என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரம்பரிய பயிர் விதை திருவிழா
    X

    பாரம்பரிய பயிர் விதை திருவிழா

    • பாரம்பரிய பயிர் விதை திருவிழா நடைபெற்றது
    • முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்

    அரியலூர்:

    அரியலூர் அரசு மேல்நி–லைப் பள்ளி வளாகத்தில், தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் விதைத்திருவிழா நடைபெற்றது. இவ்விதை திருவிழாவில் பாரம்பரிய விதைகளான நீலப்புடலை உள்ளிட்ட காய்கறிவிதைகள், மூலிகை–கள், அரிசி வகை–களான மாப்பிள்ளை சம்பா, நவரா, குதிரைவாலி, ஆத்தூர் கிச்சடி சம்பா உள்ளிட்டவைகளும், நவதானியங்களான வரகு, பனிவரகு, சாமை, தினை, நவதானியத்தில் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள், நாட்டு துவரை, நாட்டு பருத்தி விதைகள் (மூன்றுவருடம் விளைச்சல் தரும் கருங்க–ண்ணி உள்ளி–ட்டவை), கீரை வகைகள், தேன், செம்புபாத்திரங்கள், இயற்கை முறையில் தயா–ரான வாசனைத் திரவிய–ங்கள், சோப்பு வகைகள்,

    மர செக்கில்தயாரான எண்ணெய் வகைகள், காய்கறி விதைகள், அபூர்வ வகை மரச்செடிகள், மற்றும் விதைகள், நாட்டு வகை மாடுகள், கோழிகள், பஞ்சகாவ்யா, பூச்சி விரட்டிகள் ஆகியவை விற்பனைக்குகாட்சி படுத்தியிருந்தனர்.

    இந்த திருவிழாவை காணவந்த விவசாயிகள், பாரம்பரிய விதைகள், இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், செடிகள் உள்ளிட்டவைகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். மேலும் இந்த திருவிழாவில் இயற்கை இடுப்பொருள்கள், இயற்கை உணவு முறைகள், வீட்டு தோட்டம் அமைப்பது குறித்து ஆலோசனை வழங்க–ப்பட்டது.

    இவ்விழாவை மாவட்ட முதன்மை நீதிபதி மகா–லட்சுமி தொடங்கி வைத்து, அரங்குகளை பார்வை–யிட்டார். சட்டப் பேரவை உறுப்பி–னர் கு.சின்னப்பா சிறப்புரையாற்றினார்.

    விழாவில் பங்கேற்ற இயற்கை ஆர்வலர்கள், மரபுநெல் வகைகள்,நாட்டு விதை ரகங்கள், கரும்பு விவசாயம், நாட்டுப் பருத்தி உள்ளிட்ட விதைகள் குறி–த்தும், இயற்கை முறையில் சாகுபடி செய்வது குறித்தும் விவசாயிகளிடம் விளக்கினர்.மேலும் இயற்கை வழியில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து பேசினார்.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ரமேசு, கருப்பையா, தமிழ்களம் இளவரசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×