என் மலர்tooltip icon

    அரியலூர்

    • சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்
    • 96 மதுபாட்டில்கள் பறிமுதல்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பரண்டு கலைக்கதிரவன் ஆலோசனையின் பேரில் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லாத்தூர் வடவீக்கம் சுடுகாட்டுப்பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த தர்மசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த குமார் என்கிற கட்டில் குமார் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 96 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
    • அரியலூரில் நாளை நடக்கிறது.

    அரியலூர்:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் கோட்டம் சார்பாக மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம். மேலும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாரம்பரிய பயிர் விதை திருவிழா நடைபெற்றது
    • முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்

    அரியலூர்:

    அரியலூர் அரசு மேல்நி–லைப் பள்ளி வளாகத்தில், தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் விதைத்திருவிழா நடைபெற்றது. இவ்விதை திருவிழாவில் பாரம்பரிய விதைகளான நீலப்புடலை உள்ளிட்ட காய்கறிவிதைகள், மூலிகை–கள், அரிசி வகை–களான மாப்பிள்ளை சம்பா, நவரா, குதிரைவாலி, ஆத்தூர் கிச்சடி சம்பா உள்ளிட்டவைகளும், நவதானியங்களான வரகு, பனிவரகு, சாமை, தினை, நவதானியத்தில் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள், நாட்டு துவரை, நாட்டு பருத்தி விதைகள் (மூன்றுவருடம் விளைச்சல் தரும் கருங்க–ண்ணி உள்ளி–ட்டவை), கீரை வகைகள், தேன், செம்புபாத்திரங்கள், இயற்கை முறையில் தயா–ரான வாசனைத் திரவிய–ங்கள், சோப்பு வகைகள்,

    மர செக்கில்தயாரான எண்ணெய் வகைகள், காய்கறி விதைகள், அபூர்வ வகை மரச்செடிகள், மற்றும் விதைகள், நாட்டு வகை மாடுகள், கோழிகள், பஞ்சகாவ்யா, பூச்சி விரட்டிகள் ஆகியவை விற்பனைக்குகாட்சி படுத்தியிருந்தனர்.

    இந்த திருவிழாவை காணவந்த விவசாயிகள், பாரம்பரிய விதைகள், இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், செடிகள் உள்ளிட்டவைகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். மேலும் இந்த திருவிழாவில் இயற்கை இடுப்பொருள்கள், இயற்கை உணவு முறைகள், வீட்டு தோட்டம் அமைப்பது குறித்து ஆலோசனை வழங்க–ப்பட்டது.

    இவ்விழாவை மாவட்ட முதன்மை நீதிபதி மகா–லட்சுமி தொடங்கி வைத்து, அரங்குகளை பார்வை–யிட்டார். சட்டப் பேரவை உறுப்பி–னர் கு.சின்னப்பா சிறப்புரையாற்றினார்.

    விழாவில் பங்கேற்ற இயற்கை ஆர்வலர்கள், மரபுநெல் வகைகள்,நாட்டு விதை ரகங்கள், கரும்பு விவசாயம், நாட்டுப் பருத்தி உள்ளிட்ட விதைகள் குறி–த்தும், இயற்கை முறையில் சாகுபடி செய்வது குறித்தும் விவசாயிகளிடம் விளக்கினர்.மேலும் இயற்கை வழியில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து பேசினார்.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ரமேசு, கருப்பையா, தமிழ்களம் இளவரசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • இலவச தொழில் பயிற்சியில் சேர வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • வங்கி கடன் பெற தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் சுய வேலைவாய்ப்புபயிற்சி நிறுவனம் சார்பில் நடத்த–ப்படும் கீழ்கண்ட இலவச தொழிற் பயிற்சி பெற ஆர்வமுள்ள வேலை–வா–ய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிப்பதாவது: எலக்ட்ரிக்கல், மோ–ட்டார் ரீவைண்டிங்,சிசிடிவி இன்ஸ்டாலேசன் மற்றும் சர்வீஸிங் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

    எவ்வித கட்டணமும் இன்றி 100 சதவீதம் செயல்மு–றை பயிற்சி, சீருடை, மூன்று வேலையும் உணவு, தேநீர், விடுதியில் தங்கி படிக்கும் வசதி, யோகா பயிற்சி மற்றும் பயிற்சி சான்றிதழ் உட்பட அனைத்தும் இலவச–மாக வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் தொழில் தொடங்குவதற்கும் வங்கி கடன் பெற தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். மேற்கண்ட பயிற்சி வகுப்புகள் 25.07.2022 அன்று தொடங்க–ப்படுகிறது. பயிற்சி பெற விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும். 18-45 வயதுக்குள் இருக்க வேண்டும். எழுத படிக்க தெரிந்தால் போதும்,

    பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4, ஆதார் மற்றும் ரேசன் கார்டு, மாற்றுச் சான்றிதழ், 100 நாள் வேலை அட்டை ஆகிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    முன்பதிவு தொடர்புக்கு : 9944850442, 9626497684, 7539960190, 7804202360, 9626644433, இயக்குநர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (ஆர்.டி.ஓ அலுவலகம் பின்புறம்), திருச்சி மெயின்ரோடு, கீழுப்பழுவூர், அரியலூர் என முகவரியை தொடர்பு–கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்ப–ட்டுள்ளது.

    • சதுரங்க ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடத்தப்பட உள்ளது.

    அரியலூர்:

    சர்வதேச அளவிலான 44-வது சதுரங்க ஒலிம்பி–யாட் போட்டிகள் மாமல்ல–புரத்தில் வருகிற 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெறவுள்ளது. 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளை மாவட்ட–ங்களில் பிரபலப்படுத்தும் வகையில் சதுரங்க போட்டி–கள், விழிப்புணர்வு பேரணி, மாரத்தான், இருசக்கர வாகனப் பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் சம்ம–ந்தப்பட்ட மாவட்ட நிர்வா–கத்தின் சார்பில் தொடர்ந்து மேற்கொ–ள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் செஸ் ஒலிம்பி–யாட் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி, வட்டார, மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    அதனடிப்படையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி அளவில் மாணவ, மாணவியர்களுக்கு சதுரங்க போட்டிகள் நடத்தி முடி–க்கப்பட்டுள்ளது. இதில் அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், தா.பழூர், செந்துறை மற்றும் ஆண்டிமடம் ஆகிய வட்டாரங்களில் உள்ள சுமார் 300 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 1 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி அளவில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த பள்ளி அளவிலான சதுரங்க போட்டிகளில் ஒவ்வொரு பள்ளிகளிலிருந்தும் முதல் 2 இடங்களை பெற்ற தலா 2 மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்க–ப்பட்டு–ள்ளனர்.

    இவ்வாறு தேர்ந்தெ–டுக்கப்ப–ட்டவர்களுக்கு வரும் 20-ந் தேதி அன்று வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் நடத்தப்பட உள்ளது. வட்டார அளவி–லான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வரும் 25-ந் தேதி அஸ்தி–னாபுரம் மாதிரி பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடத்தப்பட உள்ளது.

    • இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் நடந்து செல்லும் போது கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு காயமடைந்தார்.
    • பிச்சை பிள்ளைக்கு அடிக்கடி தலைவலி இருந்து வந்தது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஒக்கனத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை (வயது 55), விவசாயி. இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் நடந்து செல்லும் போது கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு காயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்.

    இந்தநிலையில் பிச்சை பிள்ளைக்கு அடிக்கடி தலைவலி இருந்து வந்தது. நேற்று முன்தினம் மீண்டும் தலைவலி வந்ததால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அவர் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பிச்சை பிள்ளை நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 105.6 சதவீதம், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 105.02 சதவீதம் ஆகும்
    • 18 முதல் 59 வயது வரையுள்ள அனைவரும் இலவசமாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 105.6 சதவீதம், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 105.02 சதவீதம் ஆகும். 15-18 வயதிற்கு உட்பட்டோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 100.91 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசிசெலுத்திக் கொண்டவர்கள் 88.51 சதவீதம் ஆகும்.

    12-14 வயதிற்கு உட்பட்டோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 111.14 சதவீதம். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 80.14 சதவீதம் ஆகும்.

    இதுவரை மொத்தமாக முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 103.09 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 100.7 சதவீதம் ஆகும். கர்ப்பிணி பெண்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 102 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 99 சதவீதம் ஆகும்.

    பாலூட்டும் தாய்மார்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 102 சதவீதம். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 98 சதவீதம் முன்களப்பணியாளர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 109 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 60 சதவீதம் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் 45சதவீதம் சுகாதாரப் பணியாளர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 111 சதவீதம்.

    இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 65 சதவீதம் நமது மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    15.01.2022 தேதிக்குள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள்.

    எனவே, 18 முதல் 59 வயது வரையுள்ள அனைவரும் இலவசமாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அரியலூர் மாவட்டம், தழுதாழைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் ரூ.10.05 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி பராமரிப்புக்கான நிதியுதவியை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வழங்கியுள்ளது
    • இந்நிறுவனம் அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிற்கு தொடர்ந்து நிதியுதவியளித்து வருகிறது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தழுதாழைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழகத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் ரூ.10.05 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட கட்டடங்கள் திறக்கப்பட்டது.

    விழாவுக்கு ஊராட்சித் தலைவர் திலகவதி மகேந்திரன் தலைமை வகித்தார். ஓஎன்ஜிசி நிறுவனத்தின் காரைக்கால் பிரிவு முதன்மைப் பொது மேலாளர் தி.சாய்பிரசாத் கலந்து கொண்டு ஓஎன்ஜிசி சார்பில் ரூ.10.05 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்து பேசியதாவது-

    நிறுவனத்தின் சார்பில் ரூ.10.5 லட்சம் செலவில் பள்ளி கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டு, மாணவர்கள் அமர்வதற்கு இருக்கை,மேஜைகளும், இதே போல் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்நிறுவனம் அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிற்கு தொடர்ந்து நிதியுதவியளித்து வருகிறது.

    பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி, நிறுவனம் நாட்டின் எரிசக்தி தேவையை பெருமளவு பூர்த்தி செய்து வருகிறது. ஆண்டு வருவாயில் குறிப்பிட்ட தொகையை கல்வி, நலவாழ்வு, சுகாதாரம், மருத்துவம், பேரிடர் மேலாண்மை, கிராம மேம்பாடு, விளிம்புநிலை மக்களுக்கான வாழ்வாதாரம், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவைகளில் அரசு துறைகளுடன் இணைந்து பொதுமக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு சேவையாற்றிவருகிறது.

    ஆண்டுக்கு சுமார் ரூ.300 கோடி ரூபாய் அளவுக்கு இந்நிறுவனம் தனது சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் பயனுள்ளவகையில் செலவிட்டு வருகிறது என்றார்.

    ஜெயம்கொண்டம் ரோஸ் அறக்கட்டளை இயக்நனர் ஜான். கே. திருநாவுக்கர, மத்திய அரசின் "சுஜித்தா பக்வாடா" எனும்

    தூய்மையே சேவை திட்டம் குறித்து மக்களிடம் எடுத்துரைத்தார்.

    இந்நிகழ்ச்சிக்கு, ஒன்றியக்குழு உறுப்பினர்சுமதி இளங்கோவன் , பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ம.தனசெல்வி, வார்டு உறுப்பினர்கள் எம். சக்திவேல், பி.சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் க.திருமுருகன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் சி.அன்பழகன் நன்றி தெரிவித்தார்.

    • தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி வருகிற 28.07.2022 அன்று அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேச்சு போட்டி நடைபெற உள்ளது
    • அரசுப்பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் ரூ.2000 வீதம் சிறப்புப் பரிசும் வழங்கப்பட உள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி 28.07.2022 அன்று அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் பள்ளி மாணவர்களுக்குத் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுவழங்கப்படும் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

    இதன்படி, அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மற்றும் மூன்றாம் பரிசு ரூ.2,000 என்ற வகையில் வழங்கப்பெற உள்ளது.

    இவை அல்லாமல் அரசுப்பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் ரூ.2000 வீதம் சிறப்புப் பரிசும் வழங்கப்பெற உள்ளது.

    இப்போட்டியானது காலை 10 மணிக்குத் தொடங்கப்படும் எனவும், அரியலூர் மாவட்டத்தில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறும் அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    • அரியலூர் செட்டி ஏரிக்கரை பூங்கா திடலில் மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது
    • மாவட்ட வளர்ச்சி குழு சார்பில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்

    அரியலூர்:

    அரியலூர் பேருந்து நிலையம் செட்டிஏரிக்கரை பூங்காத்திடலில் மாவட்ட வளர்ச்சி குழு சார்பில் அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். மாவட்ட வளர்ச்சி குழு தலைவர் சீனி பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.எல்.ஏ.க்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சாெ.க.கண்ணன், காங்கிரஸ் கட்சி மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், ம.தி.மு.க. அரியலூர் ஒன்றிய செயலாளர் சங்கர், திருமானூர் ஒன்றிய செயலாளர் மாணிக்கவாசு

    மற்றும் தி..க, தி.மு.க., காங்கிரஸ் கட்சி, ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சியினர், எம்.ஜி.ஆர். கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் பண்பாட்டு பேரமைப்பு, மாவட்ட வளர்ச்சி குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார், விழா முடிவில் எம்.எல்.ஏ. வக்கீல் கு.சின்னப்பா நன்றி கூறினார்.

    • திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள மேலசிந்தாமணி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. கடந்த 7-ந் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அன்று தர்மர் பிறப்பு, 2-ம் நாள் கிருபாச்சாரியார் பள்ளிக்கூடம், 3-ம் நாள் துரோணாச்சாரியார் பள்ளிக்கூடம், 4-ம் நாள் அம்மன் பிறப்பு, 5-ம் நாள் வில் வளைப்பு திருக்கல்யாண தபசு, 6-ம் நாள் விராட பருவம், பூவெடுப்பு, கீசக நாடகம், 7-ம் நாள் கிருஷ்ணன் தூது, அரவாண் கடப்பலி, 8-ம் நாள் சக்கரவர்த்தி கோட்டை அழித்தல், கர்ண மோட்சம், தொடர்ந்து 9-ம் நாளான நேற்று காலையில் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சி வரை மிகச் சிறப்பாக தத்துரூபமாக பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் காட்சிகளாக அரங்கேற்றப்பட்டது. நேற்று திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    பின்னர் தீமிதி திருவிழாவை முன்னிட்டு முதலில் கோவிலில் இருந்து அக்னி கரகம் எடுத்த பக்தர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்தனர். பின்னர் பூங்கரகம், கம்பம் ஏந்திய பக்தர்கள் தீமிதித்தனர். தொடர்ந்து நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • வாலிபரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள புளியங்குழி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சீமான்(வயது 28). விவசாயியான இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சிரஞ்சீவி என்பவருக்கும் ஜல்லிக்கட்டு காளை விடுவதில் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று சீமானுக்கும், சிரஞ்சீவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சீமானை சிரஞ்சீவி மற்றும் அவரது உறவினர்கள் ஆனந்தராஜ், கதிரேசன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சீமான் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் சீமான் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×