என் மலர்tooltip icon

    உத்தரகாண்ட்

    • உத்தரகாண்டில் அடுத்தடுத்த ஏற்பட்ட நிலச்சரிவால் வீடுகள் மண்ணில் புதைந்தன.
    • 3 ஆயிரம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் இமயமலை பகுதியில் அமைந்துள்ளது ஜோஷிமத் நகரம். இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உண்டு.

    இந்நிலையில், இந்தப் பகுதியில் திடீரென அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் ஏறத்தாழ 570 வீடுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. பல வீடுகள் மண்ணில் புதைந்துவிட்டதால் அங்கு வசித்து வரும் மக்கள் பீதியில் உள்ளனர்.

    தகவலறிந்த முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி ஜோஷிமத் நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பலர் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். பாதுகாப்பற்ற சூழல் காரணமாக 60 குடும்பங்கள் அப்பகுதியில் இருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். 29 குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 500 குடும்பங்கள் தங்களது பாதுகாப்பற்ற வீடுகளில் தொடர்ந்து வசித்து வருகின்றனர்.

    மேலும், இந்த நிலச்சரிவால் 3 ஆயிரத்திறகும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வீடுகள் பாதிக்கப்பட்டு வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியவர்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு வீட்டு வாடகையாக மாதம் 4,000 ரூபாய் முதல் மந்திரியின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

    • உத்தரகாண்ட் மாநிலம் நேபாளம் மற்றும் சீனாவுடன் எல்லையை பகிர்ந்துள்ளது.
    • உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பாகிஸ்தான் நாட்டு கொடிகள், பேனர்கள் கிடந்தன.

    உத்தர்காசி:

    உத்தரகாண்ட் மாநிலம் நேபாளம் மற்றும் சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காசி மாவட்டத்தில் துல்யாடா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டிய வனப்பகுதிக்குள் பாகிஸ்தான் நாட்டு கொடிகள் மற்றும் பேனர்கள் கிடந்தன.

    வனப்பகுதியில் கிடந்த பலூன்களில் பாகிஸ்தான் கொடிகள் மற்றும் உருது மொழியில் எழுதப்பட்ட பேனர்கள் கிடந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அங்கு ஆய்வு செய்தனர்.

    மத்திய விசாரணை அமைப்புகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.

    • காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஒரு கேலி கூத்தான நாடகம்.
    • காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை, அதிகாரம் மட்டுமே உள்ளது.

    தெக்ரி கர்வால்:

    காங்கிரஸ் கட்சியில் பல தலைவர்கள் இருந்தாலும், முக்கிய தலைவர்கள் காந்தி (சோனியாகாந்தி) குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார்.

    மல்லிகார்ஜுனா கார்கே கட்சியின் தேசிய தலைவர் என்றும், காங்கிரஸ் அமைப்பை வலுப்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை பாஜக விமர்சித்துள்ளது.

    இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜகவை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கூறியுள்ளதாவது:

    முதல் நாளிலிருந்தே நான் கூறியதை சல்மான் குர்ஷித் உறுதிப்படுத்தி உள்ளார். அதிகாரம் காந்தி (சோனியாகாந்தி) குடும்பத்திடம் மட்டுமே உள்ளது. காங்கிரசில் நடைபெற்ற தலைவர் தேர்தல், கட்சியில் ஜனநாயகம் மற்றும் மாற்றத்தை பிரதிபலிப்பதாக சிலர் தெரிவித்தனர்.

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஒரு கேலி கூத்தான நாடகம். கார்கேவை ரிமோட் கண்ட்ரோலாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்துகிறது. அவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் மட்டுமே, காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை, அதிகாரம் காந்தி குடும்பத்திடம் மட்டுமே உள்ளது என்பதே உண்மை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இன்று அதிகாலை 2.19 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 5 கிமீ ஆழத்தில் இருந்தது.

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷியில் இன்று அதிகாலையில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இன்று அதிகாலை 2.19 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 5 கிமீ ஆழத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

    • கலாச்சார மற்றும் ஆன்மீக மரபு ஆகியவை இன்றைய இளைஞர்களுக்கு அவசியம் என்று குறிப்பிட்டார்.
    • கடந்த காலத்தில் இந்தியாவின் ஆன்மீக, அறிவுசார் மேலாதிக்கத்தை சர்வதேச அளவில் ஏற்றுக்கொண்டனர்

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடுனில், ஸ்வாமி ராம் ஹிமாலயன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, 300 ஆண்டுகள் பிரிட்டிஷ் ஆட்சியானது, இந்தியர்கள் தங்கள் புகழ்பெற்ற பாரம்பரியங்களைப் பற்றி அறிந்து கொள்வதைத் தடுத்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

    வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கு, நாட்டின் சிறப்புமிக்க கடந்த காலம், அதன் சிறந்த கலாச்சார மற்றும் ஆன்மீக மரபு ஆகியவை தொடர்பான வலுவான விழிப்புணர்வு இன்றைய இளைஞர்களுக்கு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    கடந்த காலத்தில் இந்தியாவின் ஆன்மீக மற்றும் அறிவுசார் மேலாதிக்கத்தை சர்வதேச அளவில் இயல்பாக ஏற்றுக்கொண்டனர் என்றும், பல்வேறு அறிவுத் துறைகளில் இந்தியாவின் பாதையை உடைக்கும் பங்கை ஒப்புக்கொண்ட சீன அறிஞர்களையும் ராஜ்நாத் சிங் மேற்கோள் காட்டினார்.

    சீன அறிஞர்களில் ஒருவரை மேற்கோள் காட்டி பேசிய அவர், "இருபடி சமன்பாடு, இலக்கணம் மற்றும் ஒலிப்பு முறை ஆகியவற்றில் இந்தியா சீனாவின் ஆசிரியராக இருந்தது" என்றார்.

    • உத்தரகாண்டில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இது 3.1 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி பகுதியில் இன்று அதிகாலை 1.50 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் 3.1 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு விண்கலத்தை அனுப்பும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது.
    • இத்திட்டம் நிறைவேறினால் நிலவு ஆராய்ச்சியில் பல சுவாரஸ்ய தகவல்கள் கண்டறியப்படலாம் என இஸ்ரோ தெரிவித்தது.

    டேராடூன்:

    இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் விண்கலங்களை அனுப்புவது தொடர்பான திட்டப்பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.

    குறிப்பாக சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய விண்கலங்களை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், உத்தரகாண்டின் டேராடூனில் ஆகாஷ் தத்வா மாநாடு நடந்தது. இதில் அலகாபாத் சார்பு இயற்பியல் ஆய்வக இயக்குனர் அனில் பரத்வாஜ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து நிலவின் இருண்ட மறுபக்கத்திற்கு இஸ்ரோவின் விண்கலத்தை அனுப்பும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இந்த திட்டத்தின்படி, ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட ரோவர் மற்றும் லேண்டர் கருவிகளை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளோம்.

    சூரிய வெளிச்சமே இல்லாத நிரந்தர இருளைக் கொண்ட நிலவின் மறுபக்கத்தைக் குறித்து ஆய்வு செய்ய இந்த திட்டம் உதவும்.

    இந்த திட்டம் நிறைவேறினால் நிலவு ஆராய்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் கண்டறியப்படலாம் என தெரிவித்தார்.

    • இமயமலை பகுதியில் அமைந்துள்ளது கேதார்நாத் கோவில்.
    • பத்ரிநாத் கோவில், நவம்பர் 19-ந்தேதி மூடப்படுகிறது.

    டேராடூன் :

    உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோவில்கள், குளிர்காலத்தில் பனியால் சூழப்பட்டு இருக்கும். எனவே, குளிர்காலத்தையொட்டி, இக்கோவில்கள் 6 மாதங்களுக்கு மூடப்படுவது வழக்கம். அதன்படி, கேதார்நாத் கோவில் நேற்று காலை 8.30 மணிக்கு மூடப்பட்டது. அதற்கு முன்பு, வேத மந்திரங்கள் முழங்க வழிபாடு நடத்தப்பட்டது.

    அப்போது, 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களும், மாவட்ட அதிகாரிகளும், கோவில் கமிட்டி நிர்வாகிகளும் இருந்தனர். இந்திய ராணுவத்தின் மராத்தி ரெஜிமெண்ட் படைப்பிரிவினர், பக்தி பாடல்களை இசைத்தனர். யமுனோத்ரி கோவிலும் நேற்று மூடப்பட்டது. கங்கோத்ரி கோவில் நேற்று முன்தினம் மூடப்பட்டது. பத்ரிநாத் கோவில், நவம்பர் 19-ந்தேதி மூடப்படுகிறது.

    • உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகினர், மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
    • நிலச்சரிவில் சிக்கி உயிரிழவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள தரலி பகுதியில் இன்று காலை 3 வீடுகள் இடிந்து விழுந்தது. இதில், சிறுமி உள்பட 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

    இவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 12 வயது சிறுமி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இரண்டு பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    மலையில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, பெரிய பாறைகள் உருண்டு இந்த வீடுகள் மீது விழுந்தன. இதன் காரணமாக இந்த வீடுகள் இடிந்து மண்ணில் புதைந்தன. இடிபாடுகளுக்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் புதையுண்டனர்.

    தகவல் கிடைத்ததும், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வீட்டிற்குள் இருந்தவர்களை வெளியேற்றும் நேரத்தில், இடிபாடுக்குள் சிக்கிய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர்.

    விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தரலி துணை ஆட்சியர் ரவீந்திர சிங் ஜுவந்தா தெரிவித்தார்.

    இந்த சம்பவத்தையடுத்து அந்த கிராமம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

    மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • இந்திய ஆன்மீக தளங்கள் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டன.
    • ஆலயங்களுக்கு செல்லும் பாதைகள் கூட மிகவும் மோசமான நிலையில் இருந்தன.

     மானா:

    உத்தராகண்ட் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் பூஜை செய்து வழிபட்டார். பின்னர் மானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    130 கோடி மக்களும் எனக்கு கடவுளின் வடிவம். கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் தரிசனங்களால் என் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டது, மனம் மகிழ்ச்சியடைந்தது, இந்தத் தருணங்கள் உயிர்ப்புடன் மாறியுள்ளன. இந்த ஆலயங்களின் பாழடைந்த நிலை அடிமை மனப்பான்மையின் தெளிவான அறிகுறி. இந்த ஆலயங்களுக்கு செல்லும் பாதைகள் கூட மிகவும் மோசமான நிலையில் இருந்தன.

    இந்தியாவின் ஆன்மீக மையங்கள் பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டன. இதற்கு முந்தைய அரசுகளின் சுயநலம் தான் காரணம். இந்த ஆன்மீக மையங்கள் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பக்தியை வளர்க்கும் இடங்கள் என்பதை அவர்கள் மறந்து விட்டனர். இன்று, காசி, உஜ்ஜயினி, அயோத்தி மற்றும் பல ஆன்மீக மையங்கள் இழந்த பெருமையையும், பாரம்பரியத்தையும் மீட்டெடுத்து வருகின்றன.

    அயோத்தியில் ராமர் கோவிலில் இருந்து குஜராத்தின் மா காளிகா கோவில் வரை இந்தியாவின் கலாச்சார மற்றும் பாரம்பரிய மேம்பாடு பிரதிபலிக்கிறது. நமது பாரம்பரியத்தின் பெருமை மற்றும் வளர்ச்சிக்கான அனைத்து முயற்சிகளும் 21-ம் நூற்றாண்டின் வளர்ச்சியடைந்த இந்தியாவின் இரண்டு முக்கிய தூண்கள். இன்று உத்தராகண்ட் மாநிலம் இந்த இரண்டு தூண்களையும் பலப்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சுமார் 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
    • சீன எல்லை அருகே உள்ள அந்த கிராமத்துக்கு பிரதமர் மோடி செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 புகழ்பெற்ற திருத்தலங்கள் உள்ளன. இந்த 4 திருத்தலங்களையும் தரிசனம் செய்யும் ஆன்மிக பயணத்தை சார்தாம் யாத்திரை என்று அழைக்கிறார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் கடும் பனி பொழிவு இருக்கும் என்பதால் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான கோடை காலத்தில் மட்டுமே இந்த தலங்களுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். குளிர்காலத்தில் இந்த ஆலயங்கள் மூடப்பட்டே இருக்கும்.

    பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் கேதார்நாத், பத்ரிநாத் ஆலயங்களில் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி இந்த ஆண்டு தரிசனத்துக்காக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) 2 நாள் பயணமாக உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சென்றார்.

    டேராடூன் விமான நிலையத்தில் அவரை உத்தரகாண்ட் கவர்னர் குர்மீத் சிங், முதல்-மந்திரி புஸ்கர் சிங் தாமி, மத்திய மந்திரி அஜய் பட் ஆகியோர் வரவேற்றனர். அதன்பிறகு பிரதமர் மோடி டேராடூனில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத்துக்கு புறப்பட்டு சென்றார்.

    காலை 8.30 மணிக்கு அவரது ஹெலிகாப்டர் கேதார்நாத்தில் தரை இறங்கியது. அங்கிருந்து அவர் கேதார்நாத் ஆலயத்துக்கு சென்றார். பிரதமர் மோடி வருகையையொட்டி கேதார்நாத் சிவாலயம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    அங்கு அவர் சிறப்பு பூஜைகள் செய்தார். கேதார்நாத்தில் ஆதிசங்கரர் முக்தி அடைந்ததாக கூறப்படும் இடத்திலும் அவர் வழிபாடுகள் செய்தார். சிறிது நேரம் அங்கு அமர்ந்து தியானமும் செய்தார்.

    இதையடுத்து கேதார்நாத்-கவுரிகுண்ட் இடையே 7.9 கி.மீ. தொலைவில் அமைய இருக்கும் ரோப்கார் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கேதார்நாத்தில் சுமார் 3 மணி நேரம் அவர் இருந்தார். அதன் பிறகு அவர் பத்ரிநாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றார்.

    அங்கு நடைபெறும் ஆலயத் திருப்பணிகள் பற்றி ஆய்வு செய்தார். இன்று பிற்பகல் பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் சீன எல்லையில் அமைந்துள்ள மனா கிராமத்துக்கு செல்கிறார். அங்கு அவர் சுமார் 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மனா கிராமத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி பேச உள்ளார். சீன எல்லை அருகே உள்ள அந்த கிராமத்துக்கு பிரதமர் மோடி செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • கேதார்நாத் கோவிலில் பூஜை செய்த பிறகு, பிரதமர் மோடி 9.7 கிமீ கௌரிகுண்ட்- கேதார்நாத் ரோப்வே திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
    • பிரதமர் மோடியின் வருகையையொட்டி இரண்டு புகழ்பெற்ற மலைக்கோயில்களைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வழிபாடு செய்தார். இங்கு, மலைவாழ் மக்களின் வெள்ளை நிற பாரம்பரிய மற்றும் "ஸ்வஸ்திகா" சின்னம் எம்ப்ராய்டரி பொறிக்கப்பட்ட ஆடை அணிந்து கொண்டு பிரதமர் மோடி இன்று கோவிலில் பூஜை செய்தார்.

    இதையடுத்து மோடி பத்ரிநாத் கோவிலுக்கும் செல்ல உள்ளார். இதற்காக இரண்டு கோவில்களிளும் குவிண்டால் கணக்கில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    இதைதவிர மாநிலத்தில் தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின்போது, ​​நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி பார்வையிட்டு, சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    கேதார்நாத் கோவிலில் பூஜை செய்த பிறகு, பிரதமர் மோடி 9.7 கிமீ கௌரிகுண்ட்- கேதார்நாத் ரோப்வே திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். கேதார்நாத்தில் தனது இரண்டரை மணி நேர நிகழ்ச்சியின்போது, ​​ஆதி குரு சங்கராச்சாரியாரின் சமாதி ஸ்தலத்தையும் மோடி பார்வையிட உள்ளார்.

    பிரதமர் மோடியின் வருகையையொட்டி இரண்டு புகழ்பெற்ற மலைக்கோயில்களைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    ×