வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியை பிரம்பால் அடித்ததில் 3-ம் வகுப்பு மாணவன் மரணம்

தனது மகனை ஆசிரியை அடித்ததால் தான் படுகாயம் அடைந்து இறந்து விட்டதாக போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.மாணவர் மேஜையில் இருந்து தவறி விழுந்ததை அடுத்து அவனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியை பிரம்பால் அடித்ததில் 3-ம் வகுப்பு மாணவன் மரணம்
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம். விகாராபாத் மாவட்டம், புதூர் மண்டலம் கேசவரெட்டிபள்ளியில் தனியார் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கார்த்திக் (வயது 8) என்ற மாணவர் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

கார்த்திக் வகுப்பு ஆசிரியை கொடுத்த வீட்டு பாடத்தை செய்யாமல் பள்ளிக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை மாணவனை பிரம்பால் அடித்துள்ளார்.

இதில் மாணவர் கார்த்திக்குக்கு ரத்தக்காயம் ஏற்பட்டு உடல் நலம் குன்றியது.

இதுகுறித்து மாணவனின் பெற்றோருக்கு போன் செய்த பள்ளி நிர்வாகம் கார்த்திக் வகுப்பறையில் தவறி விழுந்து காயம் அடைந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து கார்த்திகை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது மகனை ஆசிரியை அடித்ததால் தான் படுகாயம் அடைந்து இறந்து விட்டதாக போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.

மாணவர் மேஜையில் இருந்து தவறி விழுந்ததை அடுத்து அவனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்குதான் மாணவன் உயிரிழந்தான் என்று பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த தகவலை கேள்விப்பட்ட மாணவர் சங்கத்தினர் பள்ளியை முற்றுகையிட்டு மாணவன் சாவுக்கு ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகமே காரணம். அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com