என் மலர்
தெலுங்கானா
- ஒருபுறம் மழை பெய்து கொண்டு இருந்தாலும் தீ பற்றி எரிந்தது. தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் 5-வது தளத்தில் புகை மூட்டம் சூழ்ந்தது.
- தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ஆர்பி சாலையில் 8 அடுக்கு மாடிக் கொண்ட வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
5-வது தளத்தில் கால் சென்டர் இயங்கி வருகிறது.நேற்று இரவு 8-வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென 7,6,5-வது தளங்களுக்கும் வேகமாக பரவியது. தீ விபத்தை கண்ட வணிக வளாகத்தில் இருந்தவர்கள அலறி அடித்துக் கொண்டு கீழேஇறங்கினர். சிலர் ஜன்னல் வழியாக குதித்தும் உயிர் தப்பி ஓடினர்.
ஒருபுறம் மழை பெய்து கொண்டு இருந்தாலும் தீ பற்றி எரிந்தது. தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் 5-வது தளத்தில் புகை மூட்டம் சூழ்ந்தது.
இதனால் கால் சென்டரில் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அலுவலகத்தில் இருந்து வெளியே வர முடியாமல் மயங்கி விழுந்தனர். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டிடங்களில் இருந்த கண்ணாடிகள் தீயில் வெடித்து சிதறியது.
இதையடுத்து ராட்சத கிரேன் மூலம் கால் சென்டரில் சிக்கி இருந்த 18 பேரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.
12 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் 20 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் என கூறப்படுகிறது.
அவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் பெயர், விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கால் சென்டர் ஊழியர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஏர்பட்ஸ்களை தயாரிக்க ரூ.230 கோடியில் ஹேர்படம் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
- தனியார் தொழிற்சாலை அமைவதன் மூலம் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ரூ.1800 கோடியில் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. ஐபோன் உதிரி பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்த தெலுங்கானா மாநில அரசு பர்சனான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.
மேலும் ஏர்பட்ஸ்களை தயாரிக்க ரூ.230 கோடியில் ஹேர்படம் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக ஏர்பட்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. தனியார் தொழிற்சாலை அமைவதன் மூலம் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட உள்ளதால் ஐபோன்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
- எடியூரப்பா வீட்டு சமையலறையில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்க முடியாது என தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.
பெங்களூர்:
கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஜனதாதளம் (எஸ்) கட்சி ஏற்கனவே 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. மூன்று கட்சிகளும் பல்வேறு பெயர்களில் யாத்திரைகள் மூலம் பொதுக்கூட்டங்களை நடத்தி பலத்தை காட்டி வருகின்றன.
கா்நாடக தேர்தல் களத்தில் வழக்கமாக பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தான் போட்டியில் இருக்கும். இந்த முறை புதிய வரவாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் களத்தில் குதிக்கின்றன. 224 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. இந்த முறை பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆளும் பா.ஜனதாவுக்கு எதிரான தனது அரசியலை மிக தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
தேர்தலை சந்திக்கும் விதமாக பா.ஜனதா சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை நடைபெற்று வருகிறது.
இதனிடையே பா.ஜ.க.வில் உள்கட்சி மோதல் வலுத்து வருகிறது. கர்நாடகாவில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, தன் மகனை தனது பாரம்பரிய சிக்காரிபுரா தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்தார். ஆனால் கட்சி தலைமை ஒப்புதல் வழங்காத நிலையில் எடியூரப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எடியூரப்பா வீட்டு சமையலறையில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்க முடியாது என தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார். இதனால் இரு தரப்பினரிடையே உரசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிக்கமகளூரு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக எடியூரப்பா சென்றார்.
விஜய் சங்கல்ப யாத்திரைக்கு தலைமை தாங்க சென்ற அவரது காரை சி.டி.ரவியின் ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டு முற்றுகையிட்டனர். இதனால் எடியூரப்பா தனது பிரசார பயணத்தை ரத்து செய்து, திரும்பிச் சென்றார். இதன்மூலம் பா.ஜ.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. அதில், விஜய் சங்கல்ப் யாத்திரையில் கலந்து கொள்ளாமல் எடியூரப்பா அந்த இடத்தை விட்டு வெளியேறியதையும், அந்த இடத்தில் இருந்த சி.டி.ரவி தனது ஆதரவாளர்களுடன் வேறு திசையில் நடந்து செல்வதையும் காண முடிகிறது.
எடியூரப்பாவுக்கு எதிராக கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி நேரடியாக போர்க்கொடி தூக்கியிருப்பது, பா.ஜ.க.வில் இருக்கும் உட்கட்சி பூசலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பா.ஜனதாவில் எடியூரப்பாவுக்கும், வீட்டு வசதி மந்திரி சோமண்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
யாரும் யாரையும் புறக்கணிக்க முடியாது. எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எனது மகன் விஜயேந்திரா கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது தான் எங்களின் ஒரே நோக்கம். மற்ற விஷயங்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். தேர்தல் நேரத்தில் அதிருப்தியை வெளிப்படுத்துவதால் கட்சிக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். அதிருப்தியை சரிசெய்யும் பணியை கட்சி மேலிட தலைவர்கள் செய்கிறார்கள்.
அனைத்து சமூகங்களையும் சமமாக பார்க்க வேண்டும். லிங்காயத்து சமுதாய ஓட்டு தேவை இல்லை என்று சி.டி.ரவி கருத்து கூறி இருந்தால் அது தவறு. இதுபற்றி அவருடன் பேசுகிறேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
இந்த சூழலில் விஜய சங்கல்ப யாத்திரையில் பங்கேற்பதற்காக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 3 மணிக்கு கர்நாடகம் வருகிறார். தனி விமானம் மூலம் சித்ரதுர்கா மாவட்டம் தோரனகல்லில் உள்ள விமான நிலையத்திற்கு வருகிறார். அவர் அங்கிருந்து கார் மூலம் செல்லகெரேவுக்கு வந்து பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
- தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- சந்திரசேகர் ராவுக்கு அல்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவுக்கு திடீரென வயிற்று உபாதை ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சந்திரசேகர் ராவுக்கு இன்று காலையில் திடீரென வயிற்று உபாதை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக சந்திரசேகர் ராவுக்கு மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்தனர். அப்போது, வயிற்றில் சிறிய புண் (அல்சர்) இருப்பது கண்டறியப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சந்திரசேகர் ராவுக்கு அல்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
- பலர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடைந்துள்ளனர்.
ஐதராபாத்:
மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 54-வது எழுச்சி நாள் ஐதராபாத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அவர் அணி வகுப்பு மரியாதையை பார்வையிட்டு பெற்றுக் கொண்டார்.
விழாவில் அமித்ஷா பேசியதாவது:
நாட்டின் எந்த பகுதியிலும் பிரிவினைவாதம், பயங்கரவாதம் மற்றும் தேசிய விரோத நடவடிக்கைகள் ஆகியவை உறுதியாக கையாளப்படும். கடந்த 9 ஆண்டுகளில் உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை பா.ஜனதா அரசு வெற்றி கரமாக சமாளித்துள்ளது. காஷ்மீரில் வன்முறைகள் கணிசமாக குறைந்து வருகிறது. அதேபோல் வடகிழக்கு மற்றும் இடது சாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதி களிலும் கிளர்ச்சி குறைந்து மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பலர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடைந்துள்ளனர். பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ளாத பிரதமர் மோடி அரசின் கொள்கை வரும் காலங்களிலும் தொடரும்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
- தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தென்காசி மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இருந்தது.
- பெங்களூரில் தங்கியிருக்கும் அவருக்கு லேசான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தென்காசி மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் திடீரென்று அந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இதுபற்றி விசாரித்த போது அவர் திடீரென்று பெங்களூர் சென்றது தெரியவந்தது. பெங்களூரில் தங்கியிருக்கும் அவருக்கு லேசான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு அங்கேயே ஓய்வெடுத்து வருகிறார். இடைவிடாத சுற்றுப்பயணம் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டு நாள் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறியதாகவும் தெரிவித்தனர்.
கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடி சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. நாளை அல்லது நாளை மறுநாள் சென்னை திரும்புவார் என்றும் அதைத் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.
- ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.சர்மிளா ஆவார்.
- இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.
ஐதராபாத் :
ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.சர்மிளா ஆவார். இவர் தெலுங்கானா மாநிலத்தில், ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.
இவர் பெண்கள் தினத்தையொட்டி, மாநிலத்தில் பெண்கள் மீது நடந்து வருகிற தாக்குதல்களைக் கண்டித்து ஐதராபாத் நகரில் டேங்க் பண்ட் பகுதியில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார்.
அவர் அதன்படி, ராணி ருத்ரமா தேவி மற்றும் சக்காளி அய்லம்மா சிலைகளுக்கு மரியாதை செய்து விட்டு தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- நாளை 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட உள்ளது.
- தெலுங்கானா அரசின் இந்த அறிவிப்பால் பெண் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஐதராபாத்:
நாளை 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, பெண்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கானா மாநில தலைமை செயலாளர் சாந்திகுமாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் மார்ச் 8-ந் தேதிவிடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், அன்றைய தினம் ரூ.750 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் தன்னார்வ மகளிர் அமைப்பினருக்கு வட்டி இல்லா வங்கி கடனுதவிகளை நிதி அமைச்சர் ஹரீஷ் ராவ் வழங்க உள்ளார்.
தெலுங்கானா அரசின் இந்த அறிவிப்பையடுத்து பெண் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தனது மகனை ஆசிரியை அடித்ததால் தான் படுகாயம் அடைந்து இறந்து விட்டதாக போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.
- மாணவர் மேஜையில் இருந்து தவறி விழுந்ததை அடுத்து அவனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம். விகாராபாத் மாவட்டம், புதூர் மண்டலம் கேசவரெட்டிபள்ளியில் தனியார் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கார்த்திக் (வயது 8) என்ற மாணவர் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
கார்த்திக் வகுப்பு ஆசிரியை கொடுத்த வீட்டு பாடத்தை செய்யாமல் பள்ளிக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை மாணவனை பிரம்பால் அடித்துள்ளார்.
இதில் மாணவர் கார்த்திக்குக்கு ரத்தக்காயம் ஏற்பட்டு உடல் நலம் குன்றியது.
இதுகுறித்து மாணவனின் பெற்றோருக்கு போன் செய்த பள்ளி நிர்வாகம் கார்த்திக் வகுப்பறையில் தவறி விழுந்து காயம் அடைந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து கார்த்திகை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது மகனை ஆசிரியை அடித்ததால் தான் படுகாயம் அடைந்து இறந்து விட்டதாக போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.
மாணவர் மேஜையில் இருந்து தவறி விழுந்ததை அடுத்து அவனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்குதான் மாணவன் உயிரிழந்தான் என்று பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த தகவலை கேள்விப்பட்ட மாணவர் சங்கத்தினர் பள்ளியை முற்றுகையிட்டு மாணவன் சாவுக்கு ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகமே காரணம். அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
- ஐதராபாத்தில் தனது கடைசி போட்டியில் சானியா மிர்சா ஆடினார்.
- கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை இவர் தான்.
ஐதராபாத்:
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த மாதம் துபாய் ஓபன் போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார்.
36 வயதான சானியா மிர்சா 2005-ம் ஆண்டில் ஒற்றையர் பிரிவில் ஐதராபாத் ஓபனை வென்றார். அவர் கைப்பற்றிய ஒரே டபிள்யூ.டி.ஏ. பட்டம் இதுதான். அதே சமயம் கிராண்ட்ஸ்லாமில் 6 இரட்டையர் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார். கிராண்ட்ஸ்லாம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை இவர் தான்.
இந்நிலையில், சானியா மிர்சாவின் சொந்த ஊரான தெலுங்கானாவின் ஐதராபாத்தில் அவருக்கு பிரிவுபசாரம் அளிக்கும் வகையில் கண்காட்சி டென்னிஸ் போட்டிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க வந்த சானியாவுக்கு இளம் ரசிகைகள் இருபுறமும் பேட்டை உயர்த்தி நின்று கவுரவம் அளித்தனர்.
தனது கடைசி டென்னிஸ் போட்டியில் அடியெடுத்து வைத்த சானியாவுடன் சக நாட்டு வீரர் ரோகன் போபண்ணா, அமெரிக்காவின் பெதானி மாடக் சான்ட்ஸ், குரோஷியாவின் இவான் டோடிக் ஆகியோர் இணைந்து விளையாடினர். இரு கலப்பு காட்சி போட்டியிலும் சானியா மிர்சா வெற்றி பெற்றார். அப்போது சானியா மிர்சா உருக்கமுடன் பேசியதாவது:
2002-ம் ஆண்டு இங்கு தேசிய விளையாட்டில் பதக்கம் வென்றதில் இருந்து எனது டென்னிஸ் பயணம் தொடங்கியது. இந்தியாவுக்காக 20 ஆண்டு விளையாடியது சிறந்த கவுரவமாகும்.
இந்தியாவுக்காக சாதிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளின் கனவாக இருக்கும். அதை நான் நிறைவு செய்து விட்டேன். நினைத்ததை விட அதிகமாக சாதித்து இருக்கிறேன். எனது கடைசி போட்டியை உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடியது, பரவசமளிக்கிறது. அவர்களின் ஆதரவும், உற்சாகமும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரை வரவழைக்கிறது. இதை விட சிறந்த வழியனுப்பு விழாவை நான் எதிர்பார்க்க முடியாது. இனி களத்தில் உங்களை (ரசிகர்கள்) எல்லாம் தவற விடப்போகிறேன்.
தெலுங்கானா மாநில அரசுடனும், மாநில விளையாட்டு ஆணையத்துடனும் இணைந்து பணியாற்றி இன்னொரு சானியாவை நிச்சயம் உருவாக்குவேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன். நமக்கு இன்னும் நிறைய சானியாக்கள் தேவை. அதற்காக பணியாற்றுவேன் என குறிப்பிட்டார்.
- திருமணத்துக்கு சில தினங்களுக்கு முன்பாக மணப்பெண்ணான இளம்பெண் 'மேக்கப்' போட முடிவு செய்தார்.
- மேக்கப் போட்ட இளம்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியதால் திருமணமே நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், வாலிபர் ஒருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. கடந்த வாரம் அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அவர்களின் திருமணம் 2-ந்தேதி (நேற்று முன்தினம்) அரிசிகெரேயில் நடக்க இருந்தது. இந்த நிலையில், திருமணத்துக்கு சில தினங்களுக்கு முன்பாக மணப்பெண்ணான இளம்பெண் 'மேக்கப்' போட முடிவு செய்தார்.
அதன்படி அவர், அரிசிகெரேயில் உள்ள கங்கா என்பவருக்கு சொந்தமான அழகு நிலையத்துக்கு சென்றார். அங்கு மணப்பெண்ணுக்கு கங்கா 'மேக்கப்' போட்டு அழகுப்படுத்தினார். இந்த நிலையில் திருமணத்துக்கு சில நாட்கள் இருப்பதால், 'மேக்கப்' கலைந்து விட கூடாது என்பதற்காக, அவர் வெந்நீரில் ஆவி பிடித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் வெந்நீரில் ஆவி பிடித்ததால் இளம்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியது. மேலும், முகம் வெந்து கொப்புளங்கள் வந்தன. கண்கள் மற்றும் கன்னமும் வீங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர்.
இந்த நிலையில், மேக்கப் போட்ட மணப்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியதால் நேற்று முன்தினம் நடக்க இருந்த திருமணத்தை வாலிபர் நிறுத்தினார். இதனால் மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், மணமகளின் குடும்பத்தினர் அழகு நிலைய உரிமையாளர் கங்கா மீது அரிசிகெரே போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேக்கப் போட்ட இளம்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியதால் திருமணமே நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி மர்ம நபரால் ராகவேந்திரா கொலை செய்யப்பட்டார்.
- பந்தர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மங்களூரு:
நகைக்கடை ஊழியர் கொலை தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை அடுத்த பந்தர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட மல்மட்டா பகுதியில் தனியாருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் ராகவேந்திரா ஆச்சாரியா. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி மர்ம நபரால் ராகவேந்திரா கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பந்தர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொலையில் தொடர்புடைய மர்மநபர் குறித்து முதலில் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசார் நகைக்கடை மற்றும் அதை சுற்றியுள்ள ஓட்டல், வீடுகளில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி வந்ததாக தெரியவந்தது. இதையடுத்து அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரங்களை போலீசார் சேகரித்தனர். அதில் அந்த நபர் கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஷிபாஸ் (வயது33) என்று தெரியவந்தது.
இவர் மங்களூருவில் உள்ள கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு, துபாயிற்கு வேலைக்கு சென்றார். பின்னர் மீண்டும் மங்களூருவிற்கு திரும்பினார். அங்கு மனைவி, குழந்தையுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கடைக்கு சென்ற ஷிபாஸ், தங்க நகைகளை கொள்ளையடிப்பதற்காக ராகவேந்திரா ஆச்சாரியாவை கொலை செய்திருப்பதாக தெரியவந்தது. இது குறித்து பந்தர் போலீசார், ஷிபாசை கைது செய்ய தனிப்படை அமைத்தனர். அவர்கள் கேரளா மாநிலம் மற்றும் தட்சிண கன்னடாவில் தேடி வந்தனர். இந்நிலையில் ஒரு ஆண்டிற்கு பின்னர் அவர் கேரளா மாநிலம் காசர்கோட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் ஷிபாசை கைது செய்தனர். பின்னர் அவரை தட்சிண கன்னடா அழைத்து வந்த போலீசார் மங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.






