என் மலர்
மணிப்பூர்
- மணிப்பூரில் இரண்டு தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகின்றன.
- தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.
அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மணிப்பூரில் இரண்டு தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகின்றன.
இதில், மணிப்பூர் மாநிலம் உள் மணிப்பூர் தொகுதியில் உள்ள தமான்போக்பி பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடியில் ஆயுதம் தாங்கிய கும்பல் சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாக்களிக்க வந்தவர்கள் சிதறி ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
- இந்தாண்டு மார்ச் 31-ம் தேதி ஈஸ்டர் ஞாயிறு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
- மணிப்பூர் மாநிலத்தில் வரும் ஈஸ்டர் ஞாயிறு அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் ஈஸ்டர் பண்டிகையை உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்தாண்டு மார்ச் 31-ம் தேதி ஈஸ்டர் ஞாயிறு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் வரும் ஈஸ்டர் ஞாயிறு அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு முடிய உள்ளதால் 30, 31 (சனி, ஞாயிறு) இரு நாட்களும் அரசு வேலை நாள் என மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் அதிகளவில் கிறிஸ்தவர்கள் வாழும் மாநிலமான மணிப்பூரில் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மணிப்பூர் பாஜக அரசின் இந்த உத்தரவிற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.
மாநில அரசின் இந்த உத்தரவு கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக அம்மாநிலத்தின் பழங்குடியின அமைப்பு தெரிவித்துள்ளது.
உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று நாகா மாணவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து, ஈஸ்டர் ஞாயிறு வேலை நாள் என்ற அறிவிப்பை மணிப்பூர் அரசு திரும்பப் பெற்றுள்ளது.
2011-ம் ஆண்டு மக்களை தொகை கணக்கெடுப்பின்படி மணிப்பூர் மாநிலத்தில் 28 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். இது அம்மாநில மக்கள் தொகையில் 40% என்பது குறிப்பிடத்தக்கது.
- 2011-ம் ஆண்டு மக்களை தொகை கணக்கெடுப்பின்படி மணிப்பூர் மாநிலத்தில் 28 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர்
- இந்தியாவில் அதிகளவில் கிறிஸ்தவர்கள் வாழும் மாநிலமான மணிப்பூரில் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் ஞாயிறு வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் வரும் ஈஸ்டர் ஞாயிறு அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு முடிய உள்ளதால் 30, 31 (சனி, ஞாயிறு) இரு நாட்களும் அரசு வேலை நாள் என மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் அதிகளவில் கிறிஸ்தவர்கள் வாழும் மாநிலமான மணிப்பூரில் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசின் இந்த உத்தரவு கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக அம்மாநிலத்தின் பழங்குடியின அமைப்பு தெரிவித்துள்ளது.
உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று நாகா மாணவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
2011-ம் ஆண்டு மக்களை தொகை கணக்கெடுப்பின்படி மணிப்பூர் மாநிலத்தில் 28 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். இது அம்மாநில மக்கள் தொகையில் 40% என்பது குறிப்பிடத்தக்கது.
- வாக்காளர்கள் அந்தந்த முகாம்களில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
- அமைதியாக தேர்தலில் பங்கேற்க வேண்டும்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உள்ள முகாம்களில் வசிக்கும் மக்கள், வரும் மக்களவை தேர்தலில் முகாம்களில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது மணிப்பூர் குறித்த கேள்விக்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம்" என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
நாங்கள் ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளோம். அதை நாங்கள் அறிவித்துள்ளோம். முகாமில் உள்ள வாக்காளர்கள் முகாமில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கிறோம்.
ஜம்மு-காஷ்மீர் புலம்பெயர்ந்தோருக்கு ஒரு திட்டம் உள்ளது போல, மணிப்பூரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
வாக்காளர்கள் அந்தந்த முகாம்களில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். கீழ் தொகுதியில் இருந்து மேல் பகுதிக்கும், உயரத்திலிருந்து தாழ்ந்த பகுதிக்கும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
வாக்காளர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், வாக்குச்சீட்டின் மூலம் முடிவு அறிவோம். அமைதியாக தேர்தலில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
- ராணுவ அதிகாரி நேற்று அவரது வீட்டிலிருந்து அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார்.
- மணிப்பூர் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினரால் ராணுவ அதிகாரி மீட்கப்பட்டார்.
இம்பால்:
மணிப்பூரில் கடந்தாண்டு மே மாதம் இனக்கலவரம் ஏற்பட்டது. இதனால் அங்கு அமைதியை ஏற்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் பயங்கரவாதிகளை எளிதில் அடையாளம் காண மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, கோன்சம் கேடா சிங் என்ற ராணுவ அதிகாரி நேற்று அவரது வீட்டிலிருந்து அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார்.
ஒடிசா மாநிலத்தில் தற்போது பணிபுரித்து வரும் இவர் விடுமுறைக்காக சொந்த ஊரான மணிப்பூருக்கு வந்துள்ளார். இவரது கடத்தல் தொடர்பாக கோன்சமின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்தக் கடத்தலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில், கொன்சம் கேடா சிங் நேற்று மாலை பத்திரமாக மீட்கப்பட்டார். மணிப்பூர் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் அவர் மீட்கப்பட்டார். கடத்தல் சம்பவம் குறித்து மணிப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே மணிப்பூரில் ராணுவ வீரர்கள், காவல் அதிகாரிகள் அல்லது அவர்களது உறவினர்கள் என யாரேனும் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- காவல்துறையினர், தங்களது துப்பாக்கி ஆயுதங்களை கீழே வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
- கடத்தப்பட்ட போலீஸ் ஏ.எஸ்.பி. மொய்ரங்தம் அமித் சிங்கையும், அவரது பாதுகாவலரையும் காவல்துறையினர் மீட்டனர்.
மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பால் பகுதியில் நேற்று ஆயுதங்களுடன் வந்த 200 பேர் கொண்ட கும்பல், போலீஸ் ஏ.எஸ்.பி. மொய்ரங்தம் அமித் சிங்கின் வீட்டை சூறையாடி, அவரையும் அவரது பாதுகாவலரை கடத்திச் சென்றுள்ளது.
இதனால் கோபமடைந்த காவல்துறையினர், இதனைக் கண்டித்து, தங்களது துப்பாக்கி ஆயுதங்களை கீழே வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
அதன் பின்னர் கடத்தப்பட்ட போலீஸ் ஏ.எஸ்.பி. மொய்ரங்தம் அமித் சிங்கையும், அவரது பாதுகாவலரையும் காவல்துறையினர் மீட்டனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பூர் போலீஸ், தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Firing incident at the residence of Addl SP, IW, Moirangthem Amit, MPS On 27th February, 2024. Armed miscreants numbering about 200 coming in vehicles stormed at the residence of the Additional Superintendent of Police, Shri Moirangthem Amit Singh, MPS, s/o Dr. M. Kulla Singh of…
— Manipur Police (@manipur_police) February 28, 2024
- 2023 மார்ச் 27-ல் மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
- மணிப்பூரில் மேய்தி இனத்தினருக்கும், குக்கி பழங்குடிக்கும் இடையே மோதல் உருவாகி பின்னர் மிகப்பெரிய கலவரம் வெடித்தது.
மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றியமைத்தது மணிப்பூர் உயர்நீதிமன்றம். இதன்படி மெய்தி இனத்தினர் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலிலேயே சேர்க்கப்படுவர்.
2023 மார்ச் 27-ல் மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு பிறகு மணிப்பூரில் மெய்தி இனத்தினருக்கும், குக்கி பழங்குடிக்கும் இடையே மோதல் உருவாகி பின்னர் மிகப்பெரிய கலவரம் வெடித்தது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, மணிப்பூர் பழங்குடியினர் சங்கம் மறு ஆய்வு செய்தது. அவ்வழக்கின் தீர்ப்பில், தனது உத்தரவை நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது.
அத்தீர்ப்பில் பழங்குடியினர் பட்டியலில் மாற்றம் செய்யவும், திருத்தவும் உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிமன்றம் சுட்டி காட்டியது.
- ஆயுதம் ஏந்திய குழுவைச் சேர்ந்தவர்களுடன் செல்பி எடுத்துள்ளார் தலைமை காவலர்.
- தலைமைக் காவலரை எஸ்.பி. சஸ்பெண்ட் செய்ததால், மீண்டும் வேலை வழங்குமாறு போராட்டம்.
மணிப்பூர் மாநிலம் சுரசந்த்பூர் மாவட்டத்தில் தலைமை காவலராக சியாம்லால்பால் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆயுதம் ஏந்திய குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றும கிராம பாதுகாப்பு தன்னார்வலர்களுடன் சேர்ந்த செல்பி எடுத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகியுள்ளது. இதுதொடர்பாக சுரசந்த்பூர் மாவட்ட எஸ்.பி., தலைமைக் காவலர் மீது ஒழுங்கை நடவடிக்கை எடுத்து அவரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இதற்கு ஆயுதம் ஏந்திய குழு மற்றும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
சுமார் 300 முதல் 400 பேர் இணைந்து போராட்டம் நடத்தியதால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் அவர்களை கலைந்த செல்ல உத்தரவிட்ட நிலையில் அவர்கள் கலைந்து செல்லாமல் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் போலீசார் வானத்தை நோக்கி சுட்டு எச்சரித்துள்ளனர்.
அப்போது போராட்டம் நடத்திய கும்பல் எஸ்.பி. அலுவலகத்திற்கு வெளியே இருந்த பேருந்துகள் மற்றும் பல்வேறு பொருட்களை தீவைத்து கொளுத்தியுள்ளனர். மேலும், கல்வீசி தாக்கல் நடத்தியுள்ளனர். போலீசார் அதற்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
இதனால் போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
குகி-சோ பழங்குடியின மக்கள், பொலீசார் தங்கள் கிராமங்களை குறிவைத்து தாக்கி வருவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர. ஆனால், போலீசார் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். மேலும், "கிராம பாதுகாப்பு தன்னார்வலர்களை" ஊக்குவிப்பதில் குகி-சோ கிளர்ச்சியாளர்கள் ஈடுபடுவதாக தெரித்துள்ளனர்.
- வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
- மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கலவரம் வெடித்தது. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து பல நாட்கள் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால், நாடு முழுக்க பரபரப்பு ஏற்பட்டது. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர அம்மாநிலத்தில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
ராணுவ கண்காணிப்பு மூலம் அம்மாநிலத்தில் நிலைமை மெல்ல சீராக துவங்கியது. எனினும், அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதுகாப்பு படையினர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த வரிசையில், இன்றும் மணிப்பூரில் தாக்குதல் சம்பவம் அரங்கேறியது. இன்றைய தாக்குதலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், ஐந்து பேர் காயமுற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கௌட்ருக் என்ற கிராமத்தில் திடீர் துப்பக்கி சூடு நடத்தப்பட்டு இருக்கிறது.
துப்பாக்கி சூட்டில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் கிராமத்தை சேர்ந்த ஒருவர் காணாமல் போனதாகவும் காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- கடந்த இரண்டு வாரங்களில் சந்தேகத்திற்குரிய கிளர்ச்சிக்குழுவால் பலர் படுகொலை.
- கூட்டத்தில் பங்கேற்க எம்.எல்.ஏ.-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இதனால் மணிப்பூரில் ஆங்காங்கே மோதல் வெடித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் பள்ளத்தாக்கைச் சேர்ந்த கிராம பாதுகாப்புக்கு குழு இன்று மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள கங்லா கோட்டையில் மிகப்பெரிய கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் நேற்று இரவு முதல் இதுவரை இல்லாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளத்தாக்கின் கிராம பாதுகாப்பு குழுவான அரம்பை டெங்கோல் (AT) என்ற குழு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.-க்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் மணிப்பூர் வன்முறையில் தலைவர்கள் நிலை என்ன? என்பது தெளிவாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களில் நான்கு மரம் வெட்டுபவர்கள், கிராம பாதுகாப்பு தன்னார்வலர்கள், இரண்டு போலீஸ் கமாண்டோஸ் ஆகியோர் சந்தேகத்திற்குரிய கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் இந்த கூட்டத்தை நடத்த முன்வந்துள்ளது.
இதனால் மத்திய அமைச்சகம் மூன்று பேர் கொண்ட சிறப்பு குழுவை மணிப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த குழு நேற்று இரவு மணிப்பூர் வந்துள்ள நிலையில் அரம்பை டெங்கோல் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
கங்லா கோட்டை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மத்திய மற்றும் மாநில பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே நாகா பழங்குடியின தலைவர்கள் உள்பட 35 எம்.எல்.ஏ.க்கள் 25 குகி கிளர்ச்சி குழுக்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளளது. எங்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால், மக்களுடன் ஆலோசித்து, அதன்படி தலைவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் சொல்லும் நடவடிக்கை, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்து பா.ஜனதா அரசை கவிழ்ப்பது எனத் தகவல் தெரிவிக்கிறது. மணிப்பூர் சட்டசபை 60 எம்.எல்.ஏ.க்களை கொண்டதாகும்.
குகி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பாதுகாப்புப்படை முழு அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தம் முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
- பாதுகாப்பு படையினர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
- பாதுகாப்பு படையினர் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
இம்பால்:
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம், இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அங்கு சில நாட்கள் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 1-ந் தேதி வனப்பகுதியில் விறகு எடுக்க சென்ற 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை நிகழ்ந்துள்ளது. மணிப்பூரின் மோரே பகுதியில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டும் வருகிறார்கள்.
இவர்களில் சிலர் இன்று அதிகாலை ஒரு கோவில் அருகே தூங்கிக்கொண்டிருந்தபோது தாக்குதல் நடந்தது. பாதுகாப்பு படையினர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார்.
உடனே பாதுகாப்பு படையினர் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் சண்டை நடந்தது. இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
- ராகுல்காந்தியின் நடை பயண தொடக்க விழாவில் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்பு.
- மணிப்பூரில் திரும்பவும் நல்லிணக்கம், அமைதியை கொண்டு வருவோம்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 'இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்' என்ற பெயரில் அவரது யாத்திரை மணிப்பூரில் இன்று தொடங்கியது.
மணிப்பூரில் உள்ள தவுபல் மாவட்ட மைதானத்தில் இருந்து யாத்திரை தொடங்கப்பட்டது. ராகுல்காந்தியின் நடை பயண தொடக்க விழாவில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், யாத்திரை பயணத்தில் தொடக்க விழாவில் ராகுல் காந்தி பேசியதாவது:-
லட்சக்கணக்கான மக்கள் இங்கே இழப்புகளை சந்தித்திருக்கிறார்கள். மணிப்பூர் மக்களின் கண்ணீரை துடைக்கவும் அவர்களுக்கு ஆறுதல் கூறவும், இன்றுவரை பிரதமர் மோடி வரவில்லை. பிரதமர், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மணிப்பூரை இந்தியாவின் ஒருபகுதியாக கருதவில்லை என நினைக்கிறேன்.
மணிப்பூர் மக்களின் வலியை நாங்கள் புரிந்துள்ளோம். உங்களது சோகமும், வலிகளும் எங்களுக்கு புரியும். மணிப்பூரில் திரும்பவும் நல்லிணக்கம், அமைதியை கொண்டு வருவோம்.
வேலைவாய்ப்பின்மை,விலைவாசி உயர்வால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






