட்டனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற மறியலில் கலந்து கொண்ட மாவட்ட நிர்வாகி பழனிசாமி உள்ளிட்ட இந்து முன்னணியினர், காடேஸ்வராவை விடுதலை செய்யக்கோரி கோஷமிட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் உள்ளிட்ட போலீசார் கைது செய்தனர்.
இதில் மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் விடுவித்தனர்.
Next Story






