என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 100 நாள் வேலைத்திட்ட ஊழியர்களுக்கு ஊதிய அறிவிப்பு குறித்து பட்ஜெட்டில் இல்லை.
- பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதையும் தி.மு.க. அரசு அறிவிக்கவில்லை.
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 95 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் கூறுவது பொய்.
* 100 நாள் வேலைத்திட்ட ஊழியர்களுக்கு ஊதிய அறிவிப்பு குறித்து பட்ஜெட்டில் இல்லை.
* சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரூ.100 குறித்து அறிவிப்பு எங்கே?
* பெட்ரோல், டீசலுக்கான விலைக்குறைப்பு குறித்த வாக்குறுதி என்ன ஆனது?
* மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்ற வாக்குறுதி குறித்த அறிவிப்பு இல்லை.
* பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
* ரேசன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை என்ற அறிவிப்பு இல்லை.
* கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.3.5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ள தி.மு.க. அரசு.
* கடன் வாங்குவதில் சளைத்தவர்கள் அல்ல என தி.மு.க. அரசு நிரூபித்துள்ளது.
* பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதையும் தி.மு.க. அரசு அறிவிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மழை வெள்ள நீரை சேமிக்க சென்னையில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும்.
- கிண்டி, வண்ணாரப்பேட்டையில் தலா ரூ.50 கோடியில் பன்முக பேருந்து முனையம் அமைக்கப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று தாக்கலான பட்ஜெட்டில் வெளியான சில அறிவிப்புகள்:-
* திருவான்மியூர் - உத்தண்டி இடையே 14.2 கி.மீ. நீளத்திற்கு 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகளுக்கான ரூ.2,100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* சென்னை மெட்ரோ ரெயிலின் மூன்றாவது கட்ட திட்டத்தில், தாம்பரத்தில் இருந்து கிண்டி வரை வேளச்சேரி வழியே மற்றும் கலங்கரை விளக்கத்தில் இருந்து உயர்நீதிமன்றம் வரை புதிய வழித்தடம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
* மழை வெள்ள நீரை சேமிக்க சென்னையில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். கோவளம் அருகே உப வடி நிலத்தில் 3010 ஏக்கர் பரப்பில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேகரிக்கும் வகையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். சென்னையின் 6-வது நீர்த்தேக்கமாக இது அமையும்.
* கிண்டி, வண்ணாரப்பேட்டையில் தலா ரூ.50 கோடியில் பன்முக பேருந்து முனையம் அமைக்கப்படும்.
* நிலமற்ற ஏழை குடும்பங்களுக்கு விலையின்றி இதுவரை 10 லட்சத்திற்கும் மேலான பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஆண்டில் மேலும் 5 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.
* ஊட்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரூ70 கோடி மதிப்பில் எழில்மிகு சுற்றுலாப் பூங்கா அமைக்கப்படும். அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நீலமலையின் இயற்கைச் சூழலுக்கு இணங்க நறுமணப் பொருட்கள் தோட்டம், வனவியல் மற்றும் பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிப்பாதைகள் இடம்பெறும்.
- ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்க ரூ.225 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
- தமிழ்நாட்டில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.
சென்னை:
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. அவை கூடியதும் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். சுமார் 2.40 மணி நேரம் பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது. பட்ஜெட் உரையில் வெளியான அறிவிப்பில் சில:-
* அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறும் முறை மீண்டும் செயல்படுத்தப்படும். அதன்படி, அரசு ஊழியர்கள் 15 நாட்கள் விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறலாம். சரண்டர் விடுப்பு மீண்டும் வழங்குவதன் மூலம் 9 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவர்.
* மகளிர் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் பதிவு கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படும். ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகளின் பத்திப்பதிவுகளுக்கு இது பொருந்தும்.
* ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்க ரூ.225 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
* தமிழ்நாட்டில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். இதற்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 40,000 பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும்.
- சேலம், கடலூர், நெல்லையில் ‘கலைஞர் நூலகம்’ அமைக்கப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று தாக்கலான பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளில் சில:-
* தாயுமானவர் திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்து உறவினர்களின் பாதுகாப்பில் வளரும் 50,000 குழந்தைகள் 18 வயது வரையில் இடைநிற்றல் இன்றி பள்ளிப்படிப்பை தொடர மாதம் ரூ.2000 உதவித் தொகை வழங்கப்படும்.
* கடந்த 4 ஆண்டுகளில் 57,000 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
* பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 40,000 பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும்.
* சேலம், கடலூர், நெல்லையில் 'கலைஞர் நூலகம்' அமைக்கப்படும். போட்டித் தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் தலா 1 லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக்கூடம் வசதிகளடன கட்டப்பப்படும்.
* தமிழ்நாட்டில் மேலும் பல செஸ் சாம்பியன்களை உருவாக்கும் வகையில் பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டை சேர்த்திட, உடற்கல்விப் பாடத்திட்டத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.
- சென்னை, மதுரை, கோவையில் இந்த ஆண்டு முதல் மின் பேருந்து சேவை தொடங்கப்படும்.
- போக்குவரத்து துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் எரிசக்தி துறைக்கு ரூ.21,168 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மாற்ற ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* வரும் நிதியாண்டில் 3000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.1031 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* சென்னை, மதுரை, கோவையில் இந்த ஆண்டு முதல் மின் பேருந்து சேவை தொடங்கப்படும்.
* சென்னை 950, மதுரை 100, கோவை 75 மின் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்படும்.
* தமிழகம் முழுவதும் 1,125 மின் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்.
* 700 பழைய பேருந்துகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* 120 கோடியில் பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும்.
* போக்குவரத்து துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மின்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.27,168 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-
* விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மிக அதிவேக ரெயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். அதன்படி,
* சென்னை - திண்டிவனம் - விழுப்புரம், சென்னை - காஞ்சிபுரம் - வேலூர், கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம் ஆகிய வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொள்ளும்.
* சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
* விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9744 கோடியும், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- எவரும் அரசை எதிர்த்து வினா எழுப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பரபரப்பில் பழைய வரலாறுகளை தி.மு.க. மறந்து விடுகிறது.
- இது போன்ற நாடகங்களை நடத்துவதற்கு பதிலாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான முன்னோட்டத்தில் ரூபாய் என்பதன் அடையாளமான ₹ என்ற குறியீட்டை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக ரூ என்ற குறியீட்டை வைத்து, அதை ஏதோ புரட்சி போன்று தி.மு.க. அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. தி.மு.க. அரசின் செயலற்ற தன்மையால் ஏற்படும் வேதனைகளைத் தாங்க முடியாமல் மக்கள் குமுறிக் கொண்டிருக்கும் நிலையில் அதை திசை திருப்பும் நோக்குடன் இத்தகைய நாடகங்களை தி.மு.க. அரசு அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
எதையாவது செய்து மக்களை பதற்றத்திலேயே வைத்திருக்க வேண்டும்; எவரும் அரசை எதிர்த்து வினா எழுப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பரபரப்பில் பழைய வரலாறுகளை தி.மு.க. மறந்து விடுகிறது. ₹ அடையாளம் நேற்றோ, அதற்கு முன்நாளோ வெளியிடப்பட்டது அல்ல. 15 ஆண்டுகளுக்கு முன் 2010-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி தி.மு.க. அங்கம் வகித்த மன்மோகன்சிங் அவர்கள் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தான் வெளியிடப்பட்டது. அப்போது அதை தி.மு.க. ஆதரித்தது.
₹ அடையாளத்தை வடிவமைத்தவர் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார். அந்த அடையாளத்தை வடிவமைத்ததற்காக 2010ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி உதயகுமாரையும் அவரது குடும்பத்தினரையும் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு வரவழைத்துப் பாராட்டினார். அப்போதெல்லாம் பெருமைக்குரியதாக போற்றிய அடையாளத்தை தான் தி.மு.க. இப்போது நீக்கியிருக்கிறது.
அவ்வளவு ஏன்? கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி கலைஞரின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி ₹.100 நினைவு நாணயம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. மத்திய அரசால் மிகவும் எளிமையாக நடத்தப்படவிருந்த அந்த விழாவை தி.மு.க. அரசு மக்களின் வரிப்பணத்தில் மிகவும் பிரமாண்டமாக நடத்தியது. அப்போது வெளியிடப்பட்ட நாணயத்தில் ₹ அடையாளம் தான் இடம் பெற்றிருந்தது. அதற்கான அந்த நாணயத்தை தி.மு.க. வெறுக்கவில்லை. மாறாக, ரூ.4470 விலை கொண்ட நாணயத்தை தி.மு.க.வினரிடமே ரூ.10 ஆயிரத்துக்கு விற்று லாபம் பார்த்தது தி.மு.க..
தமிழக அரசின் ஆவணத்தில் இப்போது ₹ அடையாளத்தை நீக்கியிருக்கும் தி.மு.க., அதே அடையாளத்தைக் கொண்டிருக்கும் கலைஞர் நினைவு நாணயங்களையெல்லாம் வீசி எறிந்து விடுமா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும். இது போன்ற நாடகங்களை நடத்துவதற்கு பதிலாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரூ.50 கோடியில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும்.
- அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று தாக்கலான 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள்...
* சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும்.
* நீலகிரி குன்னூர், சென்னை ஆலந்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்.
* 1,308 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.150 கோடி மதிப்பில் 10 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
* சென்னையில் ரூ.100 கோடியில் அறிவியல் மையம் அமைக்கப்படும்.
* சென்னை, கோவையில் ரூ.100 கோடி செலவில் அடிப்படை அறிவியல் & கணித ஆராய்சிப் படிப்புகள் மையம் அமைக்கப்படும்.
* அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் துறைகளின் புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.
* ரூ.50 கோடியில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும்.
* அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.
- புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் சாதனங்கள் வாங்க ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு.
- டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு திட்டத்திற்கு ரூ.1092 கோடி ஒதுக்கீடு.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் சாதனங்கள் வாங்க ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு.
* நடமாடும் மருத்துவ குழுக்களுக்காக ரூ.40 கோடி ஒதுக்கீடு.
* காஞ்சிபுரம் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை தரம் உயர்த்த ரூ.120 கோடி ஒதுக்கீடு.
* டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு திட்டத்திற்கு ரூ.1092 கோடி ஒதுக்கீடு.
* தமிழக பட்ஜெட்டில் மருத்துவத் துறைக்கு ரூ.21,906 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும்.
- சென்னை மாநகராட்சியில் ரூ.486 கோடி மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் சில:-
* ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
* மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும்.
* திருச்சியில் பொறியியல் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
* ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும்.
* தமிழ்நாட்டில் செமி கண்டெக்டர் இயக்கம் செயல்படுத்தப்படும்.
* கோவை மற்றும் பல்லடத்தில் செமி கண்டக்டர் தொழிற் பூங்கா அமைக்கப்படும்.
* நகர்ப்புற சாலை பணிகளுக்கு ரூ.3,750கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* சென்னை மாநகராட்சியில் ரூ.486 கோடி மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தப்படும்.
* கோவை சாலைகள் ரூ.200 கோடியிலும், மதுரை சாலைகள் ரூ.130 கோடியிலும் மேம்படுத்தப்படும்.
* 10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்படும்.
* கலைஞர் கைவினை திட்டத்தில் 19,000 கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் 74 கோடி ரூபாய் மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
- திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும்.
சென்னை:
2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் சில:-
* சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
* அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
* திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும்.
* சென்னை மாநகரப்பகுதியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் ஒரு பகுதியில் உபரியாக உள்ள தண்ணீரை, மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும்.
* புதிதாக 7 மழைநீர் உறிஞ்சு பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும்.
* நாட்டிலேயே அதிக நகரமயமாக்கல் சவாலை தமிழ்நாடு சந்தித்துவருகிறது
* இதற்கேற்ற குடிநீர், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்கின்றன. எனினும் புதிய நகரங்கள் அமைக்கும் தேவை உள்ளது.
* சென்னைக்கு அருகே 2000 ஏக்கரில் புதிய நகரம் அமைக்கப்படும். நவீன வசதிகள் கொண்டதாக இந்நகரம் அமையும். சென்னையை புதிய நகருடன் இணைத்திட போக்குவரத்து, மெட்ரோ வழித்தட நீட்டிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்.
* இந்த பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.13,807 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- சென்னை, கோவை, மதுரையில் நவீன வசதிகளுடன் மாணவிகள் விடுதிகள் அமைக்கப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம் திட்டங்கள் தொடரும்.
* மகளிர் உரிமை தொகை பெறாத தகுதி பெற்ற மற்ற மகளிருக்கும் மகளிர் உரிமைத்தொகை பெற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
* மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.13,807 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* புதுமை பெண் திட்டத்திற்காக ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் மகளிர் விடியல் பயணத்திற்கு ரூ.3600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* மேலும் 10 இடங்களில் ரூ.800 கோடியில் பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதி அமைக்கப்படும்.
* சென்னை, கோவை, மதுரையில் நவீன வசதிகளுடன் மாணவிகள் விடுதிகள் அமைக்கப்படும்.
* விடுதியில் தலா 1000 மாணவியர் தங்கும் வகையில் ரூ.775 கோடியில் விடுதிகள் அமைக்கப்படும்.
* மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.37,000 கோடி வங்கிக் கடன் வழங்கப்படும்.
* 3-ம் பாலினத்தவருக்கும் ரூ.1000 உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
* சென்னைக்கு அருகே உலகத்தர வசதிகளுடன் புதிய நகரம் உருவாக்கப்படும்.
* 2000 ஏக்கரில் சென்னை அருகில் உலகத்தர வசதிகளுடன் புதிய நகரம் உருவாக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.






