என் மலர்
அரியலூர்
- துணை சுகாதார நிலையம் திறப்பு விழா கொண்டாட்டம் நடைபெற்றது
- முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் கோவிலூர் கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் திறக்கப்படாமல் இருந்தது. இதை திறக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, கடந்த மாதம் அரியலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவிலூர் துணை சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார். இநநிலையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து கோவிலூர் கிராம மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்டோர் இனிப்பு வழங்கினர்.
- சின்னப்பட்டாக்காடு கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
- தாது உப்புக்கலவை பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த சின்னப்பட்டாக்காடு கிராமத்தில் சிறப்பு கால் நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சித் தலைவர் சந்திராகனகராஜ் தொடக்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ஹமீதுஅலி தலைமை வகித்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் அபிராமி, மணிகண்டன், ஜெயபிரீத்தி, கால்நடை ஆய்வாளர்கள் முருகானந்தம், முத்துக்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பிச்சைபிள்ளை, செல்வராஜ், வசந்தி ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு, 180 பசுக்கள், 300 வெள்ளாடுகள், 60 செம்மறியாடுகள், 200 கோழிகள் மற்றும் நாள்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளித்தனர். கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் மற்றும் மாடுகளுக்கு சினை பரிசோதனையும் செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக சினைப் பருவ அறிகுறிகள் தென்படாமல் இருக்கும் கிடேரிகள் மற்றும் பலமுறை கருவூட்டல் செய்தும் சினை பிடிக்காத எட்டு மாடுகள் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு அவற்றிற்கு மலடு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. அவ்வாறான கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு தாது உப்புக்கலவை பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
- போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது
- 14-ந்தேதி முதல் நடைபெற உள்ளது
அரியலூர்
மத்திய-மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு, அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-சி கீழ் பிரிவு எழுத்தர் அல்லது இளநிலை செயலக உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் போன்ற 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வருகிற 14-ந்தேதி முதல் அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது. இப்பணி காலியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்களுடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுய விவரக்குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரேஷன் கடை பணியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது
- தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
அரியலூர்
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் விஜயபாரதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், தி.மு.க. சார்பில் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி ரேஷன் கடைகளுக்கு தனித்துறையை முதல்-அமைச்சர் ஏற்படுத்த வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களுக்கு பொதுநிலை திறன் காமன்கேடர் கொண்டு வர வேண்டும். புதிய ரேஷன் கடை பணியாளர்களை நியமனம் செய்வதற்கு முன் தொலைதூரத்தில் பணிபுரியும் விற்பனையாளர், வெளி பணியாளர்கள் வெளிமாவட்டத்திற்கு மாறுதல் கோரினால், அவர்கள் விரும்பும் பட்சத்தில் அருகில் உள்ள பகுதிக்கு நிபந்தனை இன்றி நிரந்த பணி இடமாறுதல் உறுதி செய்யப்பட வேண்டும். தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்குவதற்குரிய அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் மூர்த்தி நன்றி கூறினார்.
- கலை திருவிழா போட்டிகள் நடந்தது.
- மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்
அரியலூர்
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளி கல்வித்துறையின் மானிய கோரிக்கையின் போது பள்ளி கல்வித்துறை அமைச்சர், மாணவர்களின் கலை திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்டத்தில் கலை திருவிழா நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் பள்ளி அளவில் 6 முதல் 12-ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கலை திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
- போக்சோவில் எலக்ட்ரீசியனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டன
- பாலியல் வழக்கில் கைதானவர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமழபாடி கீழத் தெருவை சேர்ந்தவர் அருண்ராஜ் (வயது42). தனியார் சிமெண்ட் ஆலையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு அருண்ராஜ் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருமானூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அருண்ராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதில் குற்றம் சாட்டப்பட்ட அருண்ராஜூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
- ரேசன் கடை பணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது
- 14 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில், கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டிலுள்ள நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம். இதுகுறித்து மாவட்ட கூட்டுறவுத் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 75 விற்பனையாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வரை பெறப்பட்டது. தகுதியானோருக்கான நேர்முகத் தேர்வு அரியலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தின் மாணவர் தங்கும் விடுதியில் வரும் 14 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேற்படி நேர்முகத் தேர்வுக்கு வரும் மாற்றுத்தினாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட பதிவு புத்தகம், அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட சான்றிதழ், தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விக்கிரமங்கலம் போலீசார் வல்லவன் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
- செம்புலிங்கத்தின் மரணத்திற்கு காரணமான 8 காவலர்கள் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தினார்.
அரியலூர்.
தஞ்சை மாவட்டம் அணைக்குடி கிராமம் காலனி தெருவை சார்ந்த புருஷோத்தமன். இவர் கடந்த மாதம் 24-ந்தேதி அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சரகம், காசாங்கோட்டை கிராமத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சீர்வரிசை எடுத்து சென்றார்.
அப்போது ஒரு தரப்பினர் இந்த வழியாக செல்லக்கூடாது என தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக விக்கிரமங்கலம் போலீசார் வல்லவன் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை கைது செய்ய சென்ற போலீசார் விவசாயி செம்புலிங்கம் என்பவரை விசாரித்துள்ளனர். அப்போது அவரையும், குடும்பத்தாரையும் போலீசார் தாக்கியதாக புகார் கூறப்பட்டது. பின்னர் செம்புலிங்கம் உள்பட 3 பேர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் செம்புலிங்கம் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
செம்புலிங்கம் இறப்புக்கு போலீசாரே காரணம் எனவும், தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையில் காவல் துறையினர் வீடு புகுந்து நடத்திய தாக்குதலில் அப்பாவி விவசாயி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அவரது மனைவியும், மகனும் காயமடைந்துள்ளனர். விவசாயி உயிரிழப்புக்கு காவலர்கள் நடத்திய தாக்குதல் தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகும் கூட, அதற்கு காரணமானவர்களை காவல் துறை இதுவரை கைது செய்யாதது கண்டித்தக்கது.
செம்புலிங்கத்தின் மருமகன் அருண்குமார் மீது அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அளித்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அது குறித்து அருண்குமாரை விசாரிப்பதற்காக குற்றப்பிரிவு தலைமைக் காவலர் பழனிவேல் என்பவர் தலைமையில் 8 காவலர்கள் கடந்த நவம்பர் 25-ந்தேதி செம்புலிங்கம் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால், வீட்டில் அருண்குமார் இல்லை என்று தெரிகிறது.
அதனால் ஆத்திரமடைந்த பழனிவேல் தலைமையிலான காவலர்கள் வீட்டில் இருந்த செம்புலிங்கம், அவரது மனைவி சுதா, மகன் மணிகண்டன் ஆகிய மூவரையும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். அதனால் காயமடைந்த மூவரும் அரியலூர் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வீடு திரும்பினார்கள். அப்போதிலிருந்தே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த செம்புலிங்கம் நேற்று உயிரிழந்து விட்டார்.
போலீசார் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த போது, காவல் துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்தும், தம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் செம்புலிங்கம் தெளிவாக விளக்கியுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு மருத்துவம் அளிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களிலும் காவல் துறையினர் தாக்கியது தான் அவரது காயங்களுக்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
செம்புலிங்கத்தின் மரணத்திற்கு காரணமான 8 காவலர்கள் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். 8 காவலர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். உயிரிழந்த செம்புலிங்கம் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக் கேற்ற அரசு வேலை வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்கள் நாளை நடக்கிறது.
- 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. முகாம் நடைபெறும் இடங்கள் கிராமங்கள் விவரம் வருமாறு:- அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் வட்டாரத்திற்கு கோவில் எசனை (கிழக்கு), உடையார்பாளையம் வட்டாரத்திற்கு அங்கராயநல்லூர் (மேல்பாகம்), செந்துறை வட்டாரத்திற்கு தளவாய் (தெற்கு), ஆண்டிமடம் வட்டாரத்திற்கு அழகாபுரம் ஆகிய 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது. கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். மேலும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன் படி பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- செல்போன் திருடிய சிறுவன் கைது செய்யப்பட்டான்
- சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், காவனூர் கிராமம் பொன்பரப்பினார் தெருவை சேர்ந்தவர் ஜோதிமுருகன் (வயது 32). இவர் திருவண்ணாமலையில் நடக்கும் ஜோதி தரிசனத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் பஸ் நிலையத்திலேயே படுத்து தூங்கியுள்ளார். அப்போது அவரது செல்போனை காணவில்லை. இதுகுறித்து அருகே இருந்த சிறுவனிடம் விசாரித்தபோது, அந்த சிறுவன் திடீரென தப்பியோடிவிட்டார். இதுகுறித்து ஜோதிமுருகன் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் செல்போனை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்து, திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
- விசிக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- அம்பேத்கர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய கோரி
அரியலூர்:
அம்பேத்கர் சிலையை அவமதித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய கோரியும், மயிலாடுதுறை பட்டவர்த்தி கிராமத்தில் தடையை அகற்றக் கோரியும்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆருப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் சிவகுமார் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் இலக்கிய தாசன் ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வநம்பி, மாநில துணைச் செயலாளர் ஆசிரியர் செல்வராஜ், மாவட்ட அமைப்பாளர் சின்னராஜா, நகர் மன்ற உறுப்பினர் காஞ்சனா சரவணன், சுந்தர் ஒன்றிய செயலாளர் வடக்கு பாரதி, தெற்கு ஒன்றிய செயலாளர் காமராஜ் மற்றும் உடையார்பாளையம் நகர செயலாளர் ஜெயக்குமார் மாவட்ட அமைப்பாளர்கள் மகளிர் அணி மாவட்ட பொறுப்பாளர் திலகவதி, துர்கா, தேவிசதன் மற்றும் இளையபாரதி, மாயாண்டி குமரவேல், செந்தில், மாரிமுத்து, சத்யானந்தம், தங்க அருள், சத்யநாதன், சக்திவேல், தொட்டிக்குளம் சங்கர், சக்திவேல், மணிமாறன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- பால் உற்பத்தியாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்
- பால் விற்பனையில் பழைய நடைமுறை
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள், வாடிக்கையாளர்கள், சங்க உறுப்பினர்கள், பணியாளர்கள் ஆகியோர்களின் நலனை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. அரியலூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களின் நலனை கருதியே சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்வளத்துறை ஒரு சுற்று அறிக்கையை அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையை பின்பற்றினால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, அதனால் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், சங்கப் பணியாளர்கள் நலன் கருதி எப்போதும் உள்ளது போல் பால் விற்பனையில் பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும், எனக்கோரி மாவட்ட கலெக்டரிடம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணையம், பால் உற்பத்தியாளர் சங்க பணியாளர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.






