என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சட்டசபையில் பேச அனுமதி கோரி 5 நாட்களாக அ.தி.மு.க. போராடி வருகிறது.
- அ.தி.மு.க. உறுப்பினர் பேச அனுமதி மறுப்பது ஏன்?
சென்னை:
சட்டசபையில் இருந்து வெளியேறிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* கள்ளச்சாராய விவகாரத்தில் உண்மை வெளி வர வேண்டும் என்பதால் கவர்னரிடம் மனு அளித்தோம்.
* சபாநாயகரை மதிக்கிறோம்... அவையில் அரசியல் பேசுகிறார் சபாநாயகர்.
* சட்டசபையில் பேச தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது.
* சட்டசபையில் பேச அனுமதி கோரி 5 நாட்களாக அ.தி.மு.க. போராடி வருகிறது.
* அ.தி.மு.க. உறுப்பினர் பேச அனுமதி மறுப்பது ஏன்?
* சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான நீதிதான்.
* வேண்டுமென்று திட்டமிட்டு அ.தி.மு.க. வெறியேறிய பிறகு பிரச்சனை குறித்து பேசுகிறார்கள்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- சட்டசபையில் அமர்ந்து பேச அ.தி.மு.க.வினருக்கு விருப்பமில்லை.
- சட்டசபை மரபு மற்றும் விதிப்படி அ.தி.மு.க.வினர் நடந்து கொள்ளவில்லை.
சென்னை:
சட்டசபை தொடங்கியதுமே இன்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் உத்தரவை அடுத்து அவை காவலர்கள் அ.தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்.
இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு,
* ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்தாலும் அ.தி.மு.க.வினர் பேச தயாராக இல்லை.
* சட்டசபையில் அமர்ந்து பேச அ.தி.மு.க.வினருக்கு விருப்பமில்லை.
* சட்டசபை மரபு மற்றும் விதிப்படி அ.தி.மு.க.வினர் நடந்து கொள்ளவில்லை.
* அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள கூடாது என்ற நோக்கத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் செயல்படுகின்றனர்.
* சட்டசபை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க. உறுப்பினர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள் என்றார்
இதனிடையே, அவை முன்னவர் துரைமுருகன் கூறுகையில், கள்ளக்குறிச்சியை பற்றி தைரியமாக சபையில் பேசி இருக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் மலிவான விளம்பரத்தை தேடுகிறார் என கூறினார்.
- கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சேர்ந்து தொகுதியில் முழுவதும் வேட்பாளர்களை சந்தித்து வாக்குகளை கேட்டு வருகின்றனர்.
- அன்னியூர் சிவாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கூறினார்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
தொகுதி முழுவதும் பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்கள் தொண்டர்களுடன் சென்று வாக்குகளை சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சேர்ந்து தொகுதியில் முழுவதும் வேட்பாளர்களை சந்தித்து வாக்குகளை கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விக்கிரவாண்டியில் நேற்று தி.மு.க.வினர் நூதனப் பிரசாரம் மேற்கொண்டனர். இதில் தி.மு.க. பேச்சாளர் சேலம் கோவிந்தன் அகத்தியர் வேடம் அணிந்து அரிச்சுவடி, கமண்டலத்துடன், காட்சி அளித்து விக்கிரவாண்டியில் வீதி, வீதியாக சென்று பாட்டுப்பாடினார். அகத்தியர் வாக்கு பொய்க்காது, பலிக்கும் எனக்கூறிய இவர், முதலமைச்சரின் நல்லாட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அன்னியூர் சிவாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கூறினார்.
நூதன முறையில் அகத்தியர் வேடமணிந்து பிரசாரம் செய்வதை அப்பகுதியில் உள்ள பெண்கள் அனைவரும் வியப்போடு பார்த்தனர்.
- வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
- கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.94.50-க்கும் கிலோவுக்கு ரூ.1000 குறைந்து பார் வெள்ளி ரூ. 94,500-க்கும் விற்பனையாகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது. நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனையானது
இந்த நிலையில், இன்றும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,280-க்கும் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,660-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.94.50-க்கும் கிலோவுக்கு ரூ.1000 குறைந்து பார் வெள்ளி ரூ. 94,500-க்கும் விற்பனையாகிறது.
- கருப்பு சட்டை அணிந்தபடி அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபைக்கு வந்தனர்.
- கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் தொடர்ந்து சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை :
தமிழக சட்டசபை வினாக்கள் விடை நேரத்துடன் தொடங்கியது. பொதுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
இதனிடையே சட்டசபை தொடங்கியதும் அவையை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க கோரி அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனை கண்டித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, பிரதான எதிர்க்கட்சி தலைவர் உட்பட உறுப்பினர்கள் அவையில் அமர வேண்டும். சட்டசபையில் கேள்விநேரம் முடிந்ததும் பேசலாம். அவைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அ.தி.மு.க. வினர் செயல்படுகின்றனர். சட்டசபையில் அமர்ந்து பேச அ.தி.மு.க.வினருக்கு விருப்பமில்லை என்றார்.
இருப்பினும், அ.தி.மு.க.வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் உத்தரவை அடுத்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை அவை காவலர்கள் வெளியேற்றி உள்ளனர்.
முன்னதாக, கருப்பு சட்டை அணிந்தபடி அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபைக்கு வருகை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் தொடர்ந்து சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
#WATCH | Chennai: AIADMK MLAs raise slogans against DMK Government over Kallakurichi Hooch Tragedy and remand resignation of CM M.K. Stalin.
— ANI (@ANI) June 26, 2024
Visuals outside the Tamil Nadu Assembly. pic.twitter.com/VYuNOD9Yuw
- தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதியுடன் முடிவடைந்தது.
- பட்டியல் வெளியான சில மணி நேரங்களில் அந்தந்த வேட்பாளர்களுக்குரிய சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி, கடந்த ஏப்ரல் மாதம் 6-ம்தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதியுடன் முடிவடைந்தது. இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக 56 வேட்பாளர்கள், 64 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நேற்று முன்தினம் வேட்புமனு பரிசீலனையின் முடிவில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று (புதன்கிழமை) கடைசி நாளாகும். எனவே வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள விருப்பமுள்ள வேட்பாளர்கள் இன்று மாலை 3 மணிக்குள் வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று யாரும் வேட்பு மனுவை வாபஸ் பெற முன்வராத நிலையில் இன்று மாலை 3 மணிக்குள் ஒன்றிரண்டு பேர் வேட்பு மனுவை வாபஸ் பெறலாம் என தெரிகிறது.
அதன்பிறகு தேர்தல் களத்தில் போட்டியிடக் கூடியவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியல் வெளியான சில மணி நேரங்களில் அந்தந்த வேட்பாளர்களுக்குரிய சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பழனி, தேர்தல் பொது பார்வையாளர் அமித்சிங் பன்சால், விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
- வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கூடலூர்:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நேற்று, இன்றும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி அறிவித்துள்ளார்.
- தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் அ.தி.மு.க., பா.ஜ.க. தனித்தனியே புகார் அளித்து இருந்தது.
- பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கள்ளச்சாராய சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என். ரவி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் அ.தி.மு.க., பா.ஜ.க. தனித்தனியே புகார் அளித்து இருந்தது.
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விஜயபாஸ்கர், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
- எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனது சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதையடுத்து, நிலமோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனால் விஜயபாஸ்கர், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த கரூர் முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனுவை நேற்று தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில், முன்ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் வடமாநிலத்திற்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி.போலீசார் வடமாநிலத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதனால் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
- வள்ளுவர் கோட்டத்தை மறுசீரமைக்கும் பணி ரூ.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
- 1,469 பணிகள் ரூ.980.31 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
சென்னை:
தமிழக சட்டசபையில் வைக்கப்பட்ட பொதுப்பணித்துறை கொள்கை விளக்க குறிப்பு புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வருமாறு:-
சிறப்பு திட்டங்கள் கீழ் சென்னை நந்தனத்தில் உள்ள எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் நவீன வசதிகளுடன் ரூ.44.50 கோடி செலவில் தரைத்தளம் மற்றும் 10 தளங்களில் 121 அறைகளுடன் 484 மாணவர்கள் தங்கும் வகையில் புதிய மாணவர் விடுதி கட்டிடம் கட்டும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. வள்ளுவர் கோட்டத்தை மறுசீரமைக்கும் பணி ரூ.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டிடம் அமைக்கும் பணி ரூ.53 கோடி மதிப்பீட்டில் விரைவில் தொடங்கப்பட உள்ளன. பள்ளி கல்வித்துறையில் மேல்நிலை மற்றும் உயர் நிலைப்பள்ளிகளில் மொத்தம் ரூ.1,644.89 கோடி மதிப்பீட்டிலான 3,864 கட்டுமான பணிகளில் ரூ.362.31 கோடி மதிப்பீட்டிலான 1,032 பணிகள் முடிவடைந்துள்ளன. 1,469 பணிகள் ரூ.980.31 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. ரூ.302.27 கோடி மதிப்பீட்டில் 1,363 பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்க்கும் விடியா திமுக அரசின் முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
- தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வலியுறுத்துகிறேன்.
முன்னாள் அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பதாவது,
பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் 33 கிலோமீட்டர்கள் செல்லும் பாலாறு, 222 கிலோமீட்டர் தமிழ்நாட்டில் பாய்ந்து, பின் கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டின் வடமாவட்டங்கள் பெரிதும் நம்பக்கூடிய நீராதாரமான பாலாற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் அனுமதியின்றி தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல.
முல்லைப் பெரியாறு, காவிரி-மேகதாது, பாலாறு என தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை மவுனியாக இருந்து தாரைவார்க்கும் விடியா திமுக அரசின் முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
பாலாற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மதிப்பளித்து தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வலியுறுத்துகிறேன்.
எப்போதும் போலவே கண்டும் காணாதாற்போல் இருந்து மாநில உரிமைகளை தாரைவார்க்காமல், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். என்று கூறியுள்ளார்.
- பல யானை வழித்தடங்கள் மறைக்கப்பட்டு கட்டடங்கள் கட்டுகிறார்கள்- காங்கிரஸ் எம்.எல்.ஏ.
- யானை வழித்தடங்களை பற்றி இன்னும் முழு அறிவு யாருக்கும் கிடையாது.- அமைச்சர் மதிவேந்தன்
தமிழக சட்டசபையில் மூத்த அமைச்சரான துரைமுருகன் ஈஷா தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும்போது சக அமைச்சரையே லேசாக கடிந்து கொண்ட சம்பவம் நடைபெற்றது. கோவையில் ஈஷா யோகா மையத்திற்கான இடமானது யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதா? என்ற கேள்வியால் இந்த சம்பவம் நடைபெற்றது.
இன்றைய சட்டமன்ற நிகழ்வின்போது,
காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மவுலானா "யானை வழித்தடங்களை பற்றி வனத்துறை அமைச்சர் பேசினார். பல யானை வழித்தடங்கள் மறைக்கப்பட்டு கட்டடங்கள் கட்டுகிறார்கள். யானைகள் கடந்து செல்லும் இடம் (Elephant Crossing) போடுவதில்லை. கோவை ஈஷா யோகாவில் யானை வழித்தடங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள்" என்றார்.
அப்போது அமைச்சர் மதிவேந்தன் "யானை வழித்தடங்களை பற்றி இன்னும் முழு அறிவு யாருக்கும் கிடையாது. குறைந்த அறிவுதான் இருக்கிறது. இதெல்லாம் தெளிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மானியத்தில் பேசுகிறேன். இதற்காக முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, யானைகள் தொடர்பான நிபுணர்களை (Elephant experts) வைத்து தீவிரமாக ஆய்வு பண்ணதுக்கு அப்புறம் மக்களின் குறைகளை கேட்டறிந்து அடுத்தடுத்த முடிவுகள் எடுக்கப்படும். அதனால் அவசரப்பட்டு எந்த ஒரு கருத்தையும் சொல்ல வேண்டாம்"
அப்போது அவை முன்னவரான துரைமுருகன் திடீரென எழுந்து சபாநாயகர் அனுமதியுடன் "யானைகள் வழித்தடத்தை பற்றி சொன்னீர்கள். ஆனால் பத்திரிகைகளில் நிறைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அரசின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் இடங்களை எல்லாம் தானாக பிடித்து கொண்டு கட்டடம் கட்டி கொண்டு யானைகள் வழித்தடத்தை தடுத்திருக்கிறார்கள். ஈஷாவில் உங்களின் அனுமதியை பெற்றுதான் கட்டடங்கள் கட்டினார்களா? யானைகள் வழித்தடத்தை பிடித்து கொண்டது உண்மையா? பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் கை வைத்திருக்கிறார்களா, இல்லையா?" அதற்கு நேரடியாக பதில் கேட்கிறார் என்றார்.
அதற்கு அமைச்சர் மதிவேந்தன் "அவர்கள் கேள்வி கேட்டிருக்கிறார். யானைகள் வழித்தடங்களை பற்றி தெளிவுபடுத்துவதற்கு தான் இந்த முயற்சி. ஈஷா விவகாரத்தில் என்னென்ன விவரங்கள் என்று தெரிந்து கொண்டுதான் சொல்ல முடியும். அதை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் சொல்கிறேன்" என்றார்.
இந்த விவாதத்தை பார்க்கும்போது சுவாரஸ்யமாக இருந்து என்று கூறப்பட்டாலும் சக அமைச்சரை கடிந்து கொண்டார் என பேசப்படுகிறது.






