என் மலர்
உத்தரப் பிரதேசம்
- விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்.
- மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நேற்று பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த சுமார் 12 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து, லக்னோ-கோரக்பூர் நெடுஞ்சாலையில் நான்காம் எண் சாவடிக்கு அருகில் விபத்து ஏற்பட்டது. தனியார் பேருந்து லக்னோவில் இருந்து அம்பேத்கர் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. விபத்தில் மோதிய வேகத்தில் பேருந்து லாரிக்கு அடியில் புதைந்தது.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளதாக, அவரது அலுவலகம் டுவீட் செய்துள்ளது. காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
- உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
- அறக்கட்டளை உறுப்பினர் தீர்த்த பிரசன்யாச்சாரியா, ராமர் சிலை பற்றிய தகவல்களை வெளியிட்டார்.
அயோத்தி:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கருவறையில் அடுத்த ஆண்டு மகர சங்கராந்தியின்போது புதிய ராமர் சிலை நிறுவப்பட உள்ளது. அந்த சிலை, வில் ஏந்திய தோற்றத்தில் இருக்கும் என ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை உறுப்பினரான சுவாமி தீர்த்த பிரசன்யாச்சாரியா தெரிவித்தார்.
நேற்று முன்தினம் முடிவடைந்த அறக்கட்டளையின் 2 நாள் கூட்டத்தில், கோவில் கருவறையில் நிறுவப்படும் ராமர் சிலை குறித்த விவரங்கள் முடிவு செய்யப்பட்டன. அதையடுத்து அறக்கட்டளை உறுப்பினர் தீர்த்த பிரசன்யாச்சாரியா, ராமர் சிலை பற்றிய தகவல்களை நேற்று வெளியிட்டார்.
'புதிய ராமர் சிலை, 5 அடி உயரத்தில் நிற்கும் நிலையில், வில்-அம்பு தாங்கிய தோற்றத்தில் இருக்கும். கர்நாடகத்தில் இருந்து தருவிக்கப்படும் 'கிருஷ்ண சிலா' எனப்படும் அபூர்வ வகை கருங்கல்லில், மைசூருவைச் சேர்ந்த பிரபல சிற்பி அருண் யோகிராஜ் ராமர் சிலையை வடிப்பார்' என்று அவர் கூறினார்.
- 2012 முதல் 2017 வரை மாநிலத்தில் 700க்கும் மேற்பட்ட கலவரங்கள் நிகழ்ந்ததாக முதல்வர் தகவல்
- உத்தரபிரதேச அரசு சிறப்பான சட்டம் மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகளுக்கு உத்தரவாதம் அளிப்பதாக பேச்சு
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த என்கவுண்டர் மற்றும் ரவுடி அத்திக் அகமது, அவரது சகோதரர் படுகொலை போன்ற சம்பவங்கள் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
இந்நிலையில், லக்னோ மற்றும் ஹர்டோய் மாவட்டங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசும்போது, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். அவர் பேசியதாவது:-
இனி உத்தரபிரதேசத்தில் மாபியாக்களும், குற்றவாளிகளும் தொழிலதிபர்களை அச்சுறுத்த முடியாது. ஒரு காலத்தில் உத்தரப் பிரதேசம் கலவரங்களுக்கு பெயர் பெற்ற மாநிலமாக இருந்தது. பல மாவட்டங்களின் பெயர்களை கேட்டாலே மக்கள் அச்சமடைவார்கள். இப்போது பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
2012 முதல் 2017 வரை மாநிலத்தில் 700க்கும் மேற்பட்ட கலவரங்கள் நிகழ்ந்தன. ஆனால், 2017-2023 காலகட்டத்தில் ஒரு கலவரம்கூட வெடிக்கவில்லை. ஊரடங்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. அந்த நிலை ஏற்படவில்லை. உத்தரபிரதேச அரசு சிறப்பான சட்டம் மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.
- மாணவியை சுட்டுக் கொன்றவர்களில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
- யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த என்கவுண்டர் மற்றும் கொலை சம்பவங்கள் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவுடியும் முன்னாள் எம்பியுமான அத்திக் அகமதுவை செய்தியாளர்கள் கண் எதிரிலேயே 3 பேர் சுட்டுக்கொன்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று கல்லூரி மாணவி பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஜலான் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ரோஷினி அஹிர்வர் (வயது 21) என்ற அந்த மாணவி, தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பியபோது பைக்கில் வந்த 2 நபர்கள் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடினர். அவர்களில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். மற்றொருவனை போலீசார் தேடி வருகின்றனர்.
மாணவி ரத்தவெள்ளத்தில் தரையில் கிடக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவண்ணம் உள்ளனர். யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம், 'அரசு சார்பு ஊடகத்தினரும், பாஜகவும் இந்த மரணத்தை கொண்டாடுவார்களா?' என கேள்வி எழுப்பி உள்ளது.
- 3 பேரும் பல நாட்கள் திட்டமிட்டு ஆதிக் அகமதுவையும், அஸ்ரப்பையும் சுட்டுக்கொன்றது தெரியவந்தது.
- 3 பேரும் கொலைக்கான வியூகம் வகுத்தது எப்படி? திட்டத்தை அரங்கேற்றியது குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல தாதாவாக திகழ்ந்தவர் ஆதிக் அகமது.
ஆதிக் அகமதுவின் சகோதரர் அஸ்ரப். இவரும் நிழலுலக தாதாவாக வலம் வந்தார். இருவரும் சேர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த பல்வேறு கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற குற்றங்களை செய்து வந்தனர். இதன் காரணமாக இருவர் மீதும் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 160 கிரிமினல் வழக்குகள் உள்ளன.
இந்த வழக்குகளில் கடந்த 2005-ம் ஆண்டு அலகாபாத்தில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ. ராஜூ பால் வழக்கு மிகவும் முக்கியமானது.
இந்த வழக்கு தொடர்பாக ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரையும் சமீபத்தில் போலீசார் கைது செய்தனர். இருவரையும் விசாரணைக்கு பின்னர் ஜெயிலில் அடைத்தனர்.
ஜெயிலில் அடைக்கப்பட்ட ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரின் மற்ற வழக்குகள் தொடர்பாகவும் போலீசார் விசாரணை தொடங்கினர். இதற்காக அவர்களை 5 நாள் காவலில் எடுத்த போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக பிரயாக் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்றனர்.
கையில் விலங்குடன் அழைத்து செல்லப்பட்ட அவர்களை மருத்துவமனையின் முன்புறம் காத்திருந்த பத்திரிகையாளர்கள் கைது நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது பத்திரிகையாளர் கும்பலில் இருந்த 3 பேர் திடீரென ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரையும் நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ஒருவன் ஆதிக் அகமதுவின் பின் தலையில் சுட, மற்ற இருவரும் முன்புறமாக நின்று சரமாரியாக சுட்டனர். சுமார் 24 ரவுண்டுகள் நடந்த துப்பாக்கி சூட்டில் ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரும் குண்டுகள் துளைக்கப்பட்டு அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர்.
ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரும் சுட்டு கொல்லப்பட்டதும், அவர்களை சுட்ட நபர்கள் யாரும் அங்கிருந்து தப்பி செல்லவில்லை. மாறாக துப்பாக்கிகளை கீழே வீசிவிட்டு ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டபடி போலீசாரிடம் சரண் அடைந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில் 3 பேரும் பல நாட்கள் திட்டமிட்டு ஆதிக் அகமதுவையும், அஸ்ரப்பையும் சுட்டுக்கொன்றது தெரியவந்தது. மேலும் அவர்கள் கொலைக்கான வியூகம் வகுத்தது எப்படி? திட்டத்தை அரங்கேற்றியது குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டனர். அதன்விபரம் வருமாறு:-
ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரையும் சுட்டு கொன்றவர்கள் அருண் மவுரியா, சன்னிசிங், லவ்லின் திவாரி என தெரியவந்தது. 3 பேருமே சிறு, சிறு திருட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள். இவர்கள் மீது வேறு பெரிய குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. 3 பேரும் சிறையில் இருந்த போது சந்தித்து நண்பர்களாகி உள்ளனர். அப்போது 3 பேரும் உத்தரபிரதேசத்தில் ஆதிக் அகமது, அஸ்ரப் சகோதரர்கள் போல் நாமும் மிகப்பெரும் தாதாவாக ஆக வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
இதற்கு அவரை போல மிகப்பெரிய சம்பவங்களை நடத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். அப்போதுதான் ஆதிக் அகமதுவும், அஸ்ரப்பும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருப்பதை தெரிந்து கொண்டனர். அவர்களை கொன்று விட்டால் ஒரே நாளில் உத்தரபிரதேசம் முழுவதும் பிரபலமாகி விடலாம் என எண்ணினர். இதற்கான திட்டங்களை வகுக்க தொடங்கிய 3 பேரும் ஜெயிலில் இருந்து வெளியே வந்தனர்.
பின்னர் பிரயாக்ராஜில் உள்ள ஒரு லாட்ஜில் 3 பேரும் அறை எடுத்து தங்கினர். அங்கு இருந்தபடி ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரையும் போலீசார் எப்போது கோர்ட்டுக்கு அழைத்து செல்வார்கள், மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்கு அழைத்து வரும் நேரம் போன்றவற்றை விசாரித்து தெரிந்து கொண்டனர்.
இதில் நேற்று முன்தினம் ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரையும் போலீசார் பிரயாக்ராஜ் மருத்துவமனைக்கு அழைத்து வருவதை அறிந்தனர். அங்கு வைத்து அவர்களை போட்டு தள்ள முடிவு செய்த 3 பேரும் அதற்கான திட்டங்களை வகுத்தனர்.
ஆதிக் அகமது, அஸ்ரப் இருவருமே பிரபலமான தாதாக்கள் என்பதால் இருவருக்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு இருக்கும் என்பதை தெரிந்து கொண்ட கொலையாளிகள் 3 பேரும், ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரின் அருகில் செல்ல பத்திரிகையாளர் வேஷத்தை கையில் எடுத்தனர். இதற்காக போலி அடையாள அட்டை, மைக் மற்றும் சில தஸ்தாவேஜூகளை தயார்படுத்தி கொண்டு ஆஸ்பத்திரி வாயிலுக்கு சென்றனர். அங்கு மற்ற பத்திரிகையாளர்களுடன் இவர்களும் நிருபர்கள் போல் நின்றனர்.
ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரையும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்ததும் அங்கு பத்திரிகையாளர்கள் இருவரிடமும் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். அவர்களுக்கு ஆதிக் அகமது பதில் அளித்து கொண்டிருந்த போது அவரின் பின்னால் நின்ற அருண் மவுரியா முதலாவதாக ஆதிக் அகமதுவின் பின் தலையில் சுட்டான். வெகு அருகில் நின்று சுட்டதால் தோட்டா, ஆதிக் அகமதுவின் பின் தலையை துளைத்து சென்றது. அடுத்த வினாடி ஆதிக் அகமதுவின் முன்புறம் நின்ற சன்னிசிங், லவ்லின் திவாரி இருவரும் முன்புறமாக ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரையும் நோக்கி சரமாரியாக சுட்டனர்.
ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரையும் நோக்கி 24 ரவுண்டு சுட்டதில் தோட்டாக்கள் அவர்களின் உடல்களில் புகுந்து சல்லடையாக்கியது. வினாடி நேரத்தில் இருவரும் அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர். இவை அனைத்தும் சுமார் 22 வினாடிகளில் நடந்து முடிந்து விட்டது.
இந்த சம்பவத்தில் கூட்டத்தில் இருந்த ஒரு பத்திரிகையாளர், ஒரு போலீஸ்காரர் என 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் துப்பாக்கி சூடு நடக்கும் போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சம்பவத்தை வேடிக்கை பார்த்தார்கள் என்றும், அதனை தடுக்க முயலவில்லை எனவும் புகார் எழுந்தது. இதையடுத்து 17 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். அதோடு ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரையும் சுட்டுக்கொல்ல கொலையாளிகள் கூறிய காரணம் உண்மைதானா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட ஆதிக் அகமது உத்திரபிரதேச மாநிலத்தில் மேற்கு அலகபாத் தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். புல்பூர் பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இவருக்கு 5 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் உமர், 2-வது மகன் அலி ஆகியோர் ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி ஜெயிலில் உள்ளனர்.
3-வது மகன் ஆசாத் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். மற்ற 2 மகன்களும் மைனர்கள். எனவே அவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ளனர். ஆதிக் அகமதுவின் மனைவி ஷாயிஸ்தா பர்வீன். இவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் அவர் தலைமறைவாக உள்ளார், தற்போது ஆதிக் அகமது சுட்டுக்கொல்லப்பட்டதால் அவரது மனைவி ஷாயிஸ்தா பர்வீன் போலீசாரிடம் சரண் அடைவார் என தெரிகிறது.
உத்தரபிரதேசத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு கிரிமினல் சம்பவங்களில் ஈடுபட்டு பொது மக்களையும், அரசையும் கதிகலங்க வைத்த ஆதிக் அகமது, அஸ்ரப் இருவரும் கொல்லப்பட்டது மாநில மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மகன் ஆசாத்தின் உடலை நேற்று முன்தினம் அங்குதான் அடக்கம் செய்தனர்.
- அடக்கம் செய்வதகாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நேற்று முன்தினம் இரவு சுட்டுக்கொல்லப்பட்ட ஆதிக் அகமது, அவருடைய சகோதரர் அஷ்ரப் ஆகியோரின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், உடல்கள் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு, பிரயாக்ராஜ் அருகே உள்ள கசாரி மசாரி சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன.
ஆம்புலன்சில் வயதான குடும்ப உறுப்பினர் ஒருவர் உடன் சென்றார். அந்த சுடுகாடு, ஆதிக் அகமதுவின் மூதாதையர் கிராமத்தில் உள்ளது. அவரது பெற்றோரை அங்குதான் அடக்கம் செய்துள்ளனர். போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மகன் ஆசாத்தின் உடலை நேற்று முன்தினம் அங்குதான் அடக்கம் செய்தனர்.
அதே சுடுகாட்டில், ஆதிக் அகமது, அஷ்ரப் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தூரத்து உறவினர்கள் சிலரும், உள்ளூர் மக்களும் மட்டும் மயானத்துக்குள் காணப்பட்டனர்.
- மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு உயர்மட்டக் கூட்டத்தில் போலீசாருக்கு உ.பி. முதல்வர் அறிவுறுத்தல்.
- உ.பியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.
முன்னாள் எம்.பியும் பிரபல ரவுடியுமான ஆதிக் அகமதுவும் அவரது சகோதரரும் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சில மணிநேரங்கள் முன்பு ஆதிக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் மருத்துவ சிகிச்சைக்காக பிரயாக்ராஜ் அழைத்துச் செல்லப்பட்டபோது மர்ம நபர்களால் கொல்லப்பட்டனர். செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டு செல்லும்போதே யாரோ ஒரு கும்பல் இருவரையும் சுடும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் ஆதிக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன் எதிரொலியால், உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆதிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு விசாரணைக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக இந்த சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதியநாத், டிஜிபி ஆர்.கே.விஸ்வகர்மா மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு டி.ஜி., பிரசாந்த் குமார் ஆகியோருடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு உயர்மட்டக் கூட்டத்தில் போலீசாருக்கு உ.பி. முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.
- உத்தரப் பிரதேச போலீஸ் தரப்பில் இன்னும் அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.
- சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் ரவுடியுமான ஆதிக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியான வக்கீல் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆதிக் அகமது மற்றும் அவரது மகன் ஆசாத், கூட்டாளி குலாம் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். ஆசாத், குலாம் ஆகியோர் குறித்து துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது.
இந்த சூழலில் ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவரது கூட்டாளி குலாம் ஆகியோர் கடந்த 13ஆம் தேதி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜான்சியில் அவர்களை மாநில அதிரடிப்படை போலீசார் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏவும் பிரபல ரவுடியுமான ஆதிக் அகமதுவும் அவரது சகோதரரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சில மணிநேரங்கள் முன்பு ஆதிக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் மருத்துவ சிகிச்சைக்காக பிரயாக்ராஜ் அழைத்துச் செல்லப்பட்டபோது மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர். செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டு செல்லும்போதே யாரோ ஒரு கும்பல் இருவரையும் சுடும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.
இந்த என்கவுன்ட்டர் குறித்து உத்தரப் பிரதேச போலீஸ் தரப்பில் இன்னும் அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. எனினும் இந்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் ஆதிக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரயாக்ராஜில் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது கொல்லப்பட்டதை அடுத்து, உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உ.பி.யின் ஜான்சியில் நடந்த என்கவுன்டரில் ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத்தும் கொல்லப்பட்டார்.
- ஆதிக் அகமது மற்றும் அவரது சகோரர் அஷ்ரப் மீது குறைந்தது 100 கிரிமினல் வழக்குகள் உள்ளன.
சமாஜ்வாடி கட்சி எம்.பி.யாக இருந்தவர் ஆதிக் அகமது. கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற இவர், கடந்த 2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் கொலை மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரியில் கொலை செய்யப்பட்ட எம்எல்ஏவின் வழக்கறிஞர் உமேஷ் பால் கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளிகளில் ஒருவராக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச கேங்ஸ்டராக கருதப்படும் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோரர் அஷ்ரப் மீது குறைந்தது 100 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இருவரும் அகமதாபாத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த செவ்வாய் கிழமை அன்று மருத்துவ பரிசோதனைக்காக உத்தரப் பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், இன்று நிருபர்களுக்கு இருவரும் போலீசாரின் முன்னிலையில் பேட்டி அளித்துக் கொண்டிருந்த நிலையில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, தாங்கள் என்கவுன்டரில் கொல்லப்பட வாய்ப்புள்ளதாக குற்றம்சாட்டிய ஆதிக் தனது குடும்பத்தை காப்பாற்றுமாறும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உ.பி.யின் ஜான்சியில் நடந்த என்கவுன்டரில் ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத்தும் கொல்லப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட கும்பலின் வழக்கறிஞர் விஜய் மிஸ்ராகூறுகையில், "மக்கள் கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் மீது மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டனர்" என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை சேர்த்தது.
- அதிகபட்சமாக சிகந்தர் ராசா அரை சதம் எடுத்து 57 ரன்களில் வெளியேறினார்.
16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லக்னோவில் இன்று நடைபெற்ற 2வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் இறங்கினர். இருவரும் இணைந்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
கைல் மேயர்ஸ் 29 ரன்னில் அவுட்டானார். தீபக் ஹூடா 2 ரன்னில் வெளியேறினார். குருணால் பாண்ட்யா 18 ரன்னில் ஆட்டமிழந்தார். நிகோலஸ் பூரன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
ஸ்டாய்னிஸ் 15 ரன்னில் அவுட்டானார். கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 74 ரன்னில் அவுட்டானார்.
பஞ்சாப் அணி சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இறுதியில், லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, 160 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
இதில் அதிகபட்சமாக சிகந்தர் ராசா அரை சதம் எடுத்து 57 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து, மேத்யூ ஷார்ட் 34 ரன்களும், ஹர்பீத் சிங் பாட்டியா 22 ரன்களும், சாம் குர்ரன் மற்றும் பஹர்பீத் பிரார் தலா6 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 4 ரன்களும் எடுத்தனர். ஷாருக்கான் 13 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் விளையாடினார். இறுதியாக களமிறங்கிய ரப்பாடா ரன்கள் எதுவும் எடுக்கவில்லை.
இறுதியில் 19.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
- இரண்டாவது போட்டியில் பஞ்சாப், லக்னோ அணிகள் மோதுகின்றன.
- டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது.
லக்னோ:
16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லக்னோவில் இன்று நடைபெறும் 2வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, லக்னோ அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் இறங்கினர். இருவரும் இணைந்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
கைல் மேயர்ஸ் 29 ரன்னில் அவுட்டானார். தீபக் ஹூடா 2 ரன்னில் வெளியேறினார். குருணால் பாண்ட்யா 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.
நிகோலஸ் பூரன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஸ்டாய்னிஸ் 15 ரன்னில் அவுட்டானார். கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 74 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, 160 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.
பஞ்சாப் அணி சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- உத்தர பிரதேசத்தில் பலரை ஏற்றிச்சென்ற டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது.
- இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் பீர்சிங்பூர் கிராமம் அருகே தில்ஹார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பின்பக்க டிராலியில் அதிக அளவில் மக்கள் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், டிராக்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. அதன்பின் தடுப்பு சுவரில் மோதிய டிராக்டர் கர்ரா ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவலறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாக விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்ததுடன், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.






