என் மலர்
அரியலூர்
- இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான பொதுக்கூட்டம்
- தமிழ் மொழியை காக்கவே தொடங்கப்பட்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்ற கழகம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சினார்.
அரியலூர்:
அரியலூர் அண்ணா சிலை அருகில் மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டனர்,
இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகர் வரவேற்று பேசினார். மாநில சட்ட திருத்த குழு உறுப்பினர் சுபா சந்திரசேகர் கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநெற்கிள்ளி, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வஇளையராசன், துணை அமைப்பாளர் லூயி கதிரவன், சசிகுமார், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேசியதாவது:
தமிழ் மொழியின் படைப்புகள் பல்வேறு நாடுகளில் மொழி பெயர்த்து வெளியிட்டு வரும் அறிஞர்கள் பலரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மறைந்த மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னச்சாமி தமிழுக்காக தன்னுயிரை விட்டவர். அவர் வாழ்ந்த மண்ணில் பேசுவதை பெருமையாக கருதுகிறேன். வங்கி, தபால் நிலையங்களில் பலரும் இந்திகாரர்களே பணியில் உள்ளனர். அங்கு தமிழர் செல்லும் போது எதுவும் புரியாமல் தவிக்கின்றனர். திராவிட முன்னேற்ற கழகம் என்பது தமிழ் மொழியை காக்கவே தொடங்கப்பட்ட இயக்கமாகும். இந்தி மொழிக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திணிக்க வேண்டாம் என்பதே எங்கள் கொள்கையாகும். பிரதமரை சந்தித்த போது தமிழக முதல்வர் முதல் கோரிக்கையாக வைத்தது நீட் வேண்டாம் என்பது. இருமொழி கொள்கையை வர வேற்போம். இந்தி திணிப்பு என்று வந்தாலும் தொடர்ந்து தி.மு.க. எதிர்த்து நிற்கும் என பேசினார், நிகழ்ச்சி முடிவில் மாவட்ட துணை செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.
- ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று சிவாலயங்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.
- ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த அரிய வழிபாடு இன்று நடக்கிறது.
ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமியில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் சிவபெருமானுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வது மிகவும் விசேஷமானது. அன்னாபிஷேக நாளில் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பது மற்றும் அன்னாபிஷேகத்திற்கு தேவையான சந்திரனின் காரகம் பெற்ற அரிசி வாங்கி கோவிலில் கொடுப்பது மற்றும் குறைந்தது 5 பேருக்காவது அன்னதானம் செய்வது புண்ணியமாகும். ஸ்ரீஅன்னபூரணியை வணங்கி வர உணவு வீணாவது குறையும். மேலும் உணவு தட்டுபாடின்றி கிடைக்கும்.
அன்னம் என்பது பிரம்மா, விஷ்ணு, சிவ சொரூபமாக கருதப்படுகிறது. ஜேவன் கொடுக்கும் அன்னமும் சிவலிங்கம் ஆக மதிக்கப்படுகிறது. அன்னம் வேறு, ஆண்டவன் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். இதையே சோத்துக்குள்ளே சொக்க நாதர் என்பார்கள்.
ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று சிவாலயங்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த அரிய வழிபாடு இன்று நடக்கிறது. அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது சிறப்பானதாகும். சிவனின் மீது விழும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கம் என்பது ஐதீகம். எனவே அன்று சிவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தால் கோடி சிவதரிசனம் செய்த பலன் கிடைக்கும்.
அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் சாப்பிட்டால் பலன் நிச்சயம் உண்டு. லிங்கத்தின் மீது சாத்தப்பட்ட அன்னம் மிகவும் வீரியம் மிக்க கதிர்வீச்சு நிறைந்ததாக இருக்கும் என்பது ஐதீகம். அன்னாபிஷேக தினமான இன்று சிவனை வணங்கினால் பஞ்சபூ தங்களையும் வழிபட்ட புண்ணியம் கிடைப்பதோடு முக்தியும் பெறலாம். சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமி ஆகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது.
அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அனைத்து சிவாலயங்களிலும் இன்று மாலை அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
- கல்வி உதவி–த்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்ப–ட்டுள்ளது.
- பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகைக்கு வருகிற 30-ந் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
அரியலூர்
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உள்பட) பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சேர்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதில் 2022-23-ம் ஆண்டிற்கு பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி வருவாய் அடிப்படையிலான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கு www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடந்த 31-ந் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி படிப்பு, பேகம் ஹஜ்ரத் மஹால் கல்வி உதவித்தொகைக்கு வருகிற 15-ந் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகைக்கு வருகிற 30-ந் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவிகள் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
- ஜெயங்கொண்டத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது.
- உறுப்பினர் சந்தா சேகரிப்பு இயக்கம் குறித்து, மாவட்டத் தலைவர் ராஜவேம்பு சிறப்புரையாற்றினார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றிய பொதுக்குழு கூட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டப் பொருளாளர் ஆனந்தவள்ளி தலைமை தாங்கினார். அனைவரையும் ஒன்றிய செயலாளர் சங்குமதி வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் ஷர்மிளா முன்னிலை வகித்தார்.பொதுக் குழுவை மாவட்டச் செயலாளர் காந்தி துவக்கி வைத்து மாநில செயற்குழு முடிவுகள் குறித்து பேசினார்.
சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான காலமுறை ஊதியத்திற்கான கோரிக்கை மனுவை முதல்வருக்கு அனுப்பும் கோரிக்கை மனுவில் இடப்படும் கையெழுத்து இயக்கம் குறித்தும், உறுப்பினர் சந்தா சேகரிப்பு இயக்கம் குறித்தும், மாவட்டத் தலைவர் ராஜவேம்பு சிறப்புரையாற்றினார்.
பொதுக்குழுவில் புதிய ஒன்றிய நிர்வாகிகளாக ஒன்றிய தலைவர் மணிமேகலை, துணைத் தலைவர்களாக புகழ், ஜெயந்தி, சரஸ்வதி, ஒன்றி செயலாளராக சங்குமதி, இணைச் செயலாளர்கள் மஞ்சுளா, பனிமலர் சுமதி, ஒன்றிய பொருளாளர் வெண்ணிலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலமேலு ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
பொதுக்குழுவில் 60 சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.
- தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி காலனி தெருவை சேர்ந்த வர் சதீஷ்குமார்(வயது 32).
- இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் மீது லாரியின் முன் சக்கரம் ஏறி இறங்கியது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி காலனி தெருவை சேர்ந்த கலியபெருமாளின் மகன் சதீஷ்குமார்(வயது 32). கூலித் தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் தா.பழூர் கடைவீதி பகுதியில் நடந்து வந்தார். அப்போது பின்னால் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த லாரி, சதீஷ்குமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் மீது லாரியின் முன் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் கடலூரை சேர்ந்த இளங்கோவனை கைது செய்தனர்.
- தங்கசாமி ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
- மர்ம நபர்கள் 2 ஆடுகளின் வாயில் டேப் ஒட்டி கால்களை கட்டி சொகுசு கார் டிக்கியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கசாமி (வயது 60). இவர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் அந்த ஆடுகளை நேற்று இரவு கட்டிவிட்டு சாப்பிட்டு படுத்து தூங்கினார். இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த ஆடுகள் திடீரென்று சத்தம் போட்டது.
இதனால் திடுக்கிட்டு எழுந்த தங்கசாமி வெளியே சென்று பார்த்தார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் 2 ஆடுகளின் வாயில் டேப் ஒட்டி கால்களை கட்டி சொகுசு கார் டிக்கியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். உடனே தங்கசாமி திருடன்... திருடன்... பிடியுங்கள் என கத்தினார்.
அதைத்தொடர்ந்து பக்கத்து வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர்கள் தூக்கம் கலைந்து எழுந்து ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் ஆடுகளை திருடிக்கொண்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்ட வெள்ளை நிற சொகுசு காரை துரத்திச் சென்றனர்.
இதையடுத்து வாரியங்காவல் மெயின் ரோடு பகுதியில் அந்த சொகுசு கார் நிலை தடுமாறி சாலை தடுப்புச் சுவரில் மோதியது. இதில் முன்பக்க டயர் அந்த சுவரில் ஏறி இறங்கியதால் மேலும் காரை நகர்த்த முடியவில்லை. இதற்கிடையே துரத்திச் சென்ற இளைஞர்களும் அங்கே விரைந்து சென்று விட்டனர். இதனால் பயந்து போன மர்ம நபர்கள் ரெண்டு பேரும் காரில் இருந்து இறங்கி தப்பித்தோம், பிழைத்தோம் புதருக்குள் தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அந்த காரை சோதனையிட்டபோது காரின் டிக்கியில் 4 ஆடுகளும், காருக்குள் 4 ஆடுகளும் வாயில் டேப் ஒட்டப்பட்டு, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆடுகளை குளத்தூர், வாரியங்காவல், இலையூர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு திருடியுள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த 2 மாதங்களில் மட்டும் ஆண்டிமடம், மேலூர், குளத்தூர் வாரியங்காவல், இலையூர் ஆகிய 5 கிராமப் பகுதிகளிலும் 500க்கும் மேற்பட்ட ஆடுகள் திருட்டு போய் உள்ளன. இதனை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- துணை சுகாதார நிலையத்தை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
- இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்தது
அரியலூர் :
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரியலூர் மாவட்டம், திருமானூர் பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். தேசியக் குழு உறுப்பினர் கண்ணகி, மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம், ராமநாதன், மருதமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டனம் ெதரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, கோவிலூர் கிராமத்தில் ரூ.30 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் துணை சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும். கோவிலூர் திரவுபதி அம்மன் கோவிலுக்கு அருகில் இயங்கும் ஆழ்துளை கிணற்றில் இருந்து வரும் தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு சிறுநீரக கல்லடைப்பு நோய் வருவதாகவும், எனவே அதனை பரிசோதித்து சுத்தமான குடிநீர் வழங்க வேறு இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை கோவிலூர் மக்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்."
- கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் போலீசார் பூண்டி மனதான்குளம் கிராம பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்ற பூண்டி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சியப்பனின் மகன் அறிவழகனை(வயது 26) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- பெட்டிக்கடைக்கு முதியவர் தீ வைத்துள்ளார்
- போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரை சேர்ந்தவர் கலியபெருமாள்(வயது 35). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியன்(65) என்பவர், கலியபெருமாளின் பெட்டிக்கடைக்கு வந்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அங்கு வந்த அவர், ரேஷன் அட்டையை அங்கு வைத்துவிட்டு சென்றதாக கூறியுள்ளார். அதற்கு கலியபெருமாள், அவர் அங்கு ரேஷன் அட்டையை வைக்கவில்லை என கூறியுள்ளார். மேலும் அவரை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் அங்கிருந்து ெசல்லாததால், கலியபெருமாள் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் இந்த பெட்டிக்கடை தீப்பற்றி எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த பெட்டிக்கடைக்கு சுப்ரமணியன் தீ வைத்தது போன்ற காட்சி, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த காட்சிகளை பார்வையிட்ட போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து சுப்ரமணியனை தேடி வருகின்றனர்."
- வீட்டில் 8 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருட்டுபோனது.
- வயல் வேலைக்கு சென்ற போது நடந்த சம்பவம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஜி.கே.எம். நகரில் குடியிருப்பவர் ஜாவித் பீவி. இவரது கணவர் பக்ரீத் முகமது. இவர்களது 2 மகன்கள் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். இதனால் திருமானூரில் உள்ள வீட்டில் பக்ரீத் முகமதுவும், ஜாவித் பீவியும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு, வெங்கனூரில் உள்ள தங்களது வயலில் சாகுபடி பணிக்காக சென்றுள்ளனர். பின்னர் அவர்களது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்ட அக்கம், பக்கத்தினர் இது குறித்து ஜாவித் பீவிக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து திருமானூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதில் பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முந்திரி தோப்பில் வாலிபர் நிர்வாணமாக தூக்கில் தொங்கினார்
- கொலையா-தற்கொலையா? என விசாரணை
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு. இவருக்கு சொந்தமான முந்திரி தோப்பில் அடையாளம் தெரியாத சுமார் 38 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக தொங்கினார்.
அவர் அணிந்திருந்த பேண்ட்டால் கழுத்தில் தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை அவ்வழியாக ஆடு மாடு மேய்க்க சென்றவர்கள் பார்த்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிர்வாண நிலையில் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்தவரின் உடலை மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார், எப்படி இங்கு வந்தார், எப்படி இறந்தார், அவரை யாராவது கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு சென்றார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பெயர், முகவரி ஏதுவும் தெரியாததால் போலீசார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை பிணக்கிடங்கில் இறந்தவர் உடலை வைத்து விசாரித்து வருகின்றனர்.
- உலகப்பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
- வருகிற 7-ந் தேதி நடக்க உள்ளது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்றதின் அடையாளமாக மாமன்னன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரசோழன் பிரகதீஸ்வரர் கோவிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டினார். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோவிலில் ஒரே கல்லிலான நவக்கிரகம் மற்றும் சிவலிங்கம் உள்ளன.
இந்த கோவில் உலகப்பிரசித்தி பெற்று புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு மத்திய அரசால் தொல்லியல்துறை பாதுகாப்புத்துறை மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் சுமார் 60 அடி சுற்றளவும் 13.5 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லிலான சிவலிங்கத்திற்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இவ்வாறு அன்னாபிஷேகம் செய்யப்படும் போது 100 மூட்டை பச்சரிசியால் சாதம் சமைக்கப்பட்டு சிவலிங்கத்தின் மேல் சாத்தப்படும். இவ்வாறு சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் ஒவ்வொரு சிவலிங்கத்தின் தன்மையைக் கொண்டதாக கூறப்படுவது ஐதீகம். இதனால் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை ஒரே நேரத்தில் தரிசிப்பது கோடி புண்ணியம் கிடைக்கும் என்பதும் ஐதீகமாகும். எனவே இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று வருகிற 7-ந் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.






