என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை
- இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் நடந்து செல்லும் போது கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு காயமடைந்தார்.
- பிச்சை பிள்ளைக்கு அடிக்கடி தலைவலி இருந்து வந்தது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஒக்கனத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை (வயது 55), விவசாயி. இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் நடந்து செல்லும் போது கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு காயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்.
இந்தநிலையில் பிச்சை பிள்ளைக்கு அடிக்கடி தலைவலி இருந்து வந்தது. நேற்று முன்தினம் மீண்டும் தலைவலி வந்ததால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அவர் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பிச்சை பிள்ளை நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






