என் மலர்
உத்தரப் பிரதேசம்
- 183 நோயாளிகள் ஐ.சி.யூ.வில் சிகிச்சையை பெற்றுள்ளனர்.
- நெஞ்சுவலியால் அவதிப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 2 பக்தர்கள் மத்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுமார் 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று வரை சுமார் 8.81 கோடி பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி உள்ளனர்.
இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில் மகா கும்பமேளாவில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும் 183 நோயாளிகள் ஐ.சி.யூ.வில் சிகிச்சையை பெற்றுள்ளனர். 580 பேருக்கு சிறிய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. மேலும் 1.70 லட்சத்திற்கும் மேற்பட்ட ரத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு, 1,00,998 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகா கும்பமேளா மருத்துவ அமைப்பின் நோடல் அதிகாரி டாக்டர் கவுரவ் துபே கூறுகையில், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, மகா கும்பமேளாவில் உள்ள மத்திய மருத்துவமனை, லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. கும்பமேளாவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் சிறப்பான சுகாதார சேவையைப் பெறுகின்றனர்.
நெஞ்சுவலியால் அவதிப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 2 பக்தர்கள் மத்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 2 நோயாளிகளுக்கும் ஈசிஜி எடுக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஹனுமங்கஞ்ச் புல்பூரைச் சேர்ந்த 105 வயதான பாபா ராம் ஜேன் தாஸ் வயிற்று வலிக்காக மத்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்று அவர் கூறினார்.
- கடந்த ஒரு மாதமாக தொலைபேசியில் பேசி காதலை வளர்த்து வந்தார்.
- நீரஜ் குடும்பத்தினரால் திருமணத்தின்போது அப்பெண்ணுக்கு ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் பரிசாக அளிக்கப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் தனது திருமணத்தை பதிவு செய்ய காத்திருந்த மணமகன், தனது மனைவி மாயமானதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹர்தோய் மாவட்டத்தின் சாண்டியில் உள்ள நவாப்கஞ்சில் வசிக்கும் நீரஜ் குப்தா என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த பாபா என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணை திருமணம் செய்யத் தயாரானார். அந்த பெண்ணை பார்த்ததும் பிடித்துப்போக கடந்த ஒரு மாதமாக தொலைபேசியில் பேசி காதலை வளர்த்து வந்தார்.
இதனை தொடர்ந்து, நீரஜ் குடும்பத்தினரால் திருமணத்தின்போது அப்பெண்ணுக்கு ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் பரிசாக அளிக்கப்பட்டது. இதை அடுத்து கடந்த திங்கட்கிழமை திருமணத்தை பதிவு செய்ய நீதிமன்றத்திற்கு சென்ற போது நீரஜ் மற்றும் அப்பெண்ணும் மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் சில புகைப்படங்களை எடுத்துள்ளனர். அதன்பின் திருமணத்தை பதிவு செய்வதற்கான ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு அப்பெண்ணும், அப்பெண்ணை அறிமுகம் செய்தவருமான பாபாவும் காணாமல் போயினர்.
நீரஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் அப்பெண்ணை பல இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அப்பெண்ணையும், பாபாவையும் தேடி வருகின்றனர்.
- இதுவரை சுமார் 8.81 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
- மக்கள் அவருடன் செல்பி எடுக்க அலைமோதுகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை வரை நடைபெறும்.
இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இதுவரை சுமார் 8.81 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 54.96 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு மகா கும்பமேளாவில் வித்தியாசமான துறவிகள் கவனம் பெற்று வருகின்றனர். அதே வெளியில் பாசி மணி மாலைகள் விற்கும் மோனாலிசா போஸ்லே எனும் 16 வயதான பெண் இந்திய அளவில் சமூக ஊடகங்களில் டிரண்ட் ஆகி வருகிறார்.
திரை நடிகைகளின் போலித்தனங்கள் இல்லமால் எதார்த்தமான அழகுடன் அவர் இருப்பது பலரையும் கவர்ந்துள்ளது. மிளிரும் மாநிறத்தில் தனித்துவமான கண்களுடன் கும்பமேளாவில் பாசி மாலைகள் விற்கும் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனால் பல ஊடகங்கள் அவரிடம் கும்பமேளாவில் வைத்து பேட்டி எடுக்கவும், மக்கள் அவருடன் செல்பி எடுக்கவும் அலைமோதுகின்றனர். பல சமூக ஊடக பயனர்கள் லியோனார்டோ டா வின்சியின் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்துடன் இவருக்கு இருக்கும் ஒற்றுமையை எடுத்துக்காட்டுகின்றனர்.
- 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா
- 45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற டி20 தொடராக இந்தியன் பிரீமியர் லீக் உள்ளது. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அதிகளவு ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். தொடர் நடைபெற்று வருகிறது.
இதுவரை பல அணிகள் ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ள நிலையில், பெங்களூரு அணி இதுவரை கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கிறது. ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் பெங்களூரு அணி வித்தியாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது, எதிரணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் வெற்றிகனியை மட்டும் ஆர்சிபியால் எட்டிப் பறிக்க முடியாமல் உள்ளது.
இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரிலாவது ஆர்சிபி வெற்றி பெற வேண்டும் என்று அந்த அணியின் ரசிகர்கள் உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் ஆர்சிபி ஜெர்சியுடன் புனித நீராடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி ஒவ்வொரு ஆர்சிபி ரசிகரின் ஏக்கத்தையும் தூண்டிவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை வரை நடைபெறும். 40 கோடி பேர் வரை இந்த ஆண்டு கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- துப்பு கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
- என்கவுண்டரில் சிறப்பு படை போலீசின் இன்ஸ்பெக்டர் சுனிலுக்கு குண்டு காயம் ஏற்பட்டது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஜின்ஜானா பகுதியில் ரவுடி கும்பலை சேர்ந்த குற்றவாளிகளுக்கும்-சிறப்பு படை போலீசாருக்கும் இடையே இன்று அதிகாலை துப்பாக்கி சண்டை நடந்தது.
போலீசாரின் என்கவுண்டரில் 'முஷ்தபா காகா' கும்பலை சேர்ந்த அர்ஷத் மற்றும் அவரது கூட்டாளிகளான மஞ்ஜீத், சதீஷ் உள்பட 4 பேரை சுட்டுக்கொன்றனர்.
கொள்ளை சம்பவம் ஒன்றில் அர்ஷத் தேடப்பட்டு வந்தார். அவரை பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவரை சுட்டு பிடிக்க முயன்ற போதுதான் இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த என்கவுண்டரில் சிறப்பு படை போலீசின் இன்ஸ்பெக்டர் சுனிலுக்கு குண்டு காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- பிரயாக்ராஜ் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
- டிரோன் கேமராக்கள் மூலம் வான்வழி காட்சிகளும் படம் பிடிக்கப்படுகின்றன.
பிரயாக்ராஜ்:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுமார் 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் 4 நாட்களில் மட்டும் சுமார் 7 கோடி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில், மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களை கண்காணிக்க முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை உத்தரபிரதேச அரசு பயன்படுத்தி வருகிறது. பிரயாக்ராஜ் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கு போலீசார், அதிகாரிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது முதல் முறையாக ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொரு சதுர மீட்டருக்குள் எத்தனை பக்தர்கள் உள்ளனர் என்பதை கணக்கிட்டு வருகின்றனர்.
ஏ.ஐ. பொருத்தப்பட்ட 360-டிகிரி கேமராக்கள் கூட்ட நெரிசலை துல்லியமாக மதிப்பிடுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த கேமராக்கள் கூட்ட நெரிசல் தரவுகளை பதிவு செய்ய நிறுவப்பட்டுள்ளன. மேலும் டிரோன் கேமராக்கள் மூலம் வான்வழி காட்சிகளும் படம் பிடிக்கப்படுகின்றன.
இது எந்தப் பகுதியில் கூட்ட நெரிசல் அதிகரித்தாலும் சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், பக்தர்களுக்கு சிறந்த பாதுகாப்பு வசதியை உறுதி செய்யவும் உதவுகிறது.
- இந்த விவகாரத்தில் ஜூனா அகாரா அறிக்கை வெளியிட்டுள்ளது.
- ஜூனா அகாராவின் தலைமை புரவலர் மஹந்த் ஹரி கிரி விளக்கம் அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பிரம்மாண்டமான மகா கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது.
கோடிக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடுகின்றனர். மகா கும்பமேளாவுக்கு ஏராளமான துறவிகளும் வந்துள்ளனர்.
அந்த வகையில் ஐஐடி பாம்பேயில் பி.டெக். ஏரோஸ்பேஸ் [விண்வெளிப் பொறியாளராக] பயின்று பின் அதை துறந்து சன்யாசம் புகுந்த அரியானாவை சேர்ந்த அபய் சிங் கும்பமேளாவுக்கு வந்திருந்தார். ஐஐடி பாபா என்ற அடைமொழியுடன் அவர் இணையத்தில் வைரலானார்.
இந்நிலையில் தனது குரு மஹந்த் சோமேஷ்வர் புரியை அவமரியாதை செய்ததற்காக சாதுக்களின் மிகப்பெரிய பிரிவுகளில் ஒன்றான ஜூனா அகாராவிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அகாரா முகாமில் இருந்து கடந்த சனிக்கிழமை இரவு அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஜூனா அகாரா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒழுக்கமும் குரு பக்தியும் முதன்மையானது என்றும், இந்தக் கொள்கையைப் பின்பற்ற முடியாத எவரும் சன்யாசி ஆக முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜூனா அகாராவின் தலைமை புரவலர் மஹந்த் ஹரி கிரி கூறுகையில், அபய் சிங்கின் செயல் குரு-சிஷ்ய மரபு மற்றும் சன்னியாசம் (துறவு) ஆகியவற்றுக்கு எதிரானது. நீங்கள் உங்கள் குருவை அவமதித்து, சனாதனத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை காட்டியுள்ளீர்கள். உங்கள் மனதில் மதத்திற்கோ அல்லது குருபீடத்திற்கோ எந்த மரியாதையும் இல்லை என்று கூறினார்.
ஒரு சமூக வலைதள ரீல் வீடியோவில் அபய் சிங், தனது தந்தை மற்றும் குருவுக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக தெரிகிறது.
ஜூனா அகாரா முகாமில் இருந்து வெளியேற்றப்பட்ட ஐஐடடி பாபா அபய் சிங் மற்றொரு துறவியின் முகாமில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் பிரயாக்ராஜைப் புகழ்ந்து பாடுவது உண்மையிலேயே பிரமிக்க வைத்தது
- சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் தொடர்ந்து கும்பமேளாவில் புனித நீராடி வருகின்றனர்.
பிரயாக்ராஜ்:
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கடந்த 13-ந் தேதி முதல் மகா கும்பமேளா நடந்து வருகிறது. இதில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்களால் பிரயாக்ராஜ் நகரமே திக்குமுக்காடி வருகிறது. மவுனி அமாவாசையை முன்னிட்டு கும்பமேளா வளாகத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:-
நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். வெளிநாட்டு பக்தர்கள் இங்கே புனித நீராடிய பின் நெகிழ்ச்சியடைந்து செல்வதை நாள்தோறும் பார்க்க முடிகிறது.
ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் பிரயாக்ராஜைப் புகழ்ந்து பாடுவது உண்மையிலேயே பிரமிக்க வைத்தது. அவர்களுக்கு இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தெரியாது. ஆனாலும் அவர்கள் இந்த மொழிகளில் மந்திரங்கள் மற்றும் சனாதன தர்மத்துடன் தொடர்புடைய வசனங்களை மிகுந்த பக்தியுடன் உச்சரிக்கின்றனர்.
பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், கவர்னர்கள், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் தொடர்ந்து கும்பமேளாவில் புனித நீராடி வருகின்றனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரும் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக திட்டமிட்டு உள்ளனர்.
மகர சங்கராந்தி மற்றும் பவுஷ் பவுர்மணி தினத்தில் என்னால் புனித நீராட முடியவில்லை. சாதுக்கள் மற்றும் பக்தர்களுக்கு என்னால் சிரமம் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக நானாகவே பங்கேற்கவில்லை.
இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.
- உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- லட்சக்கணக்கானோர் திரண்டுள்ள கும்பமேளாவின் ஒரு இடத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [ திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை வரை நடைபெறும். 40 கோடி பேர் வரை இந்த ஆண்டு கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
லட்சக்கணக்கானோர் திரண்டுள்ள கும்பமேளாவின் ஒரு இடத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
பிரயாக்ராஜ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் தீயில் கருகியதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [ திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை வரை நடைபெறும். 40 கோடி பேர் வரை இந்த ஆண்டு கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புனித நீராடுவதற்காக பொது மக்களும் முக்கிய பிரமுகர்களும் மகாகும்பத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சசிங் மகா கும்பமேளாவில் பங்கேற்றுள்ளார்.
புனித திரிவேணியில் அவர் இன்று [சனிக்கிழமை] நீராடினார். இன்று மதியம் 12 மணிக்கு பிரயாக்ராஜை அவர் வந்தடைந்தார். இரண்டு நாள் பயணமாக உத்தரப் பிரதேசம் வந்துள்ள அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதுவரை, 2025 மகாகும்பத்தில் 7 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் விடுத்த அழைப்பின்படி பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 8 அல்லது 9 ஆம் தேதி கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தடை உத்தரவுகள் ஜனவரி 16 முதல் பிப்ரவரி 28 வரை விதிக்கப்பட்டுள்ளதாக பிரயாக்ராஜின் கூடுதல் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி எந்த நிகழ்ச்சி, ஊர்வலம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தக்கூடாது.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை என மொத்தம் 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில் மகா கும்பமேளாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைத் தடுக்கும் வகையில், பிப்ரவரி 28 வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023-ன் பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவுகள் ஜனவரி 16 முதல் பிப்ரவரி 28 வரை விதிக்கப்பட்டுள்ளதாக பிரயாக்ராஜின் கூடுதல் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
குடியரசு தினம், மௌனி அமாவாசை, பசந்த பஞ்சமி, சந்த் ரவிதாஸ் ஜெயந்தி, மாகி பூர்ணிமா, காதலர் தினம், ஷப்-இ-பாரத், மகாசிவராத்திரி மற்றும் பல்வேறு போட்டிகள் போன்ற பிற விழாக்களைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி எந்த நிகழ்ச்சி, ஊர்வலம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தக்கூடாது.
காவல்துறை மற்றும் நிர்வாகப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களைத் தவிர, முன் அனுமதியின்றி அந்தப் பகுதியில் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தக்கூடாது.
பிரயாக்ராஜ் எல்லைக்குள் யாரும் கொடிய ஆயுதம் அல்லது துப்பாக்கியை எடுத்துச் செல்லக்கூடாது.
எந்தவொரு நபரும் எந்தவொரு தனியார் அல்லது அரசாங்க சொத்துக்களுக்கும் எந்தவிதமான சேதத்தையும் ஏற்படுத்தக்கூடாது.
எந்தவொரு நபரும் பொது இடத்தில் இடையூறுகளை ஏற்படுத்தவோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எல்லோர் முன்னிலையிலும் முள் படுக்கையில் படுத்திருந்தார்
- அவரது சட்டையைப் பிடித்து இழுத்து ஓங்கி அறைந்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா மகா கும்பமேளா.
45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறும்.
இதில் கலந்துகொள்ள முனிவர்கள், துறவிகள், பாபாக்கள், அகோரிகள் என பலவகைப்பட்ட ஆன்மீக குருக்கள் வருகை தந்துள்ளனர். அவர்களின் அசாதாரண செயல்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் அப்படியொரு செயலைப் பற்றி கேள்வி கேட்கப்போய் பத்திரிகையாளர் ஒருவர் வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முள் பாபா என்று அறியப்படும் காண்டே வாலே பாபா கும்பமேளாவில் எல்லோர் முன்னிலையிலும் முள் படுக்கையில் படுத்திருந்தார். மேலும் அவர் சுமார் 50 ஆண்டுகளாக முட்களில்தான் படுத்திருப்பதாக கூறிக்கொண்டார்.
முள் பாபாவை நெருங்கிய செய்தி நிருபர் ஒருவர், இந்த முட்கள் உண்மையானதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த முள் பாபா, அங்கிருந்து எழுந்து அந்த நிருபரை நெருங்கி அவரது சட்டையைப் பிடித்து இழுத்து ஓங்கி அறைந்துள்ளார்.
"வா வந்து இதில் நீயே படுத்து, முட்கள் உண்மையா? இல்லையா? எனக் கண்டுபிடி" என்று அந்த நிருபரை ஒரு வழி செய்துள்ளார் முள் பாபா. ஆளை விட்டால் போதும் என அந்த நிருபர் அங்கிருந்து நழுவினார். இத்தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






