என் மலர்
நீங்கள் தேடியது "சத்துணவு ஊழியர் சங்க பொது கூட்டம்"
- ஜெயங்கொண்டத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது.
- உறுப்பினர் சந்தா சேகரிப்பு இயக்கம் குறித்து, மாவட்டத் தலைவர் ராஜவேம்பு சிறப்புரையாற்றினார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றிய பொதுக்குழு கூட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டப் பொருளாளர் ஆனந்தவள்ளி தலைமை தாங்கினார். அனைவரையும் ஒன்றிய செயலாளர் சங்குமதி வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் ஷர்மிளா முன்னிலை வகித்தார்.பொதுக் குழுவை மாவட்டச் செயலாளர் காந்தி துவக்கி வைத்து மாநில செயற்குழு முடிவுகள் குறித்து பேசினார்.
சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான காலமுறை ஊதியத்திற்கான கோரிக்கை மனுவை முதல்வருக்கு அனுப்பும் கோரிக்கை மனுவில் இடப்படும் கையெழுத்து இயக்கம் குறித்தும், உறுப்பினர் சந்தா சேகரிப்பு இயக்கம் குறித்தும், மாவட்டத் தலைவர் ராஜவேம்பு சிறப்புரையாற்றினார்.
பொதுக்குழுவில் புதிய ஒன்றிய நிர்வாகிகளாக ஒன்றிய தலைவர் மணிமேகலை, துணைத் தலைவர்களாக புகழ், ஜெயந்தி, சரஸ்வதி, ஒன்றி செயலாளராக சங்குமதி, இணைச் செயலாளர்கள் மஞ்சுளா, பனிமலர் சுமதி, ஒன்றிய பொருளாளர் வெண்ணிலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலமேலு ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
பொதுக்குழுவில் 60 சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.






