என் மலர்
மத்தியப்பிரதேசம்
- ஷாபுரா மாவட்டம் வசந்த் குந்து காலனியில் தோட்டப்பகுதியில் பாலியல் வழக்கில் சிக்கிய வேன் டிரைவர் கிஷோர் குமார் சட்ட விரோதமாக வீடு கட்டி இருந்தார்.
- கிஷோர் குமார் வீட்டினை அதிகாரிகள் இன்று இடித்து அப்புறப்படுத்தினார்கள்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மூன்றரை வயது மாணவி எல். கே.ஜி படித்து வருகிறார். சம்பவத்தன்று இந்த சிறுமி பள்ளி வேனில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.
அப்போது வேனில் வைத்து அந்த மாணவியை டிரைவர் கிஷோர்குமார் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பெண் உதவியாளர் கண் முன் இந்த சம்பவம் அரங்கேறியது.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கிஷோர்குமார் மற்றும் பெண் உதவியாளரை கைது செய்தனர்.
இந்த நிலையில் ஷாபுரா மாவட்டம் வசந்த் குந்து காலனியில் தோட்டப்பகுதியில் பாலியல் வழக்கில் சிக்கிய வேன் டிரைவர் கிஷோர் குமார் சட்ட விரோதமாக வீடு கட்டி இருந்தார். அந்த வீட்டினை அதிகாரிகள் இன்று இடித்து அப்புறப்படுத்தினார்கள்.
- சம்பவத்தன்று சிறுமியை வேனில் இருந்து இறக்கி விட தாமதம் ஆகி உள்ளது.
- பெண் உதவியாளர் கண் முன்னே இந்த கொடூரம் நடந்திருப்பது தெரியவந்தது.
போபால்:
மத்திய பிரதேசத்தில் எல்கேஜி படிக்கும் சிறுமியிடம் வேன் டிரைவர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளர். தலைநகர் போபாலில் உள்ள தனியார் கிண்டர் கார்டன் பள்ளியில் எல்கேஜி படிக்கும் அந்த மாணவி, கடந்த வாரம் பள்ளியில் இருந்து பள்ளி வேனில் வீடு திரும்பி உள்ளார். ஆனால் சிறுமியை இறக்கி விட தாமதம் ஆகி உள்ளது. சிறுமியின் உடைகளும் மாற்றப்பட்டிருந்தன.
இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய், விசாரித்ததில் அந்த சிறுமி வேன் டிரைவரால் பாலியல் தொல்லைக்கு ஆளான அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. பள்ளி வேனுக்குள் அதுவும் பெண் உதவியாளர் கண் முன்னே இந்த கொடூரம் நடந்திருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பான புகாரின்பேரில் வேன் டிரைவர் கிஷோர் குமார் மற்றும் பெண் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- துவாரகா சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி காலமானார்.
- சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி காலமானார். அவருக்கு வயது 98.
நரசிங்பூர் மாவட்டம் ஜோதேஷ்வர் தாமில் உள்ள அவரது ஆசிரமத்தில் அவர் மறைந்தார். உயிர் பிரிந்தபோது அவரைச் சுற்றி சீடர்கள் நின்றிருந்தனர். சங்கராச்சாரியார் மறைந்த செய்தியை அறிந்தவுடன், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் ஆசிரமத்துக்கு திரண்டு வந்தனர். சங்கராச்சாரியார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
துவாரகா சங்கராச்சாரியாருக்கு வெளிநாடுகளிலும் பக்தர்கள் உள்ளனர். அவரது இறுதிச்சடங்குகள் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் என்று தெரிகிறது.
இந்நிலையில், துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த சோகமான தருணத்தில் அவரைப் பின்பற்றுவோருக்கு எனது இரங்கல்கள், ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.
- சிறுவன் அழுவதையும், தன்னை விடுவிக்கும்படி கெஞ்சுவதையும் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- பாதிக்கப்பட்ட சிறுவன் பட்டியலினத்தைச் சேர்ந்தவன் என்பதால், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு
போபால்:
மத்திய பிரதேசத்தில் பாதாம் பருப்பை திருடியதாக 11 வயது சிறுவனை, கோவில் அர்ச்சகர் மரத்தில் கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாஹர் பகுதியில் உள்ள ஜெயின் கோவிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த சிறுவன் அழுவதையும், தன்னை விடுவிக்கும்படி கெஞ்சுவதையும் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் மோதி நகர் போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினர். அப்போது, பூஜை தட்டில் இருந்த பாதாம் பருப்பை, சிறுவன் திருடியதாக அந்த அர்ச்சகர் போலீசாரிடம் கூறியுள்ளார். பின்னர் அந்த அர்ச்சகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுவன் பட்டியலினத்தைச் சேர்ந்தவன் என்பதால், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
- கர்ணி சேனா தலைவர் ராஜ்புத் கொலையில் சம்பந்தப்பட்ட 3 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
- கத்தியால் குத்தப்படும் கொடூர காட்சியை அங்கிருந்த ஒருவர் கேமராவில் பதிவு செய்துள்ளார்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் இட்டர்சி நகரத்தில் கர்ணி சேனா தலைவர் பொதுமக்கள் முன்னிலையில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
கர்ணி சேனா அமைப்பின் நகர செயலாளரான ரோகித் சிங் ராஜ்புத், வெள்ளிக்கிழமை இரவு நகராட்சி அலுவலகத்தின் முன்பு உள்ள டீக்கடை அருகே தனது நண்பர் சச்சின் பட்டேலுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவர்களிடம் தகராறு செய்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் பைக்கில் வந்த நபர்களில் ஒருவன் கத்தியை எடுத்து ரோகித் சிங் ராஜ்புத்தை சரமாரியாக குத்தினான். தடுக்க முயன்ற நண்பருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய ராஜ்புத் உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த கொலையில் சம்பந்தப்பட்ட ராகுல் ராஜ்புத், அன்கிட் பட், ஐஷூ மால்வியா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜ்புத் கத்தியால் குத்தப்படும் கொடூர காட்சியை தொலைவில் நின்றிருந்த ஒருவர் கேமராவில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- குழந்தையின் இந்த உடல் பாகங்களை ஒரு துணியில் சுற்றி கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பல கோணங்களில் விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபால்பூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அருகில் உள்ள மார்க்கெட்டில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் தலை மற்றும் கை பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் இந்த உடல் பாகங்களை ஒரு துணியில் சுற்றி கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். குழந்தையின் உடல் பாகங்களை அம்மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர் ஒருவர் கண்டு போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல் பாகங்களை மீட்டு பிணவறையில் வைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் குழந்தையின் மற்ற உடல் பாகங்களை தேடிக் கொண்டிருப்பதாக நகர காவல் கண்கானிப்பாளர் துஷார் சிங் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பல கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.
- கிராமத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் இருந்த சுகாதார மையத்தில் டாக்டரோ, நர்சுகளோ இல்லை.
- மாவட்ட சுகாதார அதிகாரிகள், இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
தேமா :
மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்தின் ரானே கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக '108' ஆம்புலன்சுக்கு கணவர் போன் செய்தார்.
ஆனால் 2 மணி நேரமாக ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் தவித்த அவர், தனது மனைவியை தள்ளுவண்டியில் கிடத்தி அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றார். அவரது கிராமத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் இருந்த அந்த மையத்தில் டாக்டரோ, நர்சுகளோ இல்லை. பின்னர் அரசு ஆம்புலன்ஸ் ஒன்றில் அங்கிருந்து ஹட்டாவுக்கு தனது மனைவியை அழைத்து சென்றார்.
அங்குள்ள ஆஸ்பத்திரியிலும் சரியான சிகிச்சை கிடைக்காததால், பின்னர் தமோ மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு கர்ப்பிணி மாற்றப்பட்டார். அங்கு அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையே கர்ப்பிணி ஒருவரை அவரது கணவர் தள்ளுவண்டியில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதைப்பார்த்த மாவட்ட சுகாதார அதிகாரிகள், இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
- காங்கிரஸ் உள்கட்சி நிலைமை தெளிவாக வெளியே தெரிகிறது.
- காங்கிரசுடனான 50 ஆண்டுகால தொடர்பை முடித்துக் கொண்டுள்ளார்.
குவாலியர்:
காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா விமானப் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று அவர் பார்வையிட்டார். முன்னதாக அவரிடம் குலாம்நபி ஆசாத் காங்கிரசில் இருந்து விலகியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
அதற்கு பதில் அளித்த அவர், காங்கிரசில் உள்கட்சி நிலைமை பல ஆண்டுகளாக தெளிவாக வெளியே தெரிகிறது என்றார். மூத்த தலைவரான ஆசாத், காங்கிரசுடனான தனது 50 ஆண்டு கால தொடர்பை முடித்துக் கொண்டு அதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
- ஆற்றில் திடீரென ஏற்பட்ட பலத்த நீரோட்டம் காரணமாக மூன்று பேரும் அடித்துச் சென்றனர்.
- அற்றில் அடித்துச் செல்லப்பட்ட 12 வயது சிறுவவை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உமரியா மாவட்டத்தில் 6 நாட்களுக்கு முன்பு மகாநதி ஆற்றில் போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட மூன்று பேர் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஆற்றில் ஏற்பட்ட பலத்த நீரோட்டம் காரணமாக மூன்று பேரும் அடித்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு படையினரின் உதவியுடன் ஒருவரை பத்திரமாக மீட்டனர்.
மேலும் அடித்துச் செல்லப்பட்ட இருவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், போலீஸ் கான்ஸ்டபிள் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மகாநதி ஆற்றின் அருகே, 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டில் கான்ஸ்டபிளின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்ததில், சடலமாக மீட்கப்பட்ட கான்ஸ்டபிள் பெயர் ப்ரிடாம பைகா (23) எனவும், அவருடன் அற்றில் அடித்துச் செல்லப்பட்ட 12 வயது சிறுவனை தேடி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
- ஆறுகள் அல்லது மலைகளால் மட்டுமே ஒரு நாடு சிறந்த நாடாக மாறாது.
- புதிய தேசிய கல்விக் கொள்கை இந்தியாவை சிறந்த தேசமாக மாற்றும்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது:
தேசிய கல்விக் கொள்கை, பொதுமக்களின் ஆசைகளை பிரதிபலிக்கிறது. இதற்கு முந்தைய கல்விக் கொள்கை ஒரு மாணவரை வெற்றிகரமான நிபுணராக மாற்ற வடிவமைக்கப்பட்டது. ஆனால் புதிய கல்விக் கொள்கை ஒரு மாணவனை சிறந்த மனிதனாக மாற்றுவது மட்டுமல்லாமல், இந்தியாவை சிறந்த தேசமாக மாற்றும்.
ஒரு நாடு ஆறுகள் அல்லது மலைகளால் மட்டுமே சிறந்த நாடாக மாறாது, சிறந்த நிலையை அடைய சிறந்த ஆளுமைகள் தேவை. தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் ஆன்மாவை பிரதிபலிக்கும். ஆங்கிலத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதன் மூலம், ஆங்கிலேயர்கள் இந்தியர்களிடையே தாழ்வு மனப்பான்மையை வளர்த்து, தங்கள் காலனித்துவ ஆட்சியை நீட்டிக்க முயன்றனர். புதிய கல்விக் கொள்கையில் இந்திய கலைகள், கலாச்சாரம், தாய்மொழி ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களையும் நிச்சயம் இது ஈர்க்கும்.
கல்வித் துறையுடன் தொடர்புடைய அனைவரும் தேசிய கல்விக் கொள்கை குறித்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நுரையீரல் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- ஆக்சிஜன் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
போபால்
மத்திய பிரதேச மாநில கவர்னர் மங்குபாய் படேலுக்கு 3 நாட்களாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. காய்ச்சல், இருமல் ஆகியவற்றாலும் அவதிப்பட்டார். அதையடுத்து அவர் போபால் நகரில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆக்சிஜன் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கவர்னரின் பணிகள் 4 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- லாலுபிரசாத் யாதவ் கட்சியுடன், ஐக்கிய ஜனதாதளம் இணைந்து விடும் என தகவல்.
- கட்சி மூத்த நிர்வாகியின் கணிப்பை நிராகரித்தார் நிதிஷ்குமார்
இந்தூர்:
பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியே ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார், லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியுடன் மெகா கூட்டணி அமைத்ததுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அவரது இந்த நடவடிக்கையை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. மத்திய பிரதே மாநிலம் இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா, நிஷ்குமாரை வெளிநாட்டு பெண்களுடன் ஒப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தாம் வெளிநாட்டில் பயணம் மேற் கொண்டிருந்த போது அங்குள்ள பெண்கள் தங்களது காதலர்களை அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள் என ஒருவர் கூறினார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் அப்படித்தான். அவர் யாருடைய கையை பிடிக்கிறார், யாருடைய கையை விலக்குகிறார் என்பது அவருக்கே தெரியாது. இவ்வாறு கைலாஷ் விஜயவர்கியா தெரிவித்துள்ளார்.
இதனிடையே எதிர்காலத்தில் லாலுபிரசாத் யாதவ் கட்சியுடன், ஐக்கிய ஜனதாதளம் இணைந்து விடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர்.பி.சிங், தெரிவித்திருந்தார். இது குறித்து நிதிஷ்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவரது கணிப்பை நிராகரிப்பதாக கூறினார்.






