என் மலர்
நீங்கள் தேடியது "ILLEGALLY SELLING ACOHOL"
- சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்
- 96 மதுபாட்டில்கள் பறிமுதல்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பரண்டு கலைக்கதிரவன் ஆலோசனையின் பேரில் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லாத்தூர் வடவீக்கம் சுடுகாட்டுப்பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த தர்மசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த குமார் என்கிற கட்டில் குமார் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 96 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






