என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நகரசபை தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அந்த பதவியை விட்டு கொடுக்க விரும்பாத மமுன் ஷாகான் உடனடியாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.
    • அறிவிப்பு வெளியான 45 மணி நேரத்தில் மமுன் ஷாகான் மணப்பெண் அறிவிப்பு வெளியிட்டு ஒருவரை கண்டுபிடித்தார்.

    உத்தர பிரசேத மாநிலம் ராம்பூர் நகரசபை தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நகரசபை தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அங்கு வழக்கமாக தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் நிர்வாகி மமுன் ஷாகான் அதிர்ச்சி அடைந்தார்.

    இதற்கு காரணம் 45 வயதாகியும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இப்போது நகரசபை தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அந்த பதவியை விட்டு கொடுக்க விரும்பாத அவர் உடனடியாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக அறிவிப்பு வெளியான 45 மணி நேரத்தில் மமுன் ஷாகான் மணப்பெண் அறிவிப்பு வெளியிட்டு ஒருவரை கண்டுபிடித்தார். அந்த பெண்ணை உடனடியாக அவர் திருமணமும் செய்து கொண்டார். இது உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது.
    • குற்றவாளிகளிடம் இருந்து வெளிநாட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு டிஜிபி தெரிவித்தார்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் ரவுடியுமான அத்திக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியான வக்கீல் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அத்திக் அகமது மற்றும் அவரது மகன் ஆசாத், கூட்டாளி குலாம் ஆகியோர்  குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். ஆசாத், குலாம் ஆகியோர் குறித்து துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது.

    இந்நிலையில், அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவரது கூட்டாளி குலாம் ஆகியோர் இன்று போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜான்சியில் அவர்களை மாநில அதிரடிப்படை போலீசார் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். குற்றவாளிகளிடம் இருந்து வெளிநாட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு டிஜிபி தெரிவித்தார்.

    உமேஷ் பால் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் அத்திக் அகமது மற்றும் அவரது கூட்டாளிகள் கான் சவுலத், தினேஷ் பாசி ஆகியோருக்கு சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அயோத்தி ராமர் கோவிலுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
    • ஏக்நாத் ஷிண்டே அங்கு சரயு நதியில் பூஜை செய்தார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

    இதையடுத்து 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது கட்டுமான பணிகள் 2 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது.

    அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நிறைவடையும் என ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்.

    இதற்கிடையே, மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்த ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரியாக பதவியேற்றதும் விரைவில் அயோத்தி சென்று ராமரை வழிபடுவேன் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் கட்சியின் மூத்த எம்.பி,க்கள், எல்.எல்.ஏ.க்கள் அயோத்தி சென்றனர்.

    அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்குச் சென்று அவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது ஏக்நாத் ஷிண்டே, அங்கு சரயு நதியில் பூஜை செய்தார். பின்னர் அயோத்தியில ராமர் கோவில் கட்டும் பணி நடைபெறும் இடத்திற்குச் சென்று பார்வையிட்டார்

    • ராகுல் காந்தி சட்டத்தை பின்பற்றி மேல்கோர்ட்டை நாடி நிவாரணம் பெற வேண்டும்.
    • எதிர்க்கட்சிகளை இந்த நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    கவுஷாம்பி :

    லண்டன் நகரில் சமீபத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு ஆளும் பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் நேற்று பதிலடி கொடுத்துள்ளார். உத்தரபிரதேசத்தின் கவுஷாம்பி நகரில், கவுஷாம்பி மகோத்சவத்தை தொடங்கி வைத்து பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி இந்திய ஜனநாயகத்தில் 3 விதமான காயங்களை ஏற்படுத்தி இருந்தது. அதாவது சாதியவாதம், குடும்ப அரசியல் மற்றும் திருப்திபடுத்தும் அரசியல் ஆகியவை.

    ஆனால் பிரதமர் மோடி இந்த மூன்றையும் தோற்கடித்து விட்டார். அதனால் நீங்கள் அஞ்சுகிறீர்கள்.

    இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் சகோதரரே, ஜனநாயகம் ஆபத்தில் இல்லை, உங்கள் குடும்பம்தான் ஆபத்தில் இருக்கிறது. இந்தியாவின் கோட்பாடு ஆபத்தில் இல்லை, உங்கள் குடும்ப அரசியல்தான் ஆபத்தில் இருக்கிறது. உங்கள் குடும்பத்தின் எதேச்சாதிகாரம்தான் ஆபத்தில் இருக்கிறது.

    நாடாளுமன்றம் நேற்று (நேற்று முன்தினம்) ஒத்திவைக்கப்பட்டது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு அமர்வோ, விவாதமோ இன்றி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தது இல்லை. ஆனால் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் தொடர் முடக்கப்பட்டு இருக்கிறது.

    ராகுல் காந்தியுடன் 17 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இதுவரை தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ராகுல் காந்தி சட்டத்தை பின்பற்றி மேல்கோர்ட்டை நாடி நிவாரணம் பெற வேண்டும்.

    நண்பர்களே, ஒவ்வொரு குடிமகனின் 'தர்மமாக' இருக்கும் சட்டத்தை அவர் பின்பற்ற வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எம்.பி.யாக இருந்தீர்கள். தண்டனையை எதிர்த்து கோர்ட்டில் போராடியிருக்கலாம்.

    ஆனால் நாடாளுமன்ற நேரத்தை வீணடித்துள்ளீர்கள். இதற்காக எதிர்க்கட்சிகளை இந்த நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    ராமபிரான் பிறந்த இடமான அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என நாமெல்லாம் விரும்பினோம். ஆனால் காங்கிரஸ் கட்சி அதை கிடப்பில் போட்டது. சமாஜ்வாடி திசைதிருப்பியது. பகுஜன் சமாஜ் தவிர்த்தது.

    ஆனால் கோவிலுக்கான அடிக்கல்லை மோடிஜி நாட்டினார். விரைவில் ராமபிரான் தனது கோவிலில் அமர்ந்திருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.

    பிரதமர் மோடி, நாட்டை வளமாக்கி அதன் பெருமையை உயர்த்தியுள்ளார். 2024-ம் ஆண்டு தேர்தலிலும் அவரையே மீண்டும் பிரதமராக தேர்வு செய்ய மக்கள் முடிவு செய்து விட்டனர்.

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    • முதலில் ஆடிய ஐதராபாத் 121 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய லக்னோ அணி 127 ரன்கள் எடுத்து வென்றது.

    லக்னோ:

    16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    இன்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் தேற்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராகுல் திரிபாதி 35 ரன்னிலும், தொடக்க ஆட்டக்காரர் அன்மோல் பிரீத் சிங் 31 ரன்னிலும் அவுட்டாகினர்.

    கடைசி கட்டத்தில் அப்துல் சமத் 10 பந்தில் 2 சிக்சர் உள்பட 21 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 16 ரன்னில் அவுட்டானார்.

    லக்னோ அணி சார்பில் குருணால் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தினார். அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய், யாஷ் தாகுர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் 13 ரன்னிலும், தீபக் ஹூடா ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய குருணால் பாண்ட்யா 34 ரன்னில் அவுட்டானார்.

    கேப்டன் கே.எல்.ராகுல் 35 ரன்னுடன் வெளியேறினார்.

    இறுதியில், லக்னோ அணி 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

    • இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
    • முதலில் ஆடிய ஐதராபாத் 121 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    லக்னோ:

    16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அன்மோல் பிரீத் சிங் தாக்குப்பிடித்து 31 ரன்னில் அவுட்டானார்.

    மயங்க் அகர்வால் 8 ரன்னிலும், ஹாரி புரூக் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் மார்க்ரம் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ராகுல் திரிபாதி 35 ரன்னில் வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் 16 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாடுகிறது.

    கடைசி கட்டத்தில் அப்துல் சமத் 10 பந்தில் 2 சிக்சர் உள்பட 21 ரன்கள் எடுத்தார்.

    லக்னோ அணி சார்பில் குருணால் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தினார். அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய், யாஷ் தாகுர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • ஷரவன் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
    • யமுனா நதியில் இருந்து உஷாவின் உடலை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    நொய்டா:

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சட்டங்கா குர்த் கிராமத்தில் வசித்து வருபவர் ஷரவன். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உஷா.

    இந்த நிலையில் ஷரவன் தனது மனைவி உஷாவை காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அலிகாரில் வசித்து வந்த உஷாவின் பெற்றோரும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் உஷாவை ஷரவன் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறி உள்ளனர்.

    இதையடுத்து போலீசார் ஷரவனை காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தனது மனைவி உஷாவை கொலை செய்து சாக்கு மூட்டையில் உடலை போட்டு கல்லை கட்டி யமுனை ஆற்றில் போட்டு விட்டதாக தெரிவித்தார்.

    கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போது தனது மனைவிக்கும் கிராமத்தில் இருக்கும் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் அதனால் மனைவி உஷா தினமும் தன்னிடம் சண்டை போட்டதால் அவரை கொன்றேன் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஷரவன் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். யமுனா நதியில் இருந்து உஷாவின் உடலை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    • பால் கடத்தல் வழக்கில் பிரயாக் ராஜில் உள்ள சிறப்பு கோர்ட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.
    • போதிய ஆதாரம் இல்லாததால் அத்திக் அகமதுவின் தம்பி காலித் ஆசிம் உள்பட 7 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூபால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.

    இந்த வழக்கில் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் ரவுடியுமான அத்திக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கொலை வழக்கின் முக்கிய சாட்சியாக வக்கீல் உமேஷ்பால் இருந்தார். கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி அவர் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப் பட்டது.

    இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக அத்திக் அகமது உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே கடந்த பிப்ரவரி 24-ந் தேதி உமேஷ் பால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அத்திக் அகமது முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

    இந்நிலையில் உமேஷ் பால் கடத்தல் வழக்கில் பிரயாக் ராஜில் உள்ள சிறப்பு கோர்ட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அத்திக் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டார்.

    17 ஆண்டுகளாக நீடிந்த இந்த வழக்கில் அத்திக் அகமது மற்றும் அவரது கூட்டாளி கள் கான் சவுலத், தினேஷ் பாசி ஆகியோரும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. போதிய ஆதாரம் இல்லாததால் அத்திக் அகமதுவின் தம்பி காலித் ஆசிம் உள்பட 7 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

    5 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ள அத்திக் அகமது மீது 101 வழக்குகள் நிலுவையில் உள்ளன. முதல் முறையாக ஆள் கடத்தல் வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.

    உ.பி. போலீசார் தன்னை என்கவுண்டரில் கொல்ல திட்டமிட்டு இருப்பதாகவும், இதனால் சிறப்பு பாதுகாப்பு விதிக்க வேண்டும் என்றும் அத்திக் அமகது சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். ஐகோர்ட்டை அணுக அறிவுறுத்தி நீதிபதிகள் அவரது மனுவை தள்ளுபடி செய்தனர்.

    இந்நிலையில் வக்கீல் உமேஷ் பால் கொலை வழக்கில் அத்திக் அகமதுவின் மைத்துனர் அக்லாப் அகமது கைது செய்யப்பட்டுள்ளார்.

    உத்தரபிரதேச சிறப்பு படை போலீசாரும் பிரயாக்ராஜ் போலீசாரும் இணைந்து அவரை பிடித்தனர். வக்கீல் கொலை வழக்கில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். உமேஷ் பாலை துப்பாக்கியால் சுட்ட கொலையாளிக்கு இவர்தான் பணம் கொடுத்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 193 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய டெல்லி அணி 143 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது.

    லக்னோ:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் அதிரடியாக ஆடி 38 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 72 ரன்கள் விளாசினார். நிகோலஸ் பூரன் 36 ரன்கள் எடுத்தார்.

    டெல்லி அணி சார்பில் கலீல் அகமது, சேட்டன் சகாரியா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது. கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான டேவிட் வார்னர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். ரூசோவ் 30 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. கடைசி கட்டத்தில் அக்சர் படேல் 16 ரன்கள் எடுத்தார்.

    லக்னோ அணி சார்பில் மார்க் வுட் 5 விக்கெட்டும், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இறுதியில், டெல்லி அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதல் வெற்றியை ருசித்தது.

    • சம்பவம் பற்றி அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
    • 11 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் சந்த்தவுசி பகுதியில் உள்ள இந்திரா நகர் சாலையில் குளிர்பதன கிடங்கு ஒன்று உள்ளது.

    இதன் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் சிக்கி பலியானார்கள். சம்பவம் பற்றி அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 11 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி குளிர்பதன கிடங்கு உரிமையாளர்கள் அங்கூர் அகர்வால், ரோகித் அகர்வால் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • கொலை, கடத்தல் உள்ளிட்ட சுமார் 100 குற்றவழக்குகளில் தொடர்புடையவர் அதிக் அகமது
    • அதிக் அகமதுவின் சகோதரர் காலித் அசீம் என்ற அஷ்ரப் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.

    பிரயாக்ராஜ்:

    உத்தர பிரதேச மாநிலத்தில் 2006ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஆட்கடத்தல் வழக்கில் பிரபல தாதா அதிக் அகமது மற்றும் இரண்டு நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிக் அகமதுவின் சகோதரர் காலித் அசீம் என்ற அஷ்ரப் உள்ளிட்ட 7 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

    உமேஷ் பால் என்பவரை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜூ பால் கொலை வழக்கில் உமேஷ் பால் முக்கிய சாட்சி ஆவார். கடந்த பிப்ரவரி மாதம் இவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கொலை கடத்தல் உள்ளிட்ட சுமார் 100 குற்றவழக்குகளில் தொடர்புடைய அதிக் அகமது, அரசியலுக்கு வந்து எம்.பி. மற்றும் எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார். குற்ற வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற இவர் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடத்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதால் குஜராத் சிறையில் இருந்து அதிக் அகமதுவை பிரயாக்ராஜ் நீதிமன்றத்திற்கு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

    • அனூப் தனது உறவினரான சிந்தாராம் உதவியுடன் சிறுவனை கடத்தி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
    • அனூப், அவரது உறவினர் சிந்தாராம் மற்றும் மந்திரவாதி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் உள்ள பர்சா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண வர்மா. இவரது மகன் விவேக் (வயது 10).

    விவேக் கடந்த 23-ந்தேதி இரவு திடீரென காணாமல் போனான். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் விவேக் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் சிறுவன் விவேக் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு வயலில் பிணமாக கிடந்தான். தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் நரபலிக்காக விவேக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட விவேக்கின் உறவினரான அனூப் என்பவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவரது 2½ வயது மகன் மனநலம் குன்றியவர் என்றும், அந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குழந்தையின் உடல்நிலை தேறவில்லை.

    இதனால் அனூப் அந்த கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு மந்திரவாதியை அணுகி உள்ளார். அவர் சிறுவனை நரபலி கொடுத்தால் உனது குழந்தையின் உடல்நலம் தேறும் என தூண்டி உள்ளார்.

    இதை நம்பிய அனூப் தனது உறவினரான சிந்தாராம் உதவியுடன் சிறுவன் விவேக்கை கடத்தி மண்வெட்டியால் தாக்கி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அனூப், அவரது உறவினர் சிந்தாராம் மற்றும் மந்திரவாதி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 3 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசாந்த் வர்மா கூறினார்.

    ×