என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    உடையார்பாளையம் அருகே ஆடுகள் திருடிய 2 வாலிபர்கள் கைது

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஆடுகள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த பிலிச்சிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஆசைதம்பி(வயது 38). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது வெள்ளாடுகளை மேய்த்துவிட்டு வந்து, வீட்டு தாழ்வாரத்தில் ஆடுகளை கட்டிவிட்டு தூங்க சென்றுவிட்டார்.

    இந்நிலையில் நள்ளிரவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு ஆசைதம்பி எழுந்து வந்து பார்த்தபோது, 2 மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச்செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் 2 பேரையும் விரட்டிப்பிடித்து உடையார்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் மீன்சுருட்டியை அடுத்த வளவநல்லூர் கிராமத்தை சேர்ந்த தாஸ்(25), சிலம்பரசன்(21) என்பது தெரியவந்தது. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார்.
    Next Story
    ×