என் மலர்
இந்தியா

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று வேட்புமனு தாக்கல்
- கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10-ம் தேதி நடக்கிறது.
- வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை(வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஏற்கனவே கடந்த 15-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று(புதன்கிழமை) மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்கிறார். மனு தாக்கலுக்கு முன்பு அவர் ஆயிரக்கணக்கான பா.ஜனதா தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்த ஊர்வலத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நடிகர் சுதீப் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இதன் மூலம் பா.ஜனதா தனது பலத்தை நிரூபிக்க உள்ளது.
இன்று அமாவாசை என்பதால் பசவராஜ் பொம்மை பெயருக்காக ஏற்கனவே ஒரு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story