search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்
    X

    நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

    • தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை நடக்கிறது.
    • மேல்முறையீடு செய்ய முடியாது.

    அரியலூர்:

    தேசிய, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்ற வளாகத்திலும்

    மற்றும் செந்துறை நீதிமன்றத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் பேசி தீர்வு காணப்படவுள்ளது. தேசிய மக்கள் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது.

    கடுமையான நடைமுறைகளின்றி ஏழை, எளிய மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க உதவி புரிகிறது. வழக்காடிகள் செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளவும் வழி உள்ளது. அதனால் கட்டணமில்லா விரைவான நீதி, இருதரப்பினரின் விருப்பத்திற்கிணங்க தீர்வு பெற முடியும் என்பதால் இந்த வாய்ப்பினை மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    தேசிய மக்கள் நீதிமன்ற அமர்வு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மகாலட்சுமி தலைமையில், கூடுதல் மாவட்ட நீதிபதிகள் மற்றும் அனைத்து நீதிபதிகள், வக்கீல்கள், அரசு அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் நடைபெறும். எனவே, வழக்காடிகளும், பொதுமக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இந்த தகவலை அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×