என் மலர்
இந்தியா

உத்தர பிரதேசத்தில் சோகம் - டிராக்டர் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலி
- உத்தர பிரதேசத்தில் பலரை ஏற்றிச்சென்ற டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது.
- இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் பீர்சிங்பூர் கிராமம் அருகே தில்ஹார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பின்பக்க டிராலியில் அதிக அளவில் மக்கள் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், டிராக்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. அதன்பின் தடுப்பு சுவரில் மோதிய டிராக்டர் கர்ரா ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவலறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாக விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்ததுடன், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Next Story






