என் மலர்
அரியலூர்
- போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- பஸ் நிலையத்திற்கு வந்து முடிவடைந்தது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட காவல்துறை மற்றும் ஜெய–ங்கொண்டம் உட்கோட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவ–லகம் முன்பாக தொடங்கி அண்ணா சிலை வழியாக பஸ் நிலையத்திற்கு வந்து முடிவடைந்தது.
போலீஸ் இன்ஸ்பெ–க்டர்கள் ஜெகதீசன் (தா.பழூர்), குணசேகரன் (ஆண்டிமடம்), கோபி (மீன்சுருட்டி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் தொடங்கி வைத்தார்.
பேரணியில் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி தாளாளரும், பரப்பிரம்மம் பவுண்டேஷன் நிறுவனத் தலைவருமான முத்துக்குமரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், ராஜசேகர், இளங்கோவன் ரமேஷ் உள்ளிட்ட போலீசார்கள், பொதுமக்கள்,
அன்னை தெரசா நர்சிங் கல்லூரி மாணவியர்கள் உள்ளிட்டோர் போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பதாகைகையிலேந்தி வாசகங்களை கோஷமிட்டவாறு பொதுமக்களுக்கு விழுப்ப்புணர்வு ஏற்படுத்தி பேரணியாக சென்றனர். முடிவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் நன்றி தெரிவித்தார்.
- வாகன விபத்தில் குழந்தைகள் உட்பட 4 பேர் காயம் ஏற்பட்டது.
- லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்
அரியலூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிப்பூம்பட்டினம் தாலுகா கல்லுகொடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 37) இவரது மனைவி அம்சவேணி (35), குழந்தைகள் யாழினி (8), செழியன் (7) ஆகியோர் காரில் கிருஷ்ணகிரியில் இருந்து கும்பகோணம் அருகே உள்ள சூரியநாராயணன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கிருஷ்ணகிரி செல்ல அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் ரோட்டில் கூவத்தூர் அருகே மடத்தெரு பகுதியில்சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ரமேஷ் ஓட்டி வந்த காரும், எதிரே சாம்பல் லோடு ஏற்றி வந்த டாரஸ் லாரியும் எதிர்பாராத வித–மாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த ரமேஷ், அவரது மனைவி அம்சவேணி, குழந்தைகள் யாழினி, செழியன் உள்ளிட்ட அனைவரும் பலத்த காயமடைந்து காரில் சிக்கியிருந்தனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்கள் அனைவரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இது குறித்து லாரி டிரைவர் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுக்கா பகடப்பாடி கோபியை (39) போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மக்கள் நீதிமன்றத்தில் 90 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
- 87 குற்ற வழக்குகள் வரப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துரை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. செந்துறை நீதிமன்ற நீதிபதி ஏக்னெஸ் ஜெப கிருபா மற்றும் அரியலூர் மகிளா நீதித்துறை நடுவர் கற்பகவள்ளி ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்ற
இந்த சமரச நீதிமன்றத்தில் 90 வழக்குகள் கொண்டு வரப்பட்டது. அந்த வழக்குகளை எடுத்து நடத்தும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்கள் ஆஜராகினர். நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தி அவர்களின் ஒப்புதலுடன் 87 குற்ற வழக்குகள் மற்றும் 3 சிவில் வழக்குகளை சமரசம் செய்து வைத்தனர். இது போன்று மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு இல்லை என்பது இதன் முக்கிய அம்சமாகும்.
- மாளிகை மேடு அகழாய்வில் அன்றாடம் நடைபெறும் பணிகளை உடனுக்குடன் மதிப்பீடு செய்ய உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது
- முதல்வர் பணியை தொடங்கிவைத்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ராஜேந்திர சோழனின் அரண்மனை அமைந்திருந்த மாளிகை மேட்டில் நடந்து வரும் இரண்டாம் கட்ட ஆய்வு பணிகளை தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
மாளிகைமேடு இரண்டாம் கட்ட ஆய்வு பணியை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியது கடந்த மார்ச் 11ஆம் தேதி காணொளி மூலம் தமிழக அரசு முதல்வர் ஸ்டாலின் இதற்கான பணியை தொடங்கிவைத்தார்.
இதையடுத்து நடந்த விழாவில் சோழர் காலத்து கட்டடங்கள் பழங்கால அரண்மனை சுற்றுச் சுவர்களின் தொடர்ச்சி கண்டுபிடிக்கப்பட்டது.
சில வாரங்களுக்கு முன்பு பழங்கால பாறை மற்றும் ஐம்பொன் கலந்த செப்பு காப்பு கண்டெடுக்கப்பட்டது. தமிழக தொல்லியல் துறை ஆணையர் ஜீவானந்தம் தலைமையிலான குழுவினர் மாளிகையில் நடந்தவரும் அகழாய்வு பணிகளை ஆய்வு செய்தனர்.
நீளம் மற்றும் உயரத்தில் அளவுகளை சரி பார்த்து அன்றாடம் நடைபெறும் பணிகளை உடனுக்குடன் மதிப்பீடு பட்டியல் தயார் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் கவனமாக இருக்க வேண்டும். என அலுவலர்களிடம் அறிவுறுத்தினர் தொல்லியல் வல்லுநர் பேராசிரியர் ராஜன் இணை இயக்குனர் பாக்கியலட்சுமி பொறுப்பாளர் சுபலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.
- முதல்வர் விருதுபெற தொண்டுநிறுவனங்களுக்கு அழைப்பு
- 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் பெண்களின் முன்னனேற்றத்துக்காக சேவைப் புரிந்தோர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழக முதல்வர், சுதந்திரதினத்தன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்தோர் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கு விருது வழங்க உள்ளார். அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள், சமூக சேவகர்களில் கீழ்காணும் தகுதியுடையவர்கள் வருகிற 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவர், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம், போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுன்றன.
சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும். இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்களுடன் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் விண்ணப்பித்து, அதன் நகலினை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 20இல் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை 04329 228516 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். என்று தெரிவித்துள்ளார்.
- விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை வழிபாடு நடந்தது.
- சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அரியலூர்;
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை வழிபாடு நடைபெற்றது. கார்த்திகையை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்திய வேலவர், உற்சவ மூர்த்தியான வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் ஆகிய தெய்வங்களுக்கு மஞ்சள் பொடி,
மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சரண கோஷங்கள் முழங்க பிரதட்சணம் நடைபெற்றது.
- அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- டிரைவர் மீனாட்சிசுந்தரம் புகார் அளித்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உடையவர் தீயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கமலம். இவரது மகன் செல்வமூர்த்தி(வயது 26). இவர் ஒரு அரசு பஸ்சில் நேற்று முன்தினம் மாலை வந்து கொண்டிருந்தார். காட்டுப்பிரிங்கியம் வி.கைகாட்டி அருகே பஸ் வந்தபோது பஸ்சில் பயணித்த செல்வமூர்த்தி திடீரென எழுந்து
பஸ் டிரைவரான கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்த மீனாட்சிசுந்தரத்தை தகாத வார்த்தையால் திட்டியதோடு, அவரை பணி செய்ய விடாமல் தடுத்து, பஸ் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் டிரைவர் மீனாட்சிசுந்தரம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிந்து செல்வமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள காந்தி பூங்கா முன்பு இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம்களின் இறைத்தூதராக கருதப்படும் முகமது நபியை இழிவுபடுத்தும் விதமாக பேசிய பா.ஜ.க.வை சேர்ந்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
ஐக்கிய முஸ்லிம் ஜமாத் மாவட்ட செயலாளர் முகமது ஷெரீப் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் யாகூப், தலைமை கழக பேச்சாளர் காதர்பாட்சா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ரெத்தினம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மண்டல பொறுப்பாளர் அப்துல் ரகுமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்புச் செயலாளர் திருமாவளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது தொடர்ந்து முஸ்லிம் மக்களுக்கு எதிராக பேசி வரும் பா.ஜ.க.வினர், மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
- வாகன விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்
- 2பேர் காயமடைந்தனர்
அரியலூர் :
அரியலூர் கோ. குடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 18). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் பாரதி மோகன் (22), தினேஷ் (18) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் கைகாட்டி பகுதிக்கு சென்றார்.
அப்போது அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பி கொண்டு மெயின் ரோட்டுக்கு வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சந்தோஷ், பாரதிமோகன், தினேஷ் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பின்னர் பலத்த காயமடைந்த சந்தோஷ் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்பட்டது. படுகாயமடைந்த மற்ற இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பின்னர் கடலூர் காட்டுமன்னார்கோவில் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் வீரமணி (22) என்பவரை கைது செய்தார்.
- எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
- கலெக்டர் தெரிவித்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) தலைமையில் வருகிற 28.6.22 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டுதங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயன் அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை நடக்கிறது.
- மேல்முறையீடு செய்ய முடியாது.
அரியலூர்:
தேசிய, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்ற வளாகத்திலும்
மற்றும் செந்துறை நீதிமன்றத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் பேசி தீர்வு காணப்படவுள்ளது. தேசிய மக்கள் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது.
கடுமையான நடைமுறைகளின்றி ஏழை, எளிய மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க உதவி புரிகிறது. வழக்காடிகள் செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளவும் வழி உள்ளது. அதனால் கட்டணமில்லா விரைவான நீதி, இருதரப்பினரின் விருப்பத்திற்கிணங்க தீர்வு பெற முடியும் என்பதால் இந்த வாய்ப்பினை மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தேசிய மக்கள் நீதிமன்ற அமர்வு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மகாலட்சுமி தலைமையில், கூடுதல் மாவட்ட நீதிபதிகள் மற்றும் அனைத்து நீதிபதிகள், வக்கீல்கள், அரசு அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் நடைபெறும். எனவே, வழக்காடிகளும், பொதுமக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த தகவலை அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- ஆறாம் ஆண்டு புத்தகத் திருவிழா தொடங்கியது
- அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்
அரியலூர் :
அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் அரியலூர் மாவட்ட தமிழ் பண்பாட்டு பேரமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் சார்பில் 6-ம் ஆண்டு புத்தகத் திருவிழா தொடங்கியது.
விழாவுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, அரியலூர் எம்.எல்.ஏ. வக்கீல் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்,
நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசியதாவது:
புத்தகம் படிக்கும் பழக்கம் வந்தால், சிந்திக்கும் திறன் வரும். சிந்திக்கும் திறன் வந்தால், அறிவு பெருகும். அறிவு பெருகினால், முன்னேற்றம் ஏற்படும். எனவே, நல்ல புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏன் உலகத் தலைவர்கள் அனைவரும், புத்தகங்களை வாசித்ததன் மூலம் தான் உயர்வான இடத்தினை அடைந்தார்கள்.
பல்வேறு அறிஞர்கள் எல்லாம், தனித்து சிந்தித்ததால் தான், வழக்கமான பாதையிலிருந்து விலகி, புதிய பாதை படைத்தனர். அதற்கு, புத்தக வாசிப்பு தான். எனவே அனைத்து தரப்பினரும் புத்தகங்கள் வாசிப்பதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பொதுத் தேர்வில் மாநிலத்தில், மாவட்டத்தில் முதல் மதிப்பெண் என்பதை சொல்லக்கூடாது. இதனை பள்ளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும். பள்ளி வளர்ச்சியில் பள்ளி மேலாண்மை குழுவின் பங்கு முக்கியமாக உள்ளது. அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து பள்ளி மேலாண்மை குழு மூலம் பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் கீழ் ஊராட்சி தலைவருக்கு உரிய பயிற்சிகளும் வழங்கப்படும். தற்காலிகமாக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் 13,300 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக உடனடியாக பணி நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு காலதாமதமாகும் என்பதால் தற்காலிக அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். இதில் இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்களை வரும் 1-ந்தேதி முதல் நிரப்புவதற்கான பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






