என் மலர்tooltip icon

    கர்நாடகா தேர்தல்

    • ஜெகதீஷ் ஷெட்டர் தனது சுயநலத்திற்காக கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு காங்கிரசுக்கு சென்றுவிட்டார்.
    • சட்டசபை தேர்தல் களத்தில் 72 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளோம்.

    பெங்களூரு :

    உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதால் ஜெகதீஷ் ஷெட்டர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார்.

    இந்த நிலையில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பா.ஜனதா லிங்காயத் சமூக மூத்த தலைவர்களுக்கு டிக்கெட் நிராகரித்து அதன் மூலம் அந்த சமூகத்தை அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் சொல்கிறது. உப்பள்ளி-தாா்வார் மத்திய தொகுதி பா.ஜனதாவின் பாரம்பரியமான வலுவான தொகுதி ஆகும். பா.ஜனதாவுக்கு அது பாதுகாப்பான தொகுதி. அது தொடர்ந்து அவ்வாறே இருக்கும். அதனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜெகதீஷ் ஷெட்டரின் தோல்வியை தொண்டர்கள் உறுதி செய்வார்கள்.

    வலுவான பா.ஜனதாவால் தான் ஜெகதீஷ் ஷெட்டர் அந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளார். அவர் ஒன்றும் மக்கள் செல்வாக்கு படைத்த தலைவர் கிடையாது. அவர் பா.ஜனதாவை ஏமாற்றிவிட்டு காங்கிரசுக்கு சென்றுள்ளார். இதனால் பா.ஜனதா தொண்டர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் மகேஷ் தெங்கினிகாயும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் தான்.

    பா.ஜனதாவுக்கு லிங்காயத் சமூகத்தின் பெரிய தலைவர் எடியூரப்பா மற்றும் மந்திரி சோமண்ணா, பசனகவுடா பட்டீல் யத்னால் உள்ளிட்டோரின் ஆதரவு உள்ளது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் அதே சமூகத்தை சேர்ந்தவர் தான். காங்கிரசில் சேர்ந்த லட்சுமண் சவதியால் கடந்த 2018-ம் ஆண்டு தனது தொகுதியான அதானியில் வெற்றி பெற முடியவில்லை.

    ஆனால் அவருக்கு எம்.எல்.சி. பதவி வழங்கி துணை முதல்-மந்திரி ஆக்கினோம். ஜெகதீஷ் ஷெட்டருக்கும் அனைத்து மரியாதையும் வழங்கினோம். ஆனால் அவர் தனது சுயநலத்திற்காக கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு காங்கிரசுக்கு சென்றுவிட்டார். சட்டசபை தேர்தல் களத்தில் 72 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளோம். இதனால் பா.ஜனதாவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது.

    இந்த முறை மைசூரு மண்டலத்திலும் பா.ஜனதா வெற்றி பெறும். அந்த மண்டலத்தில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், சி.டி.ரவி எம்.எல்.ஏ. போன்றோர் போட்டியிடுவதால், அது எங்களுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும். பல்வேறு வளர்ச்சி குறியீட்டில் கர்நாடகம் முன்னிலையில் உள்ளது. அதனால் இந்த தேர்தலில் பா.ஜனதா ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்கும். 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்கை நாங்கள் அடைவோம்.

    இவ்வாறு அருண்சிங் கூறினார்.

    • கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10-ம்தேதி நடக்கிறது.
    • வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகிறது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். வேட்புமனு தாக்கல் நாளையுடன் (வியாழக்கிழமை) நிறைவு பெறுகிறது. இதனால் முக்கிய வேட்பாளர்கள் உள்பட பலர் அந்தந்த பகுதிகளில் உள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு படையெடுத்து வேட்புமனுவை தாக்கல் செய்து வருகிறார்கள். மேலும் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களையும் வேட்பாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், கோடீசுவர வேட்பாளர்கள் சிலரை இங்கு பார்ப்போம்.

    1. எச்.டி.குமாரசாமி (சென்னப்பட்டணா தொகுதி ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்)

    * மொத்த சொத்து மதிப்பு ரூ.46.57 கோடி

    * மனைவி பெயரில் ரூ.124 கோடி மற்றும் 3 கிலோ 800 கிராம் தங்கம்

    * கடன் ரூ.17 கோடி

    * 5 கிரிமினல் வழக்குகள்

    2. எச்.டி.ரேவண்ணா (ஒலேநரசிப்புரா தொகுதி ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்)

    * மொத்த சொத்து மதிப்பு ரூ.44.37 கோடி

    * மனைவி பெயரில் ரூ.38 கோடி

    * 3 கிலோ தங்கம், 45 கிலோ வெள்ளி, 25 காரட் வைரம்

    * கடன் ரூ.9 கோடி

    3. விஜயேந்திரா (சிகாரிப்புரா தொகுதி பா.ஜனதா வேட்பாளர்)

    * மொத்த சொத்து மதிப்பு ரூ.103 கோடி

    * மனைவி பெயரில் ரூ.21 கோடி

    * ஒரு டிராக்டர்

    4. எம்.பி.பட்டீல் (பபலேஸ்வர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்)

    * மொத்த சொத்து மதிப்பு ரூ.105 கோடி

    * மனைவி பெயரில் 34 கோடி

    * 5 கிரிமினல் வழக்குகள்

    5. ஆர்.அசோக் (பத்மநாபநகர் பா.ஜனதா வேட்பாளர்)

    * மொத்த சொத்து மதிப்பு ரூ.5.28 கோடி

    * மனைவி பெயரில் ரூ.42 லட்சம்

    * கடன் ரூ.97.78 லட்சம்

    6. முனிரத்னா (ஆர்.ஆர்.நகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர்)

    * மொத்த சொத்து மதிப்பு ரூ.270 கோடி

    * அசையும் சொத்து ரூ.31.34 கோடி

    * அசையா சொத்து ரூ.239 கோடி

    * மனைவி பெயரில் ரூ.22 கோடி

    * கடன் ரூ.93 கோடி

    7. உதய் கருடாச்சார் (சிக்பேட்டை பா.ஜனதா வேட்பாளர்)

    * மொத்த சொத்து மதிப்பு ரூ.200 கோடி

    * 22 கிலோ தங்க நகைகள்

    * கடன் ரூ.47 கோடி

    8. அருணாலட்சுமி (பல்லாரி நகர தொகுதி கல்யாண ராஜ்ஜிய பிரகதி கட்சி

    வேட்பாளர், ஜனார்த்தன ரெட்டியின் மனைவி)

    * மொத்த சொத்து மதிப்பு ரூ.200 கோடி

    * அசையும் சொத்து மதிப்பு ரூ.96 கோடி

    * அசையா சொத்து மதிப்பு ரூ.104 கோடி

    * ரூ.16 கோடி தங்க நகைகள்.

    • வருணா தொகுதி மக்கள் பணத்திற்கு மயங்கி என்னை கைவிட மாட்டார்கள்.
    • நான் செய்த சாதனைகள் இங்குள்ள மக்களின் மனதில் உள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நான் வருணா தொகுதியில் பிறந்து வளர்ந்தவன். இந்த மண்ணின் மகன். இவர் நம்மவர் என்ற மனநிலை மக்களிடம் உள்ளது. நான் இதற்கு முன்பு வருணா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது எனது சக்தியை மீறி பல்வேறு பணிகளை செய்துள்ளேன். நான் செய்த சாதனைகள் இங்குள்ள மக்களின் மனதில் உள்ளது.

    எனது வெற்றிக்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்?. ராமநகரை சேர்ந்த, பெங்களூருவில் அரசியல் செய்து கொண்டிருக்கும் சோமண்ணாவை பா.ஜனதா மேலிடம் கட்டாயப்படுத்தி வருணாவில் நிற்க வைத்துள்ளது.

    இது பா.ஜனதாவின் வேண்டுதல் ஆட்டிற்கும் (வேண்டுதலுக்காக பலியாக போகும் ஆடு), வருணாவின் மண்ணின் மைந்தருக்கும் இடையே நடைபெறும் தேர்தல். வருணா தொகுதி மக்கள் பணத்திற்கு மயங்கி என்னை கைவிட மாட்டார்கள்.

    இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

    • கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
    • அமித்ஷா வருகிற 21, 22-ந்தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள். தற்போது மனு தாக்கல் நடைபெற்று வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டால், களத்தில் யார் உள்ளனர் என்பது தெரியவரும்.

    அதன் பிறகு தேர்தல் களத்தில் பரபரப்பு அதிகரிக்கும். சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடி 7 முறை கர்நாடகத்திற்கு வருகை தந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒருமுறை வந்த மோடி, பந்திப்பூர் வனத்தில் சபாரி சென்று வன விலங்குகளை பார்த்து மகிழ்ந்தார்.

    இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி வருகிற மே 1-ந் தேதி முதல் தனது பிரசாரத்தை தொடங்குவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 10 நாட்கள் இங்கு பிரசாரம் செய்யும் அவர், சுமார் 30 பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு ஓட்டு சேகரிப்பார் என்று கூறப்படுகிறது. அவரது பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    ஒரு நாளைக்கு குறைந்தது 3 பிரசார கூட்டங்களில் பங்கேற்க அவர் திட்டமிட்டுள்ளார். அதே போல் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் 10-க்கும் மேற்பட்ட பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். இது மட்டுமின்றி உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள், பா.ஜனதா முன்னணி தலைவர்கள், பிற மாநில பா.ஜனதா முதல்-மந்திரிகள் என பல தலைவர்கள் கர்நாடகத்தை முற்றுகையிட்டு பிரசாரம் செய்ய உள்ளனர். அதனால் வரும் நாட்களில் கர்நாடக சட்டசபை தேர்தல் களத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் வருகிற 21, 22-ந்தேதிகளில் அமித்ஷா பிரசாரத்துக்காக கர்நாடகம் வருகிறார். அவர் பெங்களூரு, தேவனஹள்ளி, தாவணகெரேயில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

    • கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10-ம் தேதி நடக்கிறது.
    • வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை(வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஏற்கனவே கடந்த 15-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று(புதன்கிழமை) மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்கிறார். மனு தாக்கலுக்கு முன்பு அவர் ஆயிரக்கணக்கான பா.ஜனதா தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    இந்த ஊர்வலத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நடிகர் சுதீப் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இதன் மூலம் பா.ஜனதா தனது பலத்தை நிரூபிக்க உள்ளது.

    இன்று அமாவாசை என்பதால் பசவராஜ் பொம்மை பெயருக்காக ஏற்கனவே ஒரு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாஜகவில் இருந்து விலகிய எச்.டி.தம்மையா, சிக்கமகளூரு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
    • மொத்தம் உளள் 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி இதுவரை மொத்தம் 216 வேட்பாளர்களை அறிவித்துள்ளது

    பெங்களூரு:

    கர்நாடகாவில் அடுத்த மாதம் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று நான்காவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 7 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹூப்ளி-தர்பாத் மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதேபோல் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த எச்.டி.தம்மையா, சிக்கமகளூரு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் பாஜக சார்பில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி போட்டியிடுகிறார். இதேபோல் முதல்வர் பசவராஜ் பொம்மை போட்டியிடும் ஷிகான் தொகுதியில் அவரை எதிர்த்து முகமது யூசுப்பை நிறுத்தி உள்ளது.

    தற்போதைய எம்எல்ஏ துர்கப்பா எஸ்.ஹூலகேரி, லிங்சுகர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். ஹரிஹர் தொகுதி எம்எல்ஏ ராமப்பாவுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த தொகுதியில் நந்தகவி ஸ்ரீனிவாஸ் போட்டியிடுகிறார். ஹூங்ளி தர்வாட் மேற்கு தொகுதியில் தீபக்சின்சோர், ஷரவணபெலகோலா தொகுதியில் கோபாலசுவாமி நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மொத்தம் உளள் 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி இதுவரை மொத்தம் 216 வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    பெங்களூரு:

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கர்நாடகாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    நேற்று முந்தினம் தேர்தல் பணிக்காக அண்ணாமலை கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திற்கு வந்தார். பெரும்பாலும் காரில் பயணிக்கும் அவர் நேற்று ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி வந்தார். அவரின் அந்த ஹெலிகாப்டர் பயணம் தான் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அவர் வந்த ஹெலிகாப்டரில் பைகளில் பெருமளவு பணம் கொண்டு வரப்பட்டது என்று உடுப்பி மாவட்டம் கப்பு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வினய் குமார் சொர்கி குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு தமிழகம் மற்றும் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

    நாங்கள் நேர்மையானவர்கள். அவதூறு பரப்பும் காங்கிரசார் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர். பா.ஜ.க.வுடன் போட்டியிட பயந்துதான் சொரகே இப்படி பேசுகிறார். கப்பு தொகுதியில் எங்கள் வேட்பாளர் குர்மே சுரேஷ் ஷெட்டி வெற்றி பெறுவது உறுதி.

    நான் ஹெலிகாப்டரில் வந்தது உண்மைதான். உடுப்பியிலிருந்து அவசரமாக 5 நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டது. சூல்யா, தீர்த்தஹள்ளி, சிக்கமகளூரு அனைத்தும் சற்று தூரத்தில் உள்ளன. எல்லா இடங்களிலும் சரியான நேரத்தில் இருக்க வேண்டும். அதனால்தான் ஹெலிகாப்டரில் சென்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கர்நாடகத்தில் சட்டசபை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.
    • தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 1,490 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    பெங்களூரு

    கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகத்தில் சட்டசபை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதன் காரணமாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.71 கோடியே 93 லட்சத்து 1 ஆயிரத்து 992 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    ரூ.18 கோடியே 87 லட்சத்து 69 ஆயிரத்து 240 மதிப்புள்ள பரிசு பொருட்களும், ரூ.38 கோடியே 74 லட்சத்து 59 ஆயிரத்து 97 மதிப்புள்ள மதுபானமும், ரூ.15 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 261 மதிப்புள்ள போதைப்பொருளும், ரூ.29 கோடியே 43 லட்சத்து 1 ஆயிரத்து 885 மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    மொத்தம் ரூ.174 கோடியே 10 லட்சத்து 21 ஆயிரத்து 476 மதிப்புள்ள ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 1,490 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 68 ஆயிரத்து 113 உரிமம் பெற்ற துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைத்துள்ளனர். 20 துப்பாக்கிகளின் உரிமங்கள் ரத்த செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எம்.டி.பி. நாகராஜுக்கு ரூ.1,510 கோடி சொத்துகள் உள்ளன.
    • டி.கே.சிவக்குமாருக்கு ரூ.1,347 கோடி உள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தோ்தலையொட்டி தற்போது வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. நேற்று நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி எம்.டி.பி.நாகராஜ் ஒசக்கோட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளார். இதில் அவரின் சொத்து மதிப்பு ரூ.1,510 கோடி என்று காட்டியுள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை இடைத்தேர்தலில் அவர் போட்டியிட்டார். அப்போது அவரது சொத்து மதிப்பு ரூ.1,015 கோடியாக இருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.495 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. அவரிடம் ரொக்கமாக ரூ.6.48 கோடி, அவரது மனைவியிடம் ரூ.34.29 லட்சமும், வங்கி டெபாசிட் அவரது சேமிப்பு கணக்கில் ரூ.29.12 கோடி, மனைவி பெயரில் ரூ.6.16 கோடி, நிலையான டெபாசிட் அவரது பெயரில் ரூ.33 கோடி, மனைவி பெயரில் 1.99 கோடி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அவர் ரூ.105.91 கோடியை பிறருக்கு கடன் வழங்கியுள்ளார். அவரது மனைவி ரூ.19.93 கோடி கடன் வழங்கி இருக்கிறார். அவரிடம் 993 கிராம் தங்க நகைகள், ரூ.98.93 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், 234 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளன. இந்த தங்க நகைகள், வைரம், வெள்ளி பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2.41 கோடி ஆகும்.

    அவரது மனைவியிடம் 2 கிலோ 879 கிராம் தங்க நகைகள், 26 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளன. அவரிடம் உள்ள தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூ.1.64 கோடி ஆகும். எம்.டி.பி.நாகராஜிடம் உள்ள அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.372.42 கோடி. அவரது மனைவியிடம் உள்ள அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.163.78 கோடி ஆகும்.

    எம்.டி.பி.நாகராஜிடம் உள்ள அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.798.38 கோடி ஆகும். அவரது மனைவியிடம் ரூ.274.97 கோடி சொத்துக்கள் உள்ளன. வங்கிகள் உள்ளிட்ட பிற நிதி நிறுவனங்களில் அவருக்கு ரூ.71 கோடியும், அவரது மனைவிக்கு ரூ.27.35 கோடியும் கடன் உள்ளது. எம்.டி.பி.நாகராஜ், அவரது மனைவியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,607 கோடி.

    இதில் அவர்களின் கடன்களை கழித்தால், சொத்து மதிப்பு ரூ.1,510 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் பிரமாண பத்திரத்தில் இடம் பெற்றுள்ளன.

    இதுபோல் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று கனகபுராவில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவுடன் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கும், அவரது மனைவிக்கும் சோ்த்து சுமார் ரூ.1,347 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அவரது மனைவி பெயரில் ரூ.133 கோடி சொத்துக்கள் உள்ளன. மீதமுள்ள சொத்துக்கள் டி.கே.சிவக்குமார் பெயரில் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு ரூ.840 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.507 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. டி.கே.சிவக்குமாருக்கு ரூ.226 கோடியும், அவரது மனைவிக்கு ரூ.34 கோடியும் கடன் உள்ளது.

    இவர்களைவிட பெங்களூரு சிக்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் டிக்கெட் கேட்டு வந்த கே.ஜி.எப். பாபு தற்போது தனது மனைவி சஜியா தரணத்தை சுயேச்சையாக களம் நிறுத்தி உள்ளார். அவரது மனைவி பெயரில் ரூ.1,662 கோடி சொத்து இருப்பதாக அவர் பிரமாண பத்திரத்தில் கணக்கு காட்டி இருக்கிறார். இதன்மூலம் அவர் கர்நாடகத்தில் பணக்கார வேட்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • என்னை ஏன் ஓரங்கட்டினர் என்று புரியவில்லை.
    • என்னை அவமதித்தால் வேதனைக்கு உள்ளானேன்.

    பெங்களூரு :

    பெங்களூருவில் நடந்த விழாவில் காங்கிரசில் சேர்ந்த பிறகு ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த நான், தற்போது காங்கிரசில் சேர்ந்தது ஏன் என்று பலருக்கும் கேள்வி எழும். ஆனால் கடந்த சில மாதங்களாக நான் அனுபவித்த வேதனையை யாரும் புரிந்துகொள்ளவில்லை. நான் பா.ஜனதா கட்சியை கட்டமைத்தேன். வட கர்நாடகத்தில் கட்சியை வளர்த்தேன். எனக்கு பா.ஜனதா வழங்கிய பதவிகளுக்கான நான் விசுவாசமிக்க தொண்டராக கட்சியை பலப்படுத்தினேன். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் நான் 6 முறை எம்.எல்.ஏ. ஆகியுள்ளேன். 7-வது முறையாக போட்டியிட உள்ளேன்.

    கடந்த 2 ஆண்டுகளாக எனது தொகுதியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தேன். எனக்கு டிக்கெட் இல்லை என்று கூறியபோது அதிர்ச்சி அடைந்தேன். மூத்த தலைவரான எனக்கு உரிய கவுரவத்தை கட்சி வழங்கவில்லை. நான் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பவில்லை என்றால் ஒரு வாரம் முன்னதாகவே என்னிடம் பேசி இருந்தால் நான் அதை ஏற்றுக்கொண்டு இருப்பேன்.

    நான் எப்போதும் ஆட்சி அதிகாரத்திற்காக அரசியல் செய்தது கிடையாது. நான் சங்பரிவாரில் இருந்து வந்தவன். என்னை ஏன் ஓரங்கட்டினர் என்று புரியவில்லை. எனக்கு மக்களின் ஆதரவு உள்ளது. என்னை அவமதித்தால் வேதனைக்கு உள்ளானேன். எனது தொகுதி மக்களின் சுயமரியாதைக்கு அவமரியாதை ஏற்பட்டதால், நான் வேறு வழியின்றி பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்துள்ளேன். எனது ஆதரவாளர்கள், நலம் விரும்பிகளின் கருத்தை கேட்டு இந்த முடிவை எடுத்தேன்.

    எனக்கு ஏற்பட்ட அவமானத்தை சரிசெய்யவே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன். 6 மாதம் கழித்து வேண்டுமானால் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் அப்போது யாரை வேண்டுமானாலும் நிறுத்தி கொள்ளுங்கள் என்று பா.ஜனதா மேலிட தலைவர்களிடம் கூறினேன். இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கர்நாடகத்தில் இன்று மாற்றத்திற்கான நாள் தொடங்கியுள்ளது. நான் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் பணியை செய்வேன்.

    இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

    • பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரடி சங்கண்ணா எம்.பி.யும் கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறார்.
    • ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் இருந்து தனி விமானத்தில் பெங்களூருவுக்கு வந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட மூத்த தலைவர்கள், சில எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

    பீதர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சூர்யகாந்த் நாகமரபள்ளி. இவருக்கு மீண்டும் பா.ஜனதா சார்பில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த சூர்யகாந்த் நாகமரபள்ளி, சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார். மேலும் பா.ஜனதாவில் இருந்தும் விலகினார்.

    இந்நிலையில் அவர் தனது ஆதரவாளர்களுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர உள்ளார். இதற்கிடையே ஜனதா தளம்(எஸ்) கட்சியின் சின்னம், கொடி ஆகியவற்றுடன் சூர்யகாந்த் நாகமரபள்ளியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரடி சங்கண்ணா எம்.பி.யும் கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறார்.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொப்பல் தொகுதியில் போட்டியிட்டு அவர் எம்.பி.யாக இருந்தார். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் வழங்க வேண்டும் என்று கரடி சங்கண்ணா எம்.பி. பா.ஜனதா மேலிட தலைவர்களை வலியுறுத்தி வந்தார். ஆனால் எம்.பி.யாக இருக்கும், யாருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்று பா.ஜனதா மேலிடம் கரடி சங்கண்ணாவிடம் திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.

    இதையடுத்து, தன்னுடைய மகன் கவிசித்தப்பாவுக்கு கொப்பல் தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்கும்படி கரடி சங்கண்ணா கேட்டு வந்தார். ஆனால் கவிசித்தப்பாவுக்கும் சீட் வழங்காமல், கொப்பல் தொகுதிக்கு பா.ஜனதா வேட்பாளரை அறிவித்துள்ளது. இதன் காரணமாக அதிருப்தி அடைந்துள்ள கரடி சங்கண்ணா நேற்று கொப்பலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, இன்று (திங்கட்கிழமை) டெல்லிக்கு சென்று சபாநாயகர் ஓம்பிரகாஷ் பிர்லாவை சந்தித்து எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய கரடி சங்கண்ணா முடிவு செய்துள்ளார்.

    பின்னர் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இணைந்து வருகிற 19-ந் தேதி கொப்பல் தொகுதியில் அவர் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்துள்ள முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அக்கட்சியில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் இருந்து தனி விமானத்தில் பெங்களூருவுக்கு வந்தார்.

    இன்று (திங்கட்கிழமை) அவர் காங்கிரசில் சேர உள்ளார் என்றும், உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் அவர் காங்கிரஸ் வேட்பாளராக நிற்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தற்போது எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவை நேரில் சந்தித்து பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகினார் ஜெகதீஷ் ஷெட்டர்.
    • பாஜகவில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் இன்று காங்கிரசில் இணைந்தார்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜனதாவில் சீட் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்த முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். பா.ஜ.க.வில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்தார்.

    இதையடுத்து ஜெகதீஷ் ஷெட்டர் இன்று காங்கிரசில் சேர உள்ளார் என்றும், உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் அவர் காங்கிரஸ் வேட்பாளராக நிற்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகின.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், சித்தராமையா முன்னிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் இன்று இணைந்தார்.

    ஜெகதீஷ் ஷெட்டருக்கு காங்கிரஸ் தரப்பில் ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×