என் மலர்
மத்தியப்பிரதேசம்
- முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 227 ரன்கள் குவித்தது.
- இந்தியா தரப்பில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 46 ரன்கள் அடித்தார்.
இந்தூர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். தொடக்க வீரர் குயின்டன் டி காக் 42 பந்துகளில் 4 சிக்சர்கள் உள்பட 68 ரன்கள் அடித்தார். கேப்டன் பாவுமா 3 ரன்னுடன் வெளியேற, மற்றொரு வீரர் ரிலீ ரோசோவ் 48 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 8 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டர்கள் அடங்கும்.
மற்றொரு வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களம் இறங்கிய டேவிட் மில்லர் ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 228 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி 18.3 ஓவர் முடிவில் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 46 ரன்கள் அடித்தார். ரிஷப் பண்ட் 27 ரன்னும், ஹர்சல் படேல் 17 ரன்னும், தீபக் சாகர் 31 ரன்னும் அடித்தனர். உமேஷ் யாதவ் 20 ரன் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- தென் ஆப்பிரிக்க வீரர் ரிலீ ரோசோவ் 48 பந்துகளில் சதம் அடித்தார்.
- குயின்டன் டி காக் 68 ரன்கள் எடுத்தார்.
இந்தூர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். தொடக்க வீரர் குயின்டன் டி காக் 42 பந்துகளில் 4 சிக்சர்கள் உள்பட 68 ரன்கள் அடித்தார். கேப்டன் பாவுமா 3 ரன்னுடன் வெளியேற, மற்றொரு வீரர் ரிலீ ரோசோவ் 48 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 8 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டர்கள் அடங்கும். மற்றொரு வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களம் இறங்கிய டேவிட் மில்லர் ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 228 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கி விளையாட உள்ளது.
- இன்றைய போட்டியில் கோலி, ராகுல், ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
- ஓயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய வீரர்கள் களம் இறங்குவார்கள் என எதிர்பார்ப்பு
இந்தூர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் கோலி, ராகுல், ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு பதிலாக ஷ்ரேயஸ் ஐயர், உமேஷ் யாதவ் மற்றும் சிராஜ் விளையாடுகின்றனர். இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணியை ஓயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய வீரர்கள் களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- முதல் இரு ஆட்டங்களில் வரிசையாக தோற்ற தென்ஆப்பிரிக்கா இந்தியாவிடம் தொடரை இழந்துவிட்டது.
- இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி இந்தூரில் இன்று நடைபெற உள்ளது.
இந்தூர்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் வரிசையாக தோற்ற தென்ஆப்பிரிக்கா தொடரையும் இழந்து விட்டது.
இந்நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி 20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 106 ரன்களில் சுருட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்த இந்தியா, 2-வது ஆட்டத்தில் 237 ரன்கள் குவித்த போதிலும் போராடி தான் வெற்றிபெற முடிந்தது. டேவிட் மில்லரின் தடாலடியான சதத்தால் தென்ஆப்பிரிக்கா 221 ரன்கள் வரை நெருங்கி வந்து அச்சுறுத்தியது. இந்தியாவின் இறுதிக்கட்ட பந்து வீச்சு சொதப்பலாக இருந்தது.
தொடரை வென்று விட்டதால் இனி கடைசி ஆட்டத்தில் நெருக்கடி இல்லை. ஒரு சில மாற்றங்களை செய்ய இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி துணை கேப்டன் லோகேஷ் ராகுல், முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரேயாஸ் அய்யர், ஆல்-ரவுண்டர் ஷபாஸ் அகமது ஆகியோருக்கு களம் காண வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
சூப்பர் பார்மில் உள்ள சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்திலும் ஜொலிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
டி20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன் இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச டி20 போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே வெற்றியுடன் தொடரை நிறைவு செய்வதில் இந்திய வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள்.
தென்ஆப்பிரிக்கவை எடுத்துக் கொண்டால் கடந்த ஆட்டத்தில் டேவிட் மில்லர், குயின்டான் டி காக் ஆகியோர் பேட்டிங்கில் கலக்கினர். ஆனால் கேப்டன் பவுமாவின் பேட்டிங் தான் மெச்சும்படி இல்லை. பந்து வீச்சாளர்கள் ரபடா, அன்ரிச் நோர்ஜியா ஆகியோரும் பார்முக்கு திரும்ப வேண்டிய அழுத்தத்தில் உள்ளனர். ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்கும் அவர்களுக்கும் இதுதான் உலக கோப்பை போட்டிக்கு முந்தைய கடைசி டி20 போட்டியாகும்.
- நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
- தொடர்ந்து 6-வது முறையாக இந்தூர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.
போபால்:
தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களைக் கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வச் சர்வேக்ஷான் என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், 2022-ம் ஆண்டுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த 5 முறை தூய்மை நகரங்களில் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தூர் தொடர்ந்து 6-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.
இந்தூருக்கு அடுத்தபடியாக தூய்மையான நகரங்கள் பட்டியலில் குஜராத்தின் சூரத் 2-வது இடத்தையும், மகாராஷ்டிராவின் நவி மும்பை 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.
- கச்சாஹ்ரி சௌக் பகுதியில் தொழிலாளர்கள், அருகில் உள்ள நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
- இந்த சம்பவத்திற்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள குக்ஷி நகரில் பழமையான வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
கச்சாஹ்ரி சௌக் பகுதியில் தொழிலாளர்கள், அருகில் உள்ள நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து காவல்துறையின் துணைப் பிரிவு அதிகாரி திலிப் சிங் பில்வால் கூறுகையில், "மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் பர்வானியில் உள்ள மருத்துவமனையில் இறந்தார். பலியானவர்கள் கோவிந்த் (32), ரூப் சிங் (35), ராகேஷ் (30), மற்றும் தேர் சிங் (40) என அடையாளம் காணப்பட்டனர்" என்றார்.
இந்த சம்பவத்திற்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.
- நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஷாதால்:
மத்திய பிரதேச மாநிலம் ஷாதால் மாவட்டத்தில் பழங்குடியினர் விவகாரத்துறை சார்பில் நடத்தப்படும் அரசு துவக்கப் பள்ளியில், 5ஆம் வகுப்பு மாணவியின் சட்டையை ஆசிரியர் கழற்ற வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அழுக்கு படிந்த சீருடை அணிந்து வந்த அந்த மாணவியின் ஆடைகளை, சக மாணவிகள் முன்னிலையில் கழற்ற வைத்ததுடன், அதை துவைக்கவும் வைத்துள்ளார் ஆசிரியர்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இதைப் பார்த்த கிராம மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவி ஆடையை கழற்றி துவக்கும்போது எடுத்த புகைப்படங்களை, பழங்குடியினர் விவகாரங்கள் துறையின் வாட்ஸ்அப் குரூப்பில் அந்த ஆசிரியரே பகிர்ந்துள்ளார். அதில் தன்னை தூய்மை தன்னார்வலர் என்று குறிப்பிட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
- பள்ளி வளாகத்தில் இருந்த கழிவறை மிக மோசமான நிலையில் அசுத்தமாக இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
- ஜனார்த்தன மிஸ்ரா எம்.பி. கடந்த 2018- ம் ஆண்டும் இதேபோல் கழிவறையை சுத்தம் செய்தார்.
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் காட்காரி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. இதில் பாரதிய ஜனதா எம்.பி. ஜனார்த்தன மிஸ்ரா கலந்து கொண்டார். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த கழிவறை மிக மோசமான நிலையில் அசுத்தமாக இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே சிறிதும் தாமதிக்காமல் ஒரு வாளியில் தண்ணீரை எடுத்து வந்து வெறும் கையால் கழிவறையை சுத்தம் செய்தார்.
எந்தவித உபகரணமும் இல்லாமல் அவர் கழிவறையை சுத்தப்படுத்தியது அங்குள்ளவர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த காட்சிகளை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜனார்த்தன மிஸ்ரா எம்.பி. கடந்த 2018- ம் ஆண்டும் இதேபோல் கழிவறையை சுத்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஷியோபூரில் உள்ள கரஹாலில் சுய உதவிக் குழுக்களின் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
- கடினமாக உழைக்கும் லட்சக்கணக்கான தாய்மார்கள் இன்று இங்கு என்னை ஆசீர்வதிக்கிறார்கள்.
மத்திய பிரதேசம் மாநிலம் ஷியோபூர் பகுதியில் இன்று சுய உதவிக் குழுக்கள் மாநாடு நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி மற்றும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இதற்கு முன்பாக, ஷியோபூரில் உள்ள கரஹாலில் சுய உதவிக் குழுக்களின் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நமீபியாவில் இருந்து இந்தியா வந்துள்ள எட்டு சிறுத்தைகள் நம் விருந்தினர்கள். அவர்களைக் கைதட்டி அன்புடன் வரவேற்குமாறு உங்கள் அனைவரையும், அனைத்து நாட்டு மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
என் பிறந்த நாளில், நான் என் அம்மாவிடம் சென்று, அவரது பாதங்களைத் தொட்டு ஆசி பெறுவது வழக்கமாக கொண்டிருந்தேன். இன்று என்னால் அவரிடம் செல்ல முடியவில்லை. ஆனால் பழங்குடியினர் பகுதிகளிலும் கிராமங்களிலும் கடினமாக உழைக்கும் லட்சக்கணக்கான தாய்மார்கள் இன்று இங்கு என்னை ஆசீர்வதிக்கிறார்கள்.
கடந்த நூற்றாண்டின் இந்தியாவிற்கும் இந்த நூற்றாண்டின் புதிய இந்தியாவிற்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் நமது பெண்களின் சக்தி பிரதிநிதித்துவமாக இருப்பது. இன்றைய புதிய இந்தியாவில் பஞ்சாயத்து பவனில் இருந்து ராஷ்டிரபதி பவன் வரை பெண் சக்தியின் கொடி பறக்கிறது.
கடந்த 8 ஆண்டுகளில், சுய உதவிக் குழுக்களை மேம்படுத்துவதற்கு எல்லா வகையிலும் உதவி செய்துள்ளோம். இன்று நாடு முழுவதும் 8 கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்தப் பிரச்சாரத்தில் இணைந்துள்ளனர். இந்த பிரச்சாரத்தில் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிலிருந்து குறைந்தபட்சம் ஒரு சகோதரியாவது இருக்க வேண்டும் என்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
கிராமப் பொருளாதாரத்தில் பெண் தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க எங்கள் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு' மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் உள்ளூர் தயாரிப்புகளை பெரிய சந்தைகளுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆப்பிரிக்கா நாடான நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வர ஒப்பந்தம் போடப்பட்டது.
- இந்தியாவில் இருந்து நமீபியாவுக்கு சென்ற சிறப்பு விமானத்தில் சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டது.
உலகின் அரிய வகை விலங்குகளில் சிறுத்தையும் ஒன்று. இந்தியாவை அக்பர் ஆட்சி செய்தபோது இங்கு 1000- க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு இந்த சிறுத்தை இனம் கொஞ்சம், கொஞ்சமாக அழிய தொடங்கியது.
1948-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்த கடைசி சிறுத்தையும் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்பு இந்தியாவில் சிறுத்தை இனமே இல்லை என கூறப்பட்டது.
இந்த நிலையில் ஆப்பிரிக்கா நாடான நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வர ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி இந்தியாவில் இருந்து நமீபியாவுக்கு சென்ற சிறப்பு விமானத்தில் சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டது.
இந்த சிறுத்தைகளை மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி விடுவித்தார். பின்னர் அந்த சிறுத்தைகளை கேமராவிலும் படம்பிடித்தார்.
நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட சிறுத்தைகள் மற்ற விலங்குகளை காட்டிலும் விசேஷ குணங்களை கொண்டது. இந்த சிறுத்தைகள் பறவைகள் போல ஒலி எழுப்பும். சிங்கம் போல் கர்ஜனை செய்வதில்லை. கூரிய பார்வை திறன் கொண்டது. இதன் கால்கள் மெலிந்து நீண்டு காணப்படும். குறைந்தது 72 கிலோ எடையுடையதாக இருக்கும்.
ஒன்றரை மீட்டர் உயரம் கொண்டதாகவும், நீளமான வாலுடனும் இருக்கும். மான் மட்டுமே இதன் விருப்ப உணவாகும். அடுத்து முயல் மற்றும் பறவைகளையும் வேட்டையாடும்.
மான்களை கண்டால் அதனை துரத்தி பிடிக்க ஓடும் வேகம் மனிதனின் ஓடும் வேகத்தை விட அதிகமாகும். அதாவது சிறுத்தை ஓட தொடங்கிய 3 வினாடிகளில் அதன் வேகம் சுமார் 97 கிலோ மீட்டராக இருக்கும். அதிகபட்சமாக மணிக்கு 113 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும். இதுவே ஒரு மனிதன் ஓட தொடங்கினால் அவனது வேகம் மணிக்கு 43.99 கிலோ மீட்டர்தான்.
சிறுத்தை பூனை இனத்தை சேர்ந்ததாகும். அதாவது காட்டு பூனையின் பரிணாம வளர்ச்சியே சிறுத்தை என்று கூறப்படுகிறது.
ஆப்பிரிக்காவிலும், ஈரான் நாட்டிலும் இத்தகைய சிறுத்தைகள் அதிக அளவில் காணப்படுகிறது. ஆப்பிரிக்காவில் 8 ஆயிம் சிறுத்தைகளும், ஆசியாவில் 50-க்கும் கீழான சிறுத்தைகளும் உள்ளதாக கூறப்படுகிறது.
- இந்திய காடுகளில் மீண்டும் சிறுத்தைகளை வாழவைக்கும் முயற்சியாக 5 பெண் சீட்டாக்கள், 3 ஆண் சீட்டாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
- சீட்டா வகை சிறுத்தைகள் மேலும் பழகுவதற்காக பெரிய கூண்டில் அடைக்கப்படுகிறது.
தென்மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியா நாட்டில் இருந்து இன்று 8 சீட்டா வகை சிறுத்தைகள் சரக்கு விமானத்தின் மூலம் மத்திய பிரதேசத்தின் குவாலியர் கொண்டு வரப்பட்டன.
இந்த சிறுத்தைகளை பிரதமர் மோடி தனது பிறந்தநாளையொட்டி குனோ தேசிய பூங்காவில் விடுவிக்க உள்ளார். இதற்காக அவர் இன்று மத்திய பிரதேசம் வருகிறார்.
இந்திய காடுகளில் மீண்டும் சிறுத்தைகளை வாழவைக்கும் முயற்சியாக 5 பெண் சீட்டாக்கள், 3 ஆண் சீட்டாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும், குனோ தேசிய பூங்காவில் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட தனிமையான குடில் போன்ற வீட்டில் சீட்டா வகை சிறுத்தைகள் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் பிறகு, சீட்டா வகை சிறுத்தைகள் மேலும் பழகுவதற்காக பெரிய கூண்டில் அடைக்கப்படுகிறது.
- தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் பணிபுரியும்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மத்தியப் பிரதேசம் உஜ்ஜயின் மாவட்டத்தில் உள்ள அவல் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
உஜ்ஜயினியில் உள்ள நாக்ஜிரி தொழிற்பேட்டை பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாகவும், தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் பணிபுரியும்போது தீ விபத்து ஏற்பட்டதாகவும் உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், " தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இறந்தவர்கள் துர்கா (45), ஜோதி பாய் (25) மற்றும் சம்மா பாலிவால் (45) என அடையாளம் காணப்பட்டனர். ஒரு பெண் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்," என்று அவர் கூறினார்.






